இன்று இவரைப் பற்றி…மதுரை..திரு அன்பானந்தம். ..
திரு சிவ. அன்பானந்தம் என்ற சன்மார்க்க அன்பர், மதுரையில். மீனாக்ஷி அம்மன் கோவில் செல்லும் வழியில், சன்மார்க்க சங்கம் நடத்தி வருகின்றார். இடம் – 21, கீழ வடம்போக்கித் தெரு, மதுரை.1
தினசரி அன்னமளிப்புப் பணிகள், தக்க நபர்களைக் கொண்டு தினசரி யோகா, திரு அருட்பா அகவல் பாராயணம், தியானம் முதலானவை, மேற்காணும் இடத்தில் நடைபெற்று வருகின்றன.
திரு சிவ அன்பானந்தம், சுமார் 55 வயதினர். சுத்த சன்மார்க்க கல்வியில் தீவிரமாக நாட்டம் கொண்டவர். கடந்த 9 ஆண்டுகளாக, இப் பணியினைத் தொடர்ந்து நிறைவேற்றி, வள்ளல் பெருமானின் அருளுக்குப் பாத்திரமாகி வருகின்றார்.
இன்று இவரைப் பற்றி .. மதுரை திரு சிவ. அன்பானந்தம் .. .. ..
Write a comment