DAEIOU - தயவு
தாயுமானாராக .. திரு ஜோதிமுருகன் அய்ய.

தாயுமானார் - திரு ஜோதிமுருகன்.
ராமநாதபுரத்திலே சன்மார்க்க சங்கம் துவக்கி, அதன் கிளைகளை ராமேஸ்வரம், ஆத்தாங்கரை, உத்திரகோசமங்கை, வடலூர், அழகங்குளம் முதலான 7 இடங்களில் உருவாக்கி, தென் தமிழ் நாட்டிலே சன்மார்க்கம் பரவுவதற்கு ஆரம்ப கர்த்தாவாகத் திகழ்ந்தவர் திரு ஜோதிமுருகன் அய்யா அவர்கள். 30 ஆண்டுகள் அவர், சன்மார்க்கத்தை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமே பரப்புவதற்கு மிகவும் பாடுபட்டார். அவருடைய பணி அனைத்து சன்மார்க்க சான்றோர்களாலும் மிகவும் போற்றப்பட்டது.
பள்ளிச் சிறார்கள் ஒருபுறம். உறவினர் இருந்தும் ஆதரவற்றோராக சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஒவ்வொரு கிளையிலும் இடம் தந்து, அவர்களின் நலனுக்காக அரும்பாடு பட்டவர்.
தமது வாழ்நாளில், சன்மார்க்க சங்கங்கள் பல்வேறு இடங்களில் துவங்குவதற்கும் அவர் காரணமாயிருந்தார்.
அவர் ஜனவரி 2007ல் இப் பூவுலக வாழ்வினைத் துறந்தார்.
ஒருமுறை அவரிடம் அனாதரவானவர் என அழைத்து வரப்பட்ட ஒரு பெண், கர்ப்பிணியாக வந்து சேர்ந்தார். ராமநாதபுரத்திலே உள்ள சங்கத்தில் அவரைத் தங்க வைத்தார்.
திடீரென ஒரு நாள் இரவு, அவருக்கு பிரசவ வேதனை துவங்கியது. சோதனைக்கென்று, அன்று, அந்த சங்கத்தில் பணியில், (duty) பெண்டிர் ஒருவரும் இல்லை. இந்தத் தகவல் வந்ததுமே, உடனடியாக, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி, அங்கு தங்கிப் பயிலும் மாணாக்கர்களிடம் பணித்தார். .. ஆயிற்று .. .. அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உறவினர் யாரும் வரவில்லை.
..
பிரசவ வேதனையால் துடித்த அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கிருபையினாலும், திருவருட் பிரகாச வள்ளற் பெருமானின் ஆசியினாலும், அழகான ஒரு மகவினைப் பெற்றெடுத்தார். ஒருவரும் உதவிக்கு இல்லாத நிலையில், அந்த பெண்ணுக்கு, ஜோதிமுருகன் அய்யாவே ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து, நேரடியாக, பிரசவம் பார்க்கும்போது உடனிருந்து பார்க்கும் நிலை ஏற்பட்டது.
அப்போதுதான் அவர் சொல்லுவார்.
இந்த மனித குலத்துக்கு ஆன உதவிகள் எல்லாவற்றையும் செய்ய வைத்த ஆண்டவர், இதுவரை பிரசவம் பார்க்கும் பணி மட்டும் எனக்குத் தரவில்லை. அந்த ஒரு பணியிலும் என்னை தற்போது ஈடுபட வைத்து விட்டார். என்னே ஆண்டவரின் பேரருட் பெருங்கருணை என அவர் வியந்தார்.
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வமாக .. .. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
தாயுமானவராக அந்த நிகழ்ச்சியில் நின்று துணை புரிந்தவர் திரு ஜோதிமுருகன் அய்யா .. .. .. ..
தாயுமானாராக .. திரு ஜோதிமுருகன் அய்ய.

தாயுமானாராக .. திரு ஜோதிமுருகன் அய்ய.

2 Comments
P Sujatha
KarnaiMigu Ramanujam Avl,
Thank u for Information about Thiru.JothiMuruganAvl.
KarunaiMigu JothiMurugan Ayya,
U r very good service. I am very appreciate ur Helping Power.Ellam Vallalar Arul.oru Lalla sanmarga child world-la varuvatharku karpini Womanuku help saithu irukirigal. u r a good MOTHER to Karpini Mother.You r a great person.
With Vallalar Loving,
ArulJothiSujatha.
Sunday, May 3, 2009 at 22:14 pm by P Sujatha
P Sujatha
KarunaiMigu JothiMurugan Ayya,
U r doing very good service. Sorry for my Mistake in Previous message. Doing word is miss.
Sunday, May 3, 2009 at 22:21 pm by P Sujatha