1.5.2009 முதல் 10.5.2009 வரை மாணவச் செல்வங்களுக்கான
வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம்.
இடம்: அனைத்துலக சர்வ சமய சன்மார்க்க அற நிலையம்,
248, கார்த்திகை தீபம் ரோடு, சித்தி வளாக நகர், பரம்புப்பட்டி, பெருங்குடி,
மதுரை 625 029.
வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்க தனி நெறிக் கொள்கையை மாணவ, மாணவியரிடையே பரப்புவதற்கான முகாம் 10 நாட்கள் நடத்தப் படுகின்றது.
தினமும் காலை 11முதல் 12 மணி வரையிலும் மற்றும் மாலை 3 முதல் 4 மணி வரையிலும் இப் பயிற்சி நடத்தப் படும்.
மருத்துவர்கள், சன்மார்க்க சான்றோர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் முதலானோரைக் கொண்டு, இந்த வாழ்வியல் பயிற்சி முகாமின்போது தனி நெறிக் கொள்கையினை விளக்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்கும் இடம் அனைத்தும் இலவசம்.
சன்மார்க்க அன்பர்கள், 11 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட தமது குழந்தைகளை, இப் பயிற்சியில் பங்கேற்கச் செய்து அருள் நலம் பெற ஆவன செய்யும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
19.4.2009-ந் தேதி வரை அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப் பட்டிருந்தாலும், சன்மார்க்க அன்பர்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
அருள் அறக் கட்டளை,
4, சாமி ஆசாரி சந்து, சின்னக் கடை வீதி, தெற்கு வாசல், மதுரை.1
தொடர்பு செல் எண்கள்
98941 14252, 97913 09341, 94437 20649.
Write a comment