மதுரை அருட்பா ரெங்கநாதனின் மகன் வாழ்வில் வள்ளற் பெருமான் நிகழ்த்திய சம்பவம்.
மதுரையில் திரு அருட்பாவினைப் பாடுவதற்கென்றே பல அன்பர்கள் உள்ளனர். அவர்களில், மிகவும் பிரபலமானவர், அருட்பா ரெங்கநாதன். இவர், ரயில்வேயில் வெல்டர், மற்றும் எம்.சி.எம். ஆக பணி புரிந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சன்மார்க்க வழியில் தனது வாழ்க்கையினை நடத்திக் கொண்டிருக்கிறார்.
1992ஆம் ஆண்டிலேயே பணி ஓய்வு பெற்று, அதற்குப் பின் தற்போது திரு அருட்பா பாடல்களை இசையுடன் பாடுவதிலும், இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் வாராந்திர மற்றும் மாத பூச நாட்களிலும் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் போதித்துச் சென்ற சுத்த சன்மார்க்க நெறியினை, அன்பர்களிடம் பரப்புவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவரது மனைவியார் பெயர் திருமதி சரஸ்வதி. இவருடன் மதுரை நகரைச் சேர்ந்த அன்பர் திரு தாயுமானவர் (வயது சுமார் 75) தன்னை இதே பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
அருட்பா ரெங்கநாதனுக்கு, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் ‘ ‘அருட்பா மணி’ என சிறப்புப் பட்டமும் வழங்கி உள்ளார்கள்.
இவரது மகன் பெயர் விவேகானந்தன் (வயது 34). மருமகள் பெயர் தேவகி. ஒரு ஆண் குழந்தை உண்டு. பெயர் முகுந்தன். ஸ்கெளட்டில் டில்லி சென்று ஜனாதிபதி அவார்டு வாங்கியவர்.
திரு விவேகானந்தனுக்கு சமீபத்தில்தான் ரயில்வேயில் வேலை கிடைத்தது. அவர் கேரள மாநிலம் கொல்லத்தில் 40 நாட்கள் பயிற்சி எடுத்து முடித்தார். கேரள மாநிலம் பொன்னு ஊரணி மார்ஷல் யார்டு அருகில் உள்ள லெவல் கிராசிங்கில் பணி ஏற்றார்.
அவர் பணி ஏற்ற நாளன்று, பகலில், சபரி எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. ஒரு 12 வயதுச் சிறுவன் ரயில்வே டிராக்கில் மாட்டியிருக்கின்ற தனது சைக்கிளை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை அவர் கண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் திரு விவேகானந்தன், அந்த சிறுவனின் உயிரைக்காப்பாற்ற எண்ணி, பாய்ந்து சென்று, அந்தச் சிறுவனை ஒரு கையில் தூக்கி எடுத்து, பாலத்திற்கு வெளியில் குதித்தார். தலைதூக்கினால் மோதும் விதத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்வே பெட்டிகளுடைய பயங்கரமான சத்தம் அந்தப் பக்கத்தில் முழங்கியதையும் பொருட்படுத்தாமல், தனது கைகளால் பலமாக பிடித்து, அந்தச் சிறுவனுக்கு புனர் ஜென்மம் கொடுத்தார். அந்த சிறுவனுடைய பெயர் ப்ரவின் ஜெயின். அச் சிறுவனுடைய சைக்கிள், ரயிலால் தூரத்தில் தூக்கி எறியப்பட்டு விட்டது. இந்த விபத்தில் திரு விவேகானந்தனுடைய இடது கை ஒடிந்துபோய் விட்டது. அவர், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து திரு விவேகானந்தன் கூறியதாவது.
“எனது தகப்பனார் பெயர் அருட்பா ரெங்கநாதன். வள்ளலாரின் கொள்கைகளில் எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் தீவிர ஈடுபாடு உண்டு.
ரயில்வே துறையில் எனக்கு செலக்ஷன் ஆயிற்று. கொல்லத்தில் 40 நாட்கள் பயிற்சிக்குப் பின், முதல் போஸ்டிங். முதல் நாள் மதியம் 12 மணியளவில் திருப்புனிதரை பகுதிக்கு ஒரு குட்ஸ் ட்ரெயின் போனது. அதே நேரத்தில் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்திற்குச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ட்ரெயின் வேகமாக வந்து கொண்டிருந்தது. லெவல் கிராஸூம் அடைக்கப் பட்டிருந்தது. குட்ஸ் ட்ரெயின் போனதும், பொன்னூரணி செந்த்ரித்தாஸ் H.S.School-லில் படிக்கின்ற 10 மாணவர்கள், தண்டவாளத்தில் ஏறினார்கள். குட்ஸ் ட்ரெயின் போனதற்கு எதிர்புறத்திலிருந்து 2-வது பாலத்தில் சபரி எக்ஸ் பிரஸ் வருவதைப் பார்க்காமல், 2-வது பாலத்தில் மாணவர்கள் நுழைந்து விட்டார்கள். உடனே பலத்த குரலில் சத்தம் போட்டு, நானும் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். மற்ற மாணவர்கள் அனைவரும் ஓடி விட்டனர். ஆனால், பிரவின் ஜெயின் என்ற மாணவன் மட்டும் தண்டவாளத்தில் விழுந்த தனது சைக்கிளை எடுக்க முடியாமல் தண்டவாளத்தில் நிற்கின்றான். ஓடிச் சென்ற வேகத்தில், வேறொன்றும் யோசிக்காமல், அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவனை எனது வலது கையினால் தூக்கி எடுத்து, பாலத்திற்கு மறு பக்கத்தில் குதித்து விட்டேன். சபரி எக்ஸ்பிரஸில் எனது கால் சிக்கிக் கொள்ளும் என்று நான் நினைத்தேன். ஆனால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கிருபையால் அவ்வித கஷ்டம் ஏதும் நிகழவில்லை. மாறாக, எனது இடது கை ஒடிந்து போய் விட்டது.
எப்படியோ, ஒரு சிறுவனின் உயிரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கிருபையால் காப்பாற்றிய நிம்மதி எனக்குக் கிடைத்தது.
ரயில்வே இலாகாவின் உயர் மட்ட அதிகாரிகள் எல்லாம் திரு விவேகானந்தனுடைய தைரியத்தைப் பாராட்டினார்கள்.
எங்கே கருணை இயற்கையில் உள்ளன.. அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி என அகவல் வரிகளைப் பாடிக் கொண்டே ஜீவித்து வரும் மதுரை சன்மார்க்க அன்பர் திரு அருட்பா ரெங்கநாதன் தனது மகனையும் காப்பாற்றி, அவரால், மற்றொரு சிறுவனின் உயிரையும் காப்பாற்றிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையை நினைந்து நினைந்து உள்ளம் வியக்கிறார்.
திரு விவேகானந்தனின் கருணை உள்ளத்திற்கு நன்றி சொல்லுவோம். அவருக்கு ஏற்பட்ட இடது கை முறிவு, உடனே குணமாவதற்கு சன்மார்க்க அன்பர்கள், ஆண்டவரின் கருணையினை வேண்டி நிற்போம்.
அருட்பா ரெங்கநாதன் செல் எண். 97158 – 67756.
An incident which took place at Kerala State has been flashed in the
Kerala newspaper about the bravery work of Thiru Vivekanandan, S/O Arutpa
Renganathan of Madurai (Retired Railway Employee). That has been translated
in Tamil and posted on this page.
மதுரை அருட்பா ரெங்கநாதனின் மகன் வாழ்வில் வள்ளற் பெருமான் நிகழ்த்திய சம்பவம்.
2 Comments
Vanakkam.Thank u for good sanmargaservice.
Vallalar blessings to Vivekanathan.must I am pray Vallalar.
My brother Vivekanathan ella udal,ulla,anma nallankalai padu
sanmargathil uyarthu periya arul valgai vala arulperumjothi,Thaniperumkarunai arulal valalar thunai kodu vandukikrain.