இன்று இவரைப்பற்றி…பொதட்டூர்பேட்டை திரு கண்ணப்பன், VAO.
வேலூர் மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் நகரப் பஞ்சாயத்து. அந்த ஊரில் பலகாலம் சன்மார்க்கம் கடைப்பிடித்து, பூச நாட்களில் அன்னதானம் செய்து, ஜீவகாருண்யப் பணி செய்து வந்த திரு பி. விஜயன் என்ற அன்பர் மனத்தில் ஒரு தாக்கம் ஏற்பட்டது. வள்ளற் பெருமானுக்கு ஏன் ஒரு கோயில் எழுப்பக்கூடாது என்பதுதான் அது.
அதற்கென இடம் தேடித்திரிந்த போது, அந்த ஊருக்கு வெளியே சுமார் 2 கி.மீ. தூரத்தில் மலை அடிவாரத்தில் ஷ்ரீடி சாய்பாபாவுக்கு திரு வாசுதேவன் என்பவர் ஆலயம் கட்டி வந்தார். அவர், விஜயனது முயற்சிக்கு உதவி செய்து, அதே மலை அடிவாரத்திலேயே இலவசமாக நிலமும் கொடுத்தார். பூமி பூஜை 4/9/2008 அன்று நடைபெற்றது. அன்று, மேற்படி சோளிங்கருக்கு அருகாமையிலிருந்த பொதட்டூர்பேட்டையிலிருந்து திரு கண்ணப்பன் VAO வந்து பூமிபூஜையில் கலந்து கொண்டார். அன்றைய தினம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டியிடமிருந்து திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் ஒரு சிலவற்றையும் அவர் வாங்கிச் சென்றார்.
அதன் பின்னர் தனது ஊரிலிருந்தே இரு சக்கர வாகனங்கள் மூலம் 4 பேர் சகிதம் கடந்த 22.2.2009 ஞாயிற்றுக் கிழமை வந்து காஞ்சீபுரம் தைப் பூச விழாவில் கலந்து கொண்டார். அன்றைய தேதியில் ரூ.1,405/-க்கு ஆடியோ சி.டி.களைப் பெற்றுச் சென்றார்.
இவரது ஊரான பொதட்டூர் பேட்டைக்கு வந்த பள்ளிப்பட்டு தாலுகாவின் தாசில்தார் திரு K. உமாபதி அவர்கள், அன்பர் திரு கண்ணப்பன் VAO மற்றும் அங்கு உள்ள அன்பர்களின் தீவிர சன்மார்க்க ஈடுபாடுகளைப் பார்த்துவிட்டு, 7.3.2009 அன்று நடைபெற்ற அன்னதானச் செலவினை ஏற்றுக் கொண்டார். வள்ளற் பெருமானின் கருணையினால், அவரை நெடு நாட்களாக வாட்டி வந்த நோய் தற்போது குணமாகிவிட்டது.
திரு கண்ணப்பன், V.A.O, தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டார். திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் தயாரித்தது - மிக அருமையான தரத்தில் உள்ளன. மேலும் 22 ஆடியோ சி.டி.களை அனுப்பி வையுங்கள் என மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டியினைக் கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையின்படி 22 ஆடியோ சி.டி.கள் அவருக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன. பொதட்டூர் பேட்டையில் எப்படி சங்கச் செயல்பாடுகள் உள்ளன என்று அவரை வினவிய போது, குறிப்பாக சன்மார்க்க சங்கத்தில் உள்ளூர் பெண்மக்கள் பெரும்பங்கு கொள்கின்றனர்.
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் என்ன .. .. ஏழை எளியோருக்கு சமையல் செய்து அன்னதானப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது என்ன .. .. என்று, பெண்மக்களின் பங்கு மிகுந்த போற்றுதலுக்குரியது என்று அவர் சொன்னார்.
அதற்கு மேலும் கீழ்க்காணும் அன்பர்கள், சன்மார்க்க பயிற்சி பெற்று வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளை அந்த ஏரியாவில் பரப்பி வருகின்றதாகத் தெரிவித்தார்.
- திரு S.C. அண்ணாமலை
- திரு ஜோதீஸ்வரன்
- திரு கண்ணப்பன் V.A.O.
- திரு ராமு
- திரு R.A. ஷண்முகம்.
- திரு T.K. ஷண்முகம்
- திரு சுப்ரமணியம்.
மேலும், சன்மார்க்க அன்பர்களின் அன்னதானப் பணியினைப் பார்த்து விட்டு, அந்த ஊரில் இயங்கி வரும் கிறிஸ்துவ அமைப்பிலிருந்தும் கூட அன்னதானப் பணிகளுக்கு அவர்களால் இயன்ற அளவு பொருள் உதவி செய்து வருகின்றனர் என திரு கண்ணப்பன் தெரிவித்தார்.
அவரது பணி சிறக்கவும், அந்த ஊரில் வள்ளற் பெருமான் வகுத்துத் தந்த சுத்த சன்மார்க்க நெறி மென்மேலும் தழைத்து ஓங்கிடவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனது கருணை மழையினைப் பொழியும்படி அனைவரும் வேண்டுவோம்.
இன்று இவரைப் பற்றி. வேலூர் Dt.பொதட்டூர் பேட்டை திரு கண்ணப்பன், V.A.O....
இன்று இவரைப் பற்றி. வேலூர் Dt.பொதட்டூர் பேட்டை திரு கண்ணப்பன், V.A.O....
இன்று இவரைப் பற்றி. வேலூர் Dt.பொதட்டூர் பேட்டை திரு கண்ணப்பன், V.A.O....
Write a comment