DAEIOU - தயவு
15.3.09-மதுரை சிந்தாமணி கிராமத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கப் பிரச்சாரம்.

15.3.2009 மதுரை சிந்தாமணி கிராமத்தில் வள்ளலார் விழிப்புணர்வு ஊர்வலம்.
வள்ளலார் ஆர்க் நிறுவனம் (VallalarOrg Foundation, Narayanapuram, Madurai) மற்றும் அருள் ட்ரஸ்ட் (Arul Trust), மதுரை மூலம் சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு.
15.3.2009 அன்று மதுரை சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள கண்ணன் காலனியில், அருள் திரு வாலேஸ்வரர் திருக்கோவிலில், தற்போது ரயில்வே காலனியில் வசிக்கும், செல்வி லலிதா மணி மற்றும் அவர்கள் குடும்பத்தார் திரு சாமிநாதன், அனுப்பானடி மற்றும் அவரது சகோதரர்கள் ஆகியோர் வருடாந்தர விழாக் கொண்டாடினர்.
அங்கு, காலை ஏழை எளியோருக்கெல்லாம், கரிசலாங்கண்ணிக் கீரை கலந்த கஞ்சி வார்க்கப்பட்டது. அத்துடன் வருகை புரிந்த சன்மார்க்க அன்பர்கள், மற்றும் விழா நடத்துவோரின் உறவினர்கள் ஆகியோருக்கும் காலை 8.45 மணி அளவில் மேற்படி கஞ்சி வழங்கப்பட்டது.
அதன் பின்னர், அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க வழிபாடு காலை சுமார் 9.30 மணி அளவில் துவங்கியது.

வ.எண்.
பெயர்
ஊரின் பெயர்
1.
சுருளிராஜன்
கம்பம், தேனி.
2.
APJ அருள்
DRO காலனி, மதுரை
3.
ராமானுஜம்
மேனேஜிங் ட்ரஸ்டி, VallalarOrg foundation, நாராயணபுரம், மதுரை
4.
முரளீதரன்
நிறுவனர், அருள் ட்ரஸ்ட், மதுரை
5.
மாணிக்கம்
E.B. காலனி, மதுரை
6.
சந்திர மோஹன்
நிலக்கிழார், ஊமச்சிகுளம்.
7.
தர்மலிங்கம்
கே.புதூர், மதுரை.
8.
அவர் மனைவி ஷண்முகம்
கே.புதூர், மதுரை.
9.
ஷண்முக சுந்தரம்
வில்லாபுரம், மதுரை
10.
T.R. ஜவஹர்லால்
மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், மகால் தெரு, மதுரை
11.
பாலமுருகன்
திருநகர், மதுரை
12.
சொக்கலிங்கம்
தெற்குவாசல், மதுரை
13.
அவர் மனைவி புவனேஸ்வரி
தெற்குவாசல், மதுரை
14.
எம். சுந்தரம்,
மதுரை
15.
பாலகிருஷ்ணன்
சன்மார்க்க சங்கம், ஏர்போர்ட் அருகே, மதுரை.
16.
எஸ். பாலசந்திரன்
மதுரை
17.
திருமதி ராமலக்ஷ்மி W/O APJ அருள்,
DRO Colony, மதுரை
18.
எஸ். ராஜகணேஷ்
மதுரை
19.
சதீஷ்
மதுரை
20.
ராஜேஷ்
மதுரை
21.
ராமலக்ஷ்மி
ஆசிரியை(ஓய்வு), மதுரை
22.
சந்திரசேகரன்
ஆசிரியர், செளராஷ்ட்ரா பள்ளி, மதுரை
23.
அருட்பெருஞ்ஜோதி S/O ராமலிங்கம்.
அனுப்பானடி, மதுரை
மற்றும்
பொதுமக்கள்.

தேனி மாவட்டத்திலிருந்து வருகை புரிந்த கம்பம் சுருளிராஜன் தலைமையில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. அன்பர்கள் அனைவரும் இந்த பாராயணத்தில் கலந்து கொண்டனர்.
அது முடிந்ததும், சுமார் 11.15 மணி அளவில், அங்கே அந்த விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும், அருகில் உள்ள சிந்தாமணி ஊருக்குள் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைப் பிரச்சாரத்தில் ஈடுபடும் விதத்தில், அங்கு வந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் சுமார் 25 நபர்கள், வள்ளலார் உருவம் தாங்கிய ப்ளெக்ஸ் பேனர் பொருத்திய Tricycle மூலம், சிந்தாமணி ஊருக்குள் சென்று, வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பற்றி பிரசாரம் செய்தனர்.
பள்ளிச் சிறார்கள் அனைவரும் வள்ளலாரின் கொள்கைகள் அடங்கிய ப்ளெக்ஸ் பேனர்கள் பிடித்து அனைவரும் அவரது நெறியினை இலகுவாகப் புரிந்து கொள்ளும்படிச் செய்தனர்.
மேலும், அவர்கள், ஒரு சிலர், ஆடு, மாடு, யானை போன்ற அட்டையால் செய்யப்பட்ட தலைகளை அணிந்து கொண்டு, கிராமத்தில் திரிந்தனர்.
நாங்கள் எல்லாம் சைவம், நீங்கள் சைவமா ? என்ற கேள்வி அட்டையினை அவர்கள் தமது சட்டையின் முன்புறத்தில் தொங்க விட்டிருந்தனர். இந்த விநோத உருவங்கள், சிறார்கள் முகத்தில் தொங்க விட்டிருந்ததால், அந்த கிராமத்தில் இருந்த சிறியோர், பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியோர்கள் அனைவரையும் கவர்ந்தது. அவர்கள் செய்த பிரசாரத்தால் அனைவரும் மிகவும் கவரப்பட்டனர்.
வள்ளலாரின் நெறி பற்றிய துண்டுப் பிரசுரங்களை, சிறார்களும், சன்மார்க்க அன்பர்களும், வீடுகள் தோறும் சென்று, பொதுமக்களுக்கு, கொல்லா விரதம் குறித்து விளக்கம் செய்து, அதனை ஒவ்வொருவரும் தவறாமல் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதத்தில், துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டீ, திரு ராமானுஜம், அந்த கிராமத்தில், தெரு முனைகளில், நின்று, சன்மார்க்கப் பிரச்சாரம் செய்தார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் நின்று, கொலை புலை தவிர்த்து, வள்ளலார் சொன்ன நெறியின்படி ஒழுகினால், நோய் நொடி அண்டாது எனவும், இறைவனின் அருளுக்கு ஜீவர்கள் பாத்திரர் ஆவார்கள் என்றும் எடுத்துச் சொல்லி, இன்று முதல், புலால் உணவை உண்பதை விட்டு விடும்படிச் சொன்னார். வள்ளலார் ஜீவதேகங்களே இறைவன் வாழும் ஆலயங்கள் எனச் சொல்லிச் சென்றுள்ளதால், உயிர்க்குலத்துக்குத் தொண்டு செய்வதன் மூலம், இறைவனின் அருளுக்கு அனைவரும் பாத்திரமாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
வடலூரில் வள்ளலார் 137 ஆண்டுகளுக்கு முன்னரே தருமச் சாலை கட்டி ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்கு வழிகாண்பித்தார். அவர் ஏற்றி வைத்த அணையா அடுப்பு, இன்றளவும் கனன்று, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குகின்றது. அவர், இவ்விதம் தம்மால் முடிந்த அளவில், தர்மம் செய்வதன் மூலமும், ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் அறியச் செய்தார். இதன் மூலமும் இந் நெறிதனை அனைவரும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். அப்போதுதான் இறைவனின் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்ற சொன்னார்.
ஏன் இந்த கிராமத்தில் ஜீவகாருண்ய ஒழுக்கம் தெருமுனைப் பிரச்சாரமாக மேற்கொள்ளப்படுகின்றது எனில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தார் அனைவரும், சிந்தாமணியில் கோவிலில் நடைபெறும் விசேஷத்திற்கு வருகை தந்ததன் மூலம், அருகாமையில் உள்ள சிந்தாமணி கிராமத்திலும், (Universal Brotherhood) ஆன்ம உரிமைச் சகோதரர்கள் என்ற விதத்தில், தெரியாத பொதுமக்களுக்கும், வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிவித்து, அனைவரும் இனிமேல் இதனைப் பின்பற்றி, வாழ்வதன் மூலம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற வேண்டும் என்ற விதத்தில் இந்த பிரசாரம் நடைபெறுகின்றது எனக் குறிப்பிட்டார். சிறு தெய்வ வழிபாட்டினை தவிர்த்து, வள்ளலார் சொன்னதன்படி, தனித்தலைமைப் பெருங்கடவுளாக (One Supreme God) உள்ள அருட்பெருஞ்ஜோதியரை துதிக்கும்படி அவர் வலியுறுத்தினார்,
தேனி மாவட்டத்தில் இருந்து வருகை புரிந்த திரு சுருளி ராஜன் அவர்களும், இவ்விதம் ஒவ்வொரு தெருக்கள் தோறும் நின்று, சுத்த சன்மார்க்கக் கொள்கை விளக்கத்தையும், கொல்லா விரதத்தை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும், விளக்கமாகத் தெரிவித்தார்.
மதுரை கருணை சாலை சபை நிறுவனர் திருமதி ராமலக்ஷ்மி மற்றும் அவரது கணவர் APJ அருள் ஆகியோர் சமய நெறிகளில் எல்லாம் உயிர்க்கொலை குறித்து சொல்லப்படவில்லை என்றும். எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், மதத் தலைவர்களோ, ஆன்மீக நூல்களோ இறைச்சியை உண்ணச் சொல்லவில்லை என்பதை பொதுமக்கள் நன்கு அறியும் வண்ணம் விரிவாக எடுத்துக் காட்டுக்களுடன் தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள், புலால் உணவை விட்டு விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
திரு T.R. ஜவஹர்லால், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், மஹால் தெரு, மதுரை. கூறியதாவது.
கொல்லா நெறிதான் குருவருள் நெறி. இதனையே வள்ளலார் வலியுறுத்தினார். எனவே, இதுவரை எப்படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், இனிமேல், பொதுமக்கள் அனைவரும், சைவ உணவு உண்பதை கடைப்பிடிக்கும்படியும், அதன் மூலம் இறைவனின் அருளினைச் சம்பாதித்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்.
செல்வி லலிதாமணி, சன்மார்க்கி, ரயில்வே காலனி, மதுரை.
சிந்தாமணி கிராமத்தில் வாழும் பொதுமக்கள் அனைவரும் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில், சன்மார்க்க சங்கத்தை சேர்ந்த அனைத்து அன்பர்களும், இந்த சிந்தாமணி கிராமத்திற்கு வந்துள்ளோம். உங்களுக்கும் இது குறித்துத் தெரிவித்து, நீங்களும், சைவ ஆகாரம் உண்டு, நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும், எங்களுக்குத் தெரிந்த வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை நீங்களும் தெரிந்து கொண்டு, வாழ்வில் இன்புற வேண்டும் என்ற விதத்தில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகின்றதென்றார்.
இந்த தெருமுனைப் பிரச்சாரம், மதியம் 1.00 மணி அளவில் முடிவடைந்தது.
அதன் பின்னர், செல்வி லலிதாமணி குடும்பத்தினர். வருகை தந்திருந்த அனைத்து சன்மார்க்க அன்பர்கள் மற்றும் அருகில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கினர்.
அனைவரும், சிந்தாமணி கிராமத்தில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, சுத்த சன்மார்க்க கொள்கைகளையும் கொல்லா நெறி கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியதற்கு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
சுமார். 500 நபர்கள், இந்த விழாவில் கலந்து அருள் நலம் பெற்றனர்.