DAEIOU - தயவு
15.2.09 திண்டுக்கல் பொன்னகரத்தில் பூச நாள் விழா.

அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் பூச விழா, திண்டுக்கல் பொன்னகரம்.
மாதாந்திர பூச விழா.
சர்வதாரி ஆண்டு மாசித் திங்கள் 3ம் நாள் 15.2.2009 ஞாயிற்றுக் கிழமை
பூச விழா.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான்தயாநிதிசரவணானந்தசுவாமிகள்ஆவார். வள்ளற்பெருமானாரின்சுத்தசன்மார்க்கக்கொள்கைகளைஅடியொற்றி, சுவாமிசரவணானந்தாஅவர்கள் 60க்கும்மேற்பட்டநூல்கள்எழுதிவெளியிட்டுள்ளார்கள். உபதேசப்பகுதியில்வள்ளல்பெருமான்தம்மைஏறாதநிலைமேலேற்றிவிட்டதுதயவுஎனக் குறிப்பிட்டுள்ளார். அதன்அடிப்படையில், தயவுப்பாக்கள், தயாவிளக்கமாலை, தயவுப்பெருநெறி, தயவுக்குறள்என்றபலஉரைநடைநூல்களும்பலபாக்களும்யாத்துள்ளார்கள். சுவாமிஅவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற்பெருமானின்காட்சி, அவர்களதுஇளம்வயதிலேயேகிடைத்துள்ளது.
அவர்கள்தமது 96 வயதில்சித்திபெற்றார்கள். திண்டுக்கல்நகரில்நத்தம்சாலையில்உள்ளபொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்கடந்த 2003ம்ஆண்டுமுதல்செயல்பட்டுவருகிறது.

மாதந்தோறும்பூசநாளைஒட்டியஒருஞாயிற்றுக்கிழமைஅன்றுபொன்னகரம்அருட்பெருஞ்ஜோதிதயவுஇல்லத்தில்சன்மார்க்கஅன்பர்கள்திரளாகக்கலந்துகொண்டு, அருட்பெருஞ்ஜோதிஆண்டவரைவழிபாடுசெய்துவருவதைவழக்கமாகக்கொண்டுள்ளனர்.
இந்ததயவுஇல்லத்தைதிண்டுக்கல்தயவுநூல்அறக் கட்டளையினைநடத்திவரும் அன்பர்திருஎஸ்.ஆர். ராமலிங்கம்மற்றும்அவரதுகுடும்பத்தினர், அன்பர்களின்உதவியோடுராமரித்தும், ஏழைகளுக்குப்பசியாற்றுவித்தல்பணியையும்தொடர்ந்துமேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில், மாதப்பூசநாளினைஒட்டி, கடந்த 15.2.2009 ந்தேதிஞாயிற்றுக்கிழமைஇந்ததயவுஆலயத்தில்மாதாந்திரக்கூட்டம்நடைபெற்றது.
காலை 10.30 மணிகொடிவணக்கம்.
காலை 10.40 மணிதிருவடிப்புகழ்ச்சி,அருட்பெருஞ்ஜோதிஅகவல், அட்டகம்மற்றும்சுவாமிசரவணானந்தரின்சற்குருவணக்கப்பாடல்கள்.
பகல் 12.30 மணி.
உலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களின் நலன்களுக்காகவும், தயவு தியானம் நடைபெற்றது.
இதனை அடுத்து திண்டுக்கல் சுவாமிகளின் அணுக்கத் தொண்டர் தயவு வே.விசுவநாதன் அவர்கள், வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
இதன்பின்னர் தயவு நூல் அறக்கட்டளை அன்பர் தயவுத் திரு எஸ். ஆர். இராமலிங்கம் அவர்களால் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய பேருபதேசப் பிழிவு வாசிக்கப்படது.
தயவுத் திரு வே. அருணகிரி அவர்கள், சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கத்திலிருந்து, மூன்று, நான்காம் வரிகளுக்கான உரை விளக்கத்தினை வாசித்து விளக்கம் அளித்தார்.
மதியம் 1.00 மணி.
தயவு திரு விசுவநாதன் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது
இன்று இந்த மாதாந்திர பூச விழாவானது. 8.2.2009ந் தேதி வடலூர் மகா தைப்பூச விழாவினை அடுத்து ஒரு ஞாயிற்றுக் கிழமையில் அமைந்துள்ளது. ஒவ்வொருவரின் அக அனக அனுபவத்திற்கு மிகப் பொருத்தமான நாளாக இது அமைந்துள்ளது.
அன்றைய தினத்தில் வடலூருக்குச் சென்று சுவாமிகள் இயற்றிய நூல்களை, தேவைப்பட்ட தயவு அன்பர்களுக்கு நேரிடையாக வழங்கப்பட்டது. மேலும் இரண்டு மிக முக்கிய நிகழ்ச்சிகள் வடலூர் உலக மையம் சமரச சுத்த சன்மமர்க்க சத்திய சங்கத்தின் மூலம் 8.2.2009ந் தேதி மகா தைப்பூச விழாவில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
  1. திண்டுக்கல் சின்மயபுரம் தயவடிமை என்பவ்ரால் எழுதப்பெற்ற “திண்டுக்கல் தயாநிதி ஞான மகான் சுவாமி சரவணானந்தரின் சுத்த சன்மார்க்க உபதேச உண்மைகள்” என்ற நூல் வெளியீடு ஆனது.
  1. திரு அருட்பாவின் மொத்த பிழிவு தயவு, அருட்பா முழுவதும் நிரவி உள்ளது தயவுதான். ஆகவே இந்த அருட் தயவையே, அடிப்படையாக வைத்து பாடப்பட்ட 30 பாடல்கள் “வடலூர் வள்ளலாருக்கு தயவெம்பாவை” என்ற தலைப்பில், வடலூர் உலக மைய பொதுச் செயலாளர் தயவுத்திரு சி. காமாட்சி ஐயா அவர்களால் எழுதப் பெற்ற இசைப் பேழை (C.D) வெளியீடு ஆனது.
இனி உலகமெலாம் வள்ளலாரின் தயவு உண்மைகள் மேலும் பரவப்போகின்றன. ஒரு ஆன்மிக எழுச்சி சுத்த சன்மார்க்க உலகில் நிகழப் போகின்றது. அதற்கான முறையில்தான், மேற்படி 2 வெளியீடுகள் இந்தத் தைப்பூச நாளில், வெளி வந்துள்ளன.
மேலும் அவர் கூறியதாவது.
அருள் என்பதும், கருணை என்பதும், தயவு என்பதும் ஒரு பொருளையே குறிக்கும்.
அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்னும் மகா மந்திரத்தில், தனிப்பெருங்கருணை – த ஆகவும், அருட்பெருஞ்ஜோதி – ய ஆகவும். முன்னும் பின்னும் ஒன்றேயாக வரும். இரு அருட்பெருஞ்ஜோதி ஆகிய சிற்சபை பொற்சபை அனுபவங்கள் – வு ஆகவும், ஆக மொத்தத்தில் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமே ‘தயவு’ ஆக செயல்பட ஆரம்பித்து விட்டது.
இது தவிர தயாநிதி சுவாமி சரவணானந்த பரமான்மபதி அவர்களின் 3ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா 5.4.2009ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது. அது சமயம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதிக் கடவுளின் மூவியல் இறை இயல் உண்மை ஒரு தயவாகவே உலகெலாம் பரவும் என்றார்.
அடுத்த மார்ச் மாத பூச விழா 8.3.2009 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
மதியம் 1.15 மணி.
தயவுத் திரு எஸ். ஆர். ராமலிங்கம் நன்றியுரை கூறினார். இன்று இந்தப் பூச விழா நாளில், அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்திற்கு வருகை புரிந்த மதுரையில் இருந்து வந்திருக்கும் அன்ப்ர்களுக்கும், மற்றும் திரு லக்ஷ்மையா அவர்களுக்கும், பாளையங்கோட்டையில் இருந்து வந்திருக்கும் டாக்டர் திரு லக்ஷ்மையா அவர்களின் குடும்பத்தாருக்கும், காரைக்குடியிலிருந்து வந்திருக்கும் டாக்டர் திரு ஜனார்த்தனன் அவர்களின் குடும்பத்தார்களுக்கும், சின்னாளப்பட்டியிலிருந்து வந்திருக்கும் தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை கமிட்டி மெம்பர் தயவுத்திரு சி. ராமராஜ் அவர்களுக்கும், அமராவதி அம்மா அவர்களுக்கும் திண்டுக்கல்லிலிருந்து வந்திருக்கும் அருணகிரி, விசுவநாதன் மற்றும் தயவு அன்பர்கள் அனைவருக்கும், மேலும் நாகல் நகர் தயவு அன்பர்கள் அனைவருக்கும், பத்தலதோப்பம்பட்டி தயவுத் திரு தர்மர் அவர்களுக்கும், மற்றும் வந்திருக்கும் எல்லா தயவு அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றும், சின்னாளப்பட்டி தயவு அன்பர் திரு நடராஜன் கலைவாணி அவர்கள் திண்டுக்கல்லிலிருந்து தயவு நூல்களை தனது கார் மூலம் கொண்டு சென்று வந்து உதவியமைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இதன்பின் அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை தயவுத் திரு ஜி. ராம்குமார் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அடுத்து ஜோதி வழிபாடு மற்றும் விண்ணம் சொல்லப்பட்டது.
இக் கூட்டத்தில் சுமார் 120 சன்மார்க்க அன்பர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சின்மயபுரம் தயவுத் திரு எம். எஸ். செளந்திரராஜன் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் தயவுத்திரு பி. வசந்தா அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு அன்னமளிப்பு உபயம் செய்து அன்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பசியாற்றுவித்தல் பணியினை நிறைவேற்றினர். அதன்பின்னர், விழா இனிதே முடிவடைந்தது.