28.2.2009-மதுரை வட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தில் சுத்த சன்மார்க்க விளக்கப் பயிற்சி முகாம்.
வள்ளலார் ஸ்பேஸ்.காம் – வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் – அருள் ட்ரஸ்ட் ஒருங்கிணைந்து நடத்தும் நிகழ்ச்சி.
இடம்- குட்லாடம்பட்டி சமத்துவபுரம் குடியிருப்பு.
நாள்- 28.2.2009 (சனிக்கிழமை)
நேரம்- மாலை 5.30 மணி.
அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்ற விதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழ்நாடு அரசு 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் குடியிருப்புக்களைக் கட்டி, பல்வேறு தரப்பினைச் சார்ந்த மக்களையும் குடியமர்த்தி உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கே முன்னுரிமை கொடுத்து இந்த சமத்துவபுரத்தில் இடம் கொடுக்கப்படுகின்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் குட்லாடம்பட்டி என்ற கிராமத்தில் இது போன்றதொரு சமத்துவபுரம் குடியிருப்பு உள்ளது.
மதுரையில் இயங்கிவரும் (1) வள்ளலார் ஸ்பேஸ்.காம் (2) வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் (3) அருள் ட்ரஸ்ட் ஆகிய 3 நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் இணைந்து, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பற்றி, இந்த சமத்துவபுரத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக, வரும் 28.2.2009 சனிக்கிழமை மாலையில் 5.30 மணி அளவில், பயிற்சி முகாம் நடத்த உத்தேசித்துள்ளன.
இந்த கிராமத்தில் இயற்கையாகவே நீர்வீழ்ச்சி உள்ளது.
அது தவிர, ஆன்மீக அலை பரப்பும் கீழ்க்காணும் நிறுவனங்களும் அங்கே இயங்கி வருகின்றன.
1) ரமணாஷ்ரமம் கிளை (10 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது).
2) புத்தர் ஆஸ்ரமம்.
3) ஓம்காரனந்தா ஆஸ்ரமம்.
4) அருள் அறக்கட்டளை.
5) சித்த வித்யார்த்தி சிவானந்த பரமஹம்சற் ஆஸ்ரமம்.
6) சாஸ்வதானந்தா குழந்தைகள் பயிற்சி மையம்.
மேற்படி VallalarSpace.com, VallalarOrg Foundation, Arul Trust ஆகிய 3 நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தவிர, இக் கூட்டத்தில் மதுரையிலிருந்து திரளான சன்மார்க்க அன்பர்களும் இணணந்து அந்தக் குடியிருப்புப் பகுதியில் கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
1) வள்ளல் பெருமானின் கொள்கைகள், திரு அருட்பாக்கள் அடங்கிய பிரசுரங்கள் வினியோகித்தல்
2) திரு அருட்பாக்கள் பாடுதல்.
3) நோய்களுக்கு இலவச மருந்து வினியோகித்தல்.
4) தொலைக்காட்சி மூலம் வள்ளலாரின் நெறி பரப்புதல்.
5) மூத்த சன்மார்க்க அன்பர்களின் மூலம் சொற்பொழிவு நிகழ்த்துதல்
6) கேள்வி பதில் முறையில் சன்மார்க்க நெறி பரப்புதல்.
7) கூட்டத்தினரிடம் ஏற்படும் ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்தல்.
இந்த கூட்டத்தில் மதுரை மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரவு 9.00 மணிக்குள் நிறைவு பெறும். அங்கு இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் அன்பர்கள் தங்குவதற்கும் இட வசதி செய்து தரப்படும்.
இந்த செய்தியை இணைய தளத்தில் காணும் அன்பர்கள், தாம் சார்ந்துள்ள சங்கங்களில் இந் நிகழ்ச்சி குறித்துத் தெரிவித்து, தாமும் 28.2.2009 அன்று கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மேலும் விவரங்கள் அறிய -
திரு முரளீதரன், அருள் ட்ரஸ்ட் நிறுவனர் (செல்) 98655 02500
மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் (செல்) 97898 72120.
Write a comment