காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே .. .. .. .. .. ..
திரு அருட்பா ஆடியோ சி.டி.யை மிக விரும்பும் திரு A.N. கண்ணப்பன்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குரு ராஜ பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திரு A.N. கண்ணப்பன். இவர் வயது 42. சென்னை பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் பயின்றவர், இவரது மனைவி பெயர் திருமதி உமா. இருவருமே கண் பார்வையற்றவர்கள். குழந்தைகள் உண்டு. இறைவன் அருளால் அவர்கள் பார்வைத்திறன் உள்ளவர்கள்.
முதலில் கிறிஸ்துவ மதத்தில் முழு நம்பிக்கை கொண்டிருந்துள்ளார். ஆனால் அந் நெறி, சரியான முறையில் தமக்கு, ஒரு நிலையைக் கூட்டி வைக்கும் என்ற நம்பிக்கை தென்படாத நிலையில், பல்வேறு சமய மதங்கள் சொல்வதை எல்லாம் பிறர் சொல்லக் கேட்டும் பிறர் மூலம் படிக்கக் கேட்டும் தெரிந்துகொண்டார். உயரிய நோக்கம் கொண்டது, சுத்த சன்மார்க்க நெறிதான் என உணர்ந்த பின், மற்றெல்லாவற்றையும் விட்டு விட்டார். வள்ளல் பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டுள்ளார். இவர், பிரதி தைப் பூசந் தோறும், வடலூர் வந்து விடுகின்றார். சென்னையில் உள்ள பாடி சிவன் கோவில் அருகே உள்ள சன்மார்க்க சங்கத்துடன் தொடர்பு வைத்துள்ளார்.
வேலை பார்ப்பது பட்டரவாக்கம். கம்பெனியின் பெயர் Switzer Instrument Ltd., அம்பத்தூர், சென்னை, பார்வை அற்றவர் என்ற நிலையில் திரு அருட்பாவினை, இவரால் படிக்க முடியாது. எனினும் ஆடியோ சி.டி.வாங்கச் சொல்லி அதன் மூலம் திரு அருட்பாவினைக் கேட்டு இன்புறுவது இவரது வழக்கம். தாம் கேட்டு இன்புறுவது மட்டுமல்லாமல், அவர், தம்மைச் சார்ந்தவர்களையும் திரு அருட்பாக்களைக் கேட்டு இன்புறச் செய்து வருகின்றார்.
எப்பொழுது திரு அருட்பா பாடல்கள், புதிதாக ஆடியோ சி.டி.யாக வருகின்றதோ அப்போதெல்லாம், அதனை, வந்தவுடன் வாங்குவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த 8.2.2009, 9.2.2009 ஆகிய நாட்களில், வடலூரில் ராமநாதபுரம் மாவட்ட சன்மார்க்க சங்கத்தில் தாமாக அமர்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் .. அவராகவே .. பேசிக் கொண்டிருந்தார்.
என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என வினவியபோது தான் அவர், தம்மைப்பற்றிய செய்திகளை எல்லாம் தெரிவித்தார். எப்போது சார், திரு அருட்பா பாடல்கள் எல்லாம் முழுமையாக ஆடியோ சி.டி.யாக வெளிவரும் என்ற கேள்வியுடன் - தன்னைப்பற்றிய செய்திகளை இவர் சொன்னார்.
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. இன்னும் பாக்கியுள்ள திரு அருட்பா பாடல்களுக்கு இசை அமைப்பதற்கு, தொகை வேண்டியுள்ளது எனவும், எனினும் சிங்கப்பூர் அன்பர் திரு சிவக்குமார் அவர்களது கடுமையான முயற்சி மூலம், வரும் 2012ஆம் ஆண்டுக்குள், அனைத்துத் திருமுறைகளில் உள்ள திரு அருட்பா பாடல்களையும் இசை வடிவம் கொடுத்து முடிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார். பெருமானின் பேரருள் துணை புரிந்து வந்தாலும், பணப் பற்றாக் குறை மட்டும் அதற்கு ஒரு தடையாக உள்ளது என அவரிடம் பதில் சொல்லப்பட்டது.
எனினும், கூடிய விரைவில் திருஅருட்பா பாடல்கள் இசை அமைக்கும் பணி முழுமையாக நிறைவேற வேண்டியதே - தனது அவா என அவர் உரைத்தார். வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின்கண் அவரது ஆர்வம், நம்பிக்கை, இன்னவென்று அளவிட முடியாது.
கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன்
காலமெல்லாம் வீணே கழித்து விட்டேன் .. .. .. பட்டினத்தார்.
புறக்கண்கள் இல்லாவிடிலும் பரவாயில்லை ..
அகக்கண்ணால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தரிசிக்கின்றேனே
அதற்கு, இந்த திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் துணை நிற்கின்றனவே ..
.. கண்ணப்பன்......
என்னவென்பது இறைவனின் கருணையை ..
கட் புலன் தவிர தனக்கிருக்கும் ஏனைய புலனறிவின் வாயிலாக..
கண்ணப்பன் என்ற இந்த அன்பர் .. திரு அருட்பாவை நேசிக்கிறார் .. சுவாசிக்கிறார் ..
இவ்வித பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தான் உண்மை சன்மார்க்கிகள்.
இவர்கள் மூலம் பரவும் சத்து மார்க்கமாகிய .. .. சன்மார்க்கம் தான் உயிரிரக்கம்
வழியாகப் பிற ஆன்மாக்களில் இலகுவாகப் புகுந்து கொள்வது
விரைவில் அவர், கண் பார்வை பெற, சன்மார்க்க அன்பர்கள் அனைவரும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டலாமே .. .. .. ..
செய்தி வெளிட்ட பின்னர் வந்த தகவல்.
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் மூலம் வடிவம் பெற்ற ஆடியோ சி.டி.களை
,திரு கண்ணப்பன் அவர்களுக்கு இலவசமாக அனுப்பவும் ..
(அன்பர் சிவக்குமார், சிங்கப்பூர்).
4 Comments
Thank u Information about A.N.Kannappan&Family.Wish you all sucess to A.N.Kannappan&Family.Anbu,Karunai,Deaiou Persons are Bright Persons.A.N.Kannappan&Wife are Bright Eyes Persons.
With Vallalar Loving,
AruljothiSujatha.
முதலானவை, Vallalar Universal Mission Trust-ல் அன்பர்
(ஜோதி முருகன் அய்யாவின் மகன்) திரு ராஜவீர் @ பழனி
வைத்திருந்தார்.
அதனைப் பெற்று அவரிடம் தொடர்பு கொள்ளப்பட்டது.
தனக்கு ஒரு மகன் 3 வயதில் உள்ளதாகவும், பெயர்
விக்னேஷ்வரன் எனவும் அவர் சொன்னார். தம்மைச் சார்ந்த
சன்மார்க்க அன்பர்களுக்கு, திரு அருட்பா ஆடியோ சி.டி.
களைக் கொடுத்து, அவர்களை சுத்த சன்மார்க்க நெறிக்குக்
கொண்டு வருவதாக அவர் சொன்னார். கிட்டத்தட்ட 20
நபர்களுக்கு, இதுபோன்று வாங்கும் திரு அருட்பா ஆடியோ
சி.டி.களை வினியோகித்து வருவதாக அவர் மேலும் சொன்னார்.
பகலில் அவருக்கு கொடுத்த அழைப்பினைக் கண்டு பிடித்து
(Missed Call) மாலையில், அவர் பணி முடிந்து திரும்பியதும்
பேசினார்.
தாமும், தம்மைச் சார்ந்தவர்களும், சென்னை பாடியில் உள்ள
சன்மார்க்க சங்கத்தில் வாராந்திரச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்வதென்றும், தம்மால் இயன்றமட்டில், அன்னதானப் பணியும்
செய்து வருவதாகவும் தெரிவித்தார். மற்றும் திரு சதீஷ் அடிகள் பெரம்பூர்
மற்றும் திரு வி.க. நகர் ஆகிய ஊர்களில் உள்ள சன்மார்க்க சங்கங்களுக்கும்
அன்பர்களுடன் சேர்ந்து சென்று வருவதும் வழக்கமென்றார்.
சிங்கப்பூர் திருஅருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெச்ட் ஆடியோ
சி.டி.களை, இலவசமாக வழங்குவதற்கு, திரு சிவக்குமார் சொல்லி
உள்ளார் எனத் தெரிவித்தவுடன் அவர் அடைந்த புளகாங்கிதத்திற்கு
அளவே இல்லை. மிக்க நன்றி என்றார்.
தம் பெயர் நோட்டீஸில் போடாவிட்டால், தான் கூட்டத்தில் கலந்து
கொள்ளப் போவதில்லை என்று முரண்டு பிடிக்கும் சன்மார்க்க அன்பர்கள்
மத்தியில், தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், சன்மார்க்கம்
தழைக்க இந்த அன்பர் செய்யும் பணியினை என்னென்பது ... ... ...
கண் பார்வை அற்ற நிலையில் எப்படி நீங்கள் உங்களைச் சார்ந்த
அன்பர்களுக்கு செல் மூலம் செய்தி சொல்வீர்கள் எனக் கேட்கப் பட்டது.
Talking Mobile - என்ற ஒரு வசதி செல்லில் உள்ளது ஐயா. Nokia Model
6600 செல்லில் இந்த வசதி உள்ளது. எங்களது நண்பர்கள் அந்த செல்
வைத்துள்ளோம்.நாம் அனுப்பும் SMS எதிர் முனையில்
செய்தியாகப் படிக்கப்படும்... என்றார். சோதனைக்கு .,.இதோ நீங்களும்
கேளுங்கள் என்றார்...அவரது செல்லிலிருந்து ஒரு செய்தி படிப்பதைக்
கேட்க முடிந்தது.
திரு அருட்பா ஒன்று மட்டுமே போதும் .. உடலில் என்ன குறைபாடு
இருந்தாலும் அதனைப் பற்றி கவலை இல்லை என்று சன்மார்க்கத் தொண்டு
தான் மட்டும் புரியாமல், தம்மைச் சார்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டு
தொண்டு புரியும் இந்த உயர்ந்த உள்ளத்திற்கு .. தயவுக் குழுவின் சிரம் தாழ்ந்த
வணக்கம் சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல இயலும்....
ஓரிரு தினங்களில், ஆடியோ சி.டி. அவருக்கு இலவசமாக அனுப்பப் பட
உள்ளது.
அவரது முகவரி.
Thiru A.N. Kannappan, No.127, Switzer Instrument Limited,
SIDCO Industries, Ambathur, Chennai.53
Cell No. 98401 - 02544.
அவருடைய பணியை தாங்கள் இவ்விணைய தளத்தில் தெருவித்து மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள்.இவருடைய பணியை பார்க்கும் போது சன்மார்க்க அன்பர்கள் எவ்வாறு மனித குலத்துக்கும் பிற உயிர்களுக்கும் தொண்டு செய்யலாம் என்று வள்ளலார் அனைவருக்கும் பாடம் கற்பித்தது போல் உள்ளது. அவருக்கு பெருமானார் அருள் உள்ளது. அவருக்கு புல கண் ஒளி மட்டுமே இல்லை. ஆனால் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அக கண்ணை - நெற்றிகண் திறந்துவிட்டார்.அவருடைய பணிகளே இதற்கு சான்று.
புல கண்களை வைத்துக்கொண்டு அக கண்ணை திறக்காதவர்கள்- தயவு குணம் இல்லாதவர்கள்- கண் பார்வை அற்றவர்களே.
”கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”.என்பது போல் பயனற்றவர்கள்.
உலகியியல்-அருளியியலில் ஏழு சக்கரங்களின் பங்கு பற்றி எழுதும் போது- மேலே குறிப்பிட்ட குறளுக்கு விளக்கம் தேடிய போது எதை மனம் எண்ணியதோ அதற்கு சான்றாகவே இந் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஒங்கிய அருட்பெருஞ்ஜோதி
திரு ஏ.என்.கண்ணப்பன்..
கண்ணப்ப நாயனாராகவே காட்சி அளிக்கிறார்.
இறைவனின் ஒரு கண்ணில் (சிவலிங்கத்தில்) ரத்தம் வந்ததைப்
பார்த்ததும் .. பொறுக்காதவராய் .. தனது ஒரு கண்ணை
முதலில் பெயர்த்து, சிவலிங்கத்திற்கு வைத்தார்.
இவரது பக்தியை சோதிக்க எண்ணிய
இறைவனார்...சிவலிங்கத்தின்
மறு கண்ணிலும் .. ரத்தம் வரச் செய்து ..
என்ன செய்வது எனத் தெரியாது திகைத்து .. கண்ணப்ப நாயனார்..
தனது மறு கண்ணையும் பெயர்த்து எடுத்து வைக்க வேண்டுமென
எண்ணி, தனது காலால் சிவலிங்கத்தின் மற்றொரு கண்ணை
மிதிக்க எண்ணிய போது .. கண்ணப்ப நாயனாருக்கு இறைவன்
காட்சி தந்தார் என்பது வரலாறு.
இவரை .. அவராகப்.... பார்க்க வேண்டியுள்ளது.