DAEIOU - தயவு
சென்னையில் திரு அருட்பா புத்தகங்கள் விற்பனை மையம் ஒன்று தேவையா வேண்டாமா ? ஓட்டெடுப்பு.

சென்னையில் திரு அருட்பா ஆடியோ சி.டி மற்றும் திரு அருட்பிரகாச
வள்ளலார் தெய்வ நிலையங்கள் வெளியீடுகள் , திண்டுக்கல்
சுவாமி சரவணானந்தா ஆகியோரின் புத்தகங்களுக்கென
விற்பனை மையம் ஏற்படுத்தலாமா?
அன்பர்களின் கருத்துக் கேட்டல்.
கடந்த 8.1.2009 முதல் 18.1.2009 வரை சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரின் அமைந்த செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப்
பள்ளியில் திரு அருட்பா சம்பந்தப்பட்ட புத்தக விற்பனை மையம் துவக்கப்பட்டது.
சென்னையைச் சுற்றிலும் உள்ள பல் சன்மார்க்க அன்பர்கள், சன்மார்க்க சங்கங்கள், ச
ன்மார்க்க சங்கம் மூலம் பள்ளிகள் நடத்துவோர் ஆகியோர் கீழ்க்காணும் அருள்
நூல்களைப் பெற்றுச் சென்றனர்.
சென்னையில் நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், கொண்டு வந்த திரு அருட்பா 6 திருமுறைகளும் 17.1.2009 அன்று காலையுடன் விற்றுத் தீர்ந்தன.
திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர் பதிப்புக்கள்
  1. திரு அருட்பா 1 முதல் 5 திருமுறைகள்
  2. திரு அருட்பா 6-ந் திருமுறை
  3. உரை நடைப்பகுதி
  4. சிங்கப்பூரில் தயாரான திரு அருட்பா தெய்வ இசை அமுதம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆடியோ சி.டி.கள்.
  5. திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் திரு அருட்பா பாடல்களுக்கு எழுதிய விரிவுரை நூல்கள்
  6. தயவு நெறி பரப்பும் தயவுப் பாக்கள் முதலான நூல்கள்.
அந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட அன்பர்களில் சிலர், இந்தப் புத்தக விழா முடிந்ததும், திரு அருட்பா முதலான அருள் நூல்களை, சென்னையில் வேறு எங்கு பெறலாம் என்று கேட்டனர். புத்தக ஸ்டாலில் பணியில் இருந்த அன்பர்களால் அதற்கு உடனடியாக பதில் தர இயலவில்லை.
சென்னையில் வள்ளற் பெருமானின் அருள் நூல்களான திரு அருட்பா சம்பந்தப்பட்ட சிறு சிறு புத்தகங்கள் ஒரு சில இடங்களில் சில நேரங்களில் கிடைக்கின்றன. அவையாவன.
வர்த்தமானன் பிரஸ், சென்னை
பிரேமா பிரஸ், சென்னை.
கலைஞர் பதிப்பகம், சென்னை.
கிண்டியில் உள்ள அருட் செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யா அவர்களின் ABT நிறுவனம்.
இன்னும் ஒரு சில பிரசுரங்கள் சிறு சிறு நூல்களாகவும் வெளியிட்டுள்ளன.
இதுவரை சென்னையில் 31 புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. அந்தபுத்தக கண்காட்சிகளில் திரு அருட்பாவிற்கென ஒரு தனி ஸ்டால் இருந்ததில்லை.
இந்த முறை நடைபெற்றது 32வது புத்தகக் கண்காட்சி ஆகும்.
இந்தப் புத்தக விழாவில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் திரு அருட்பாவிற்கு எழுதிய விரிவுரை நூல்கள், தயவு நூல்கள் மற்றும் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பா முதலான புத்தகங்கள் விற்பனை செய்வதற்கென்றே ஒரு தனி ஸ்டால் நிர்மாணிக்க வேண்டும் என தூத்துக்குடி சன்மார்க்க சங்க நிர்வாகத்தினர்களான திரு கலியுக வரதன், திரு கணேசன் முதலான அன்பர்களின் உள்ளத்தில் கடந்த ஆண்டே ஒரு எண்ணம் உதயமாயிற்று. அதனை திரு கலியுகவரதன், திருநெல்வேலி மாவட்டம் பாப நாசத்தில் நடைபெற்ற வாழ்வியல் பயிற்சி முகாமில் அன்பர்களிடையே வெளிப்படுத்தினார்.
அதன் பிரகாரம், புத்தக ஸ்டால் நடத்துவதற்குரிய டிபாசிட் தொகையை தமது சங்கத்தின் அன்பர்களின் ஒப்புதல் பெற்று அதனைச் செலுத்தி, உரிய முன் அனுமதி பெற்றனர்.
8.1.2009 முதல் 18.1.2009 வரை சென்னையில் தங்கி இருந்து புத்தக விற்பனை பணி புரிய தகுதியான தன்னார்வமுள்ள அன்பர்கள் தேவைப்பட்டனர்..
எனவே, பல்வேறு நாட்களில் இந்த இணைய தளத்தின் மூலம், சென்னையிலும், அதனைச் சுற்றியிலும் இருப்பவர்கள், புத்தக ஸ்டாலில் உள்ள அன்பர்களுக்கு உதவி செய்வதற்கு வரும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டது.
பலமுறை வலியுறுத்தியும், ஏனோ சென்னையில் வசிக்கும் அன்பர்களோ, அதனைச் சுற்றியோ, அருகில் வசிக்கும் அன்பர்களோ புத்தக ஸ்டாலுக்கு வந்து இந்த அரிய வாய்ப்பினைப் பயன் படுத்திக் கொள்ள முன்வரவில்லை. அது ஜீரணிக்கவே முடியாத ஒரு நிலையாக இருந்தது..
எனவே, மதுரை அன்பர்கள் இந்த பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.
1. திரு முரளீதரன். அருள் ட்ரஸ்ட் நிறுவனர், மதுரை
2. திரு T.R. ஜவஹர்லால், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், மதுரை.
3. திரு ஏ.ராமானுஜம், வள்ளலார்Org பெளண்டேஷன், மதுரை.
4. திரு சேதுராமன், மேட்டுக்குப்பம்.
5. திரு பாலகிருஷ்ணன், வில்லிவாக்கம், சென்னை.]
6. திரு கோசலராமன், சென்னை.
7. திரு ஜெகநாதன், பாடியநல்லூர், திருவள்ளூர் மாவட்டம்.
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட், 2008 மாதத்தில் கோயம்புத்தூர் மாநகரில் காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியிலும், தயா ஒளி இயக்கத்தைச் சேர்ந்த அன்பர் திரு ராம்தாஸ், திரு சிவக்குமார், அவரது துணைவியார் திருமதி தமிழரசி, திரு பிரபாகரன் முதலானோர் டிபாசிட் கட்டி, ஸ்டால் பிடித்தனர், மதுரை அன்பர் திரு ஏ.ராமானுஜம் முதலானோர் அங்கு சென்று இதில் கலந்து கொண்டு பணி புரிந்தனர்.
இவ்விதம் கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் திரு அருட்பா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு என தனி ஸ்டால் போடப்பட்ட செய்தியினை இணைய தளத்தில் கண்ட சன்மார்க்க அன்பர்களின் மத்தியில் இது போன்று ஏன், பல்வேறு மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தும்போது, திரு அருட்பா சம்பந்தப்பட்ட நூல்களையும் விற்பனை செய்யக் கூடாது என்ற வினா எழுந்துள்ளது. அதன் மூலம் அந்த ஏரியாவில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் பயன்பெற இது வழிவகுக்குமே என்பதுதான் அந்த அன்பர்களின் உள்ளக் கிடக்கையாக இருக்க முடியும்.
அவையெல்லாம் ஒரு புறமிருந்தாலும், மாநிலத்தின் தலைநகரான, தருமமிகு சென்னையில், திருஅருட்பிரகாச வள்ளற் பெருமானாரின் அருள் நூல்களை விற்பனை செய்வதற்கெனவும் வெளியூர் அன்பர்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக மையம் ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தீவிரமடைந்து வருகின்றது.
வள்ளலார் Org பெளண்டேஷனின் மூலம், வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் மூலம் வெளியிடப்பெற்ற வள்ளற் பெருமானின் திரு அருட்பா, ஆறு திருமுறைகள், உரை நடைப்பகுதி, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு நூல்கள், திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் முதலானவை விற்பனை செய்வதற்கு ஒரு இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் உதித்துள்ளது.
இந்த இணைய தளத்தினைக் காணும் சன்மார்க்க அன்பர்கள் விரும்பினால்..... அதாவது .. போதுமான தேவை (Response from the Sanmarga Members) இருந்தால் மட்டுமே இது போன்ற மையம் (அல்லது) ஏற்படுத்தப்பட வேண்டும்.
.இல்லை, நாங்கள், வடலூரிலோ, அல்லது திண்டுக்கல்லிலோ சென்று வாங்கிக் கொள்கின்றோம் எதற்கு சென்னையில் ஒரு புத்தக விற்பனை மையம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் அன்பர்களிடையே ஏற்பட்டு விட்டால், இது .. அனாவசியம்தான்.
எனவே, புத்தக விற்பனை மையம் தேவை என்பதற்கு எந்த அளவுக்கு அன்பர்கள் மத்தியில் வரவேற்பு (Response from the Sanmarga anbargal & organisations & interested persons) உள்ளது என்பதை, வரும் 20.2.2009 வரை பார்த்து விட்டு, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிர்வாகம் ஒரு முடிவை மேற்கொள்ளவிருக்கின்றது.
தேவைதான், அது சென்னையில் ஏதாவதொரு இடத்தில் இருந்தால் சென்னையிலும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள், சங்கங்கள், சன்மார்க்க சங்கம் நடத்தும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அலுவல் நிமித்தம் சென்னை வரும் இம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் பெற்றுச் செல்வதற்கும் வசதியாக இருக்கும் என விரும்பினால், இந்த இணையதளத்தில் தமது கருத்துக்களை, இச் செய்தி வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் தெரிவிக்க வேண்டியது.
தேவையில்லை எனில், அவரவர்கள் தமது வசதிக்கேற்ப, மேற்படி புத்தகங்கள் கிடைக்கும் இடம் தேடிச் சென்று வாங்கிக் கொள்ளலாம். என எண்ணினால், இந்த சிந்தனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம்.
என்ன அன்பர்களே, வள்ளலார் ஆர்க் நிறுவனம் ரெடி …
நீங்க .. ரெடியா ..
இணையதளத்தில் வரப்பெறும் பதில்களின் மூலம்தான் ஒரு முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
. விரையுங்கள் அன்பர்களே .. உங்களது பதிலை இணைய தளத்தின் மூலம் தெரிவிப்பதற்கு …
இங்ஙனம்,
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், மதுரை
8 Comments
KUMARESAN KRISHNAMURTHY
ஐயா,
வணக்கம்,
பொதுவாக எத்தனைப்பேர் இணைய தளம் பார்க்கிறார்கள், பார்க்காதவர்களுக்கு எத்தனைப் பேர் சொல்கிறார்கள் என்றலெல்லாம் கவனிக்க வேண்டியுள்ளது.
மேலும் தற்போது உள்ள சூழ் நிலையில் மாவட்டந்தோறும் இதுபோல் தனி ஸ்டால் தேவை.எனவே வள்ளலார் இணைய தளம் அனைவரிடமும் செல்ல வேண்டும், அதற்கு வடலூர் தைப்பூச நாட்களில் போதுமான விளம்பரம் செய்ய வேண்டும். ஃப்ரி (எந்த ஒரு வியாபார நோக்கும் இல்லாமல்) வள்ளலார் இணையத்தளம் செயல்படுவது அனைவரிடத்தும் தெரிந்தால் மட்டுமே போதுமான கருத்து கணிப்பு கிடைக்கும். இணைய தளத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதற்காக 2000 + மாணவர்களின் இ-மெயில் முகவரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. மிக விரைவில் இப்பணி முடிவுறும், ஒரு கட்டுரையை 500 க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வேண்டும் என்பதே என் ஆவல். வள்ளல் பெருமான் அருளால் இப்பணி நடக்கும், நடந்தேறும்.
மேலும் தங்கள் கேள்விக்கு எனது பதில் : சென்னையில் தேவை.
Sunday, February 8, 2009 at 22:43 pm by KUMARESAN KRISHNAMURTHY
alagusenthil
கடந்த 8.2.2009 அன்று தைபூசம் வடலூரில் ஆனந்த மகிழ்ச்சியில் கண்டு களிதேன் அழைபிதழை அனிப்பியதற்கு மிகவும் நன்றி. அடுத்த பூசம் கார்த்தீக் அவருகளை சந்திக்க விறும்பிகிறேன்
Sunday, February 8, 2009 at 23:23 pm by alagusenthil
asura_67
It is must to start a book center all about thiruarutpa because it is captial of tamilnadu .If possible Thituarutpa book center in district or main cities like madurai trichy,calem,coimbatore etc.This is right time to do the right thing.
ARUMUGAM SURENDRAN
Saturday, February 14, 2009 at 04:48 am by asura_67
Ramanujam jam
Replies received from 2 Sanmargis. It is equivalent to 2 lakhs people. Anyway.. till the date-line already fixed .. i.e. till 20.2.2009, replies are awaited.
VallalarOrg Foundation has a positive thinking only ..
Anyway.. response from the Viewers are expected till 20.2.2009.
Sunday, February 15, 2009 at 08:48 am by Ramanujam jam
Vallalar Groups
Dear Ayya,
It's very good Idea establish one place to distribute vallalar related books in One Main Place.
For Implementation , Some of my Ideas:
1. For Example, Hotel Saravana Bhavan, selling Thiru.murga Kirubanada Variyaar Books in all thier Hotels.
Normally More people will go to this hotel.Interested Persons will buy.
Normal People also can easily access the Location.
Here billing person itself , take care the selling of Books also.
In Kumbakonam, Som other hotel, they are selling Bhavat-Gita in the same above way.
Some Features:
1. we need not find any persons to sell books ( at least Thiruarutpa Core & Uraindai Only & Some CD's only). ( Billing Person take care ) .we can consult that (not only chennai), through out the tamil nadu ... It's better way of availabilty of vallalar books.
2. Another Approach is , Any Sanmarga Sangam, can take this instead of searching separate place.
In that sanmarga Sangam all books should be available.For regarding this , you can consult our Vallalar Devotee Jaganathan.
Endrum Anbudan...
Sunday, February 15, 2009 at 21:53 pm by Vallalar Groups
sukumar srinivasan
Yes . It is very much required. It is a long felt need of Vallalar devotees in and around Chennai to have a book centre selling/displaying books on Vallalar. The undersigned is an ardent devotee of Vallalar and is part of a Sanmarga sabhai which has been running for the past 5 years. The memmbers of this have been given Dheekshai by Gnanaguru Sri Siva Selvaraj, Kanyakumari. For sometime the undersigned was mulling the idea of spreading the Vallalar message through a media and the idea of a book center exclusive to Vallalar books is very much appealing. As such I am willing to start a book center at Ambattur,Chennai-53 at my own place. This center will be run on a no profit basis and it will be run with own investment. I would request for support from the foundation. kindly contact at the following:
Email ID : sukumar.sri@gmail.com
mobile: 9884097438
address: 23/10, Old Bank of Baroda Street, Near O.T. bus terminus, Ambattur OT, Chennai-53
Anbudan
S.Sukumar
Wednesday, February 18, 2009 at 23:35 pm by sukumar srinivasan
Ramanujam jam
Thanks for the reply.
A reply has been sent to the e.mail id furnished in the
message It may be seen.
VallalarOrg Foundation.
Thursday, February 19, 2009 at 00:34 am by Ramanujam jam
Ramanujam jam
Reply has been sent to the e.mail id furnished.
It may be seen.
VallalarOrg Foundation.
Thursday, February 19, 2009 at 00:36 am by Ramanujam jam