மதுரையில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான்
அருளிய திரு அருட்பா மற்றும் உபதேசம்
பெண்களுக்கென தனி சத் சங்கம் நடைபெறல்.
நாள் – 24-1-2009 சனிக்கிழமை.
மற்றும் 25-1-2009 ஞாயிற்றுக் கிழமை.
மதுரை மாநகரில், கோச்சடை செல்லும் வழியில் உள்ள ரயில்வே காலனியில்
சன்மார்க்க அன்பர் செல்வி லலிதா மணி அவர்கள் வீட்டில், 24.-1-2009 சனிக்கிழமை
மற்றும் 25.1.2009 ஞாயிற்றுக் கிழமைகளில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான்
அருளிய திரு அருட்பா மற்றும் உபதேசம் மற்றும் அவர் அருளிய அனைத்து
நூல்களின் பேரிலும் சத் சங்கக் கூட்டம் துவங்க உள்ளது.
இது போன்ற சத் சங்கம் மாதந்தோறும் 2 தினங்கள் (பின்னர் குறிப்பிடப்படும்)
நாட்களிலும் நடை பெறும்.
பத்து மாதங்களுக்கு இந்த தொடர் சத் சங்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இக் கூட்டங்களில் பெண்கள் மட்டும் பங்கேற்பர்.
அவர்களுக்கு சுத்த சன்மார்க்க நெறியினில் ஏற்படும் சந்தேகங்கள் மூத்த
சன்மார்க்க அங்கத்தினர்களைக் கொண்டு தெளிவுரை வழங்கப்படும்.
Write a comment