DAEIOU - தயவு
சென்னையிலும் மதுரையிலும் திரு அருட்பா சம்பந்தப்பட்ட புத்தகங்கள், ஆடியோ சி.டி.விற்பனை மையம்


ள்ளலார்ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.
வணக்கம், நாள் 11.1.2009
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் மூலம், திரு அருட்பா பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி.கள், சிங்கப்பூரில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது 11 ஆடியோ சி.டி.கள் மதுரை நாரயணபுரத்திற்கு வரப்பெற்றுள்ளன. இந்த சி.டி.களின் தயாரிப்புச் செலவு, பாடகர்கள் ஊதியம், Cost of C.D. ரெகார்டிங் தியேட்டர் செலவு, ஆர்க்கெஸ்ட்ரா, செலவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இதனை விற்கும் தொகை மிக மிகக் குறைவானதே ஆகும்.
லாப நோக்கம் இல்லாமல், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி அடங்கிய திரு அருட்பா பாடல்கள் அனைவரின் வீட்டிலும் ஒலிக்க வேண்டும்,என்ற உயரிய நோக்கில், அந் நிறுவனம், மிக மிகக் குறைந்த விலையில், கீழ்க்கண்ட விலாசத்தில் ஆடியோ சி.டி.களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இவை அனைத்துமே ஓரிஜினல் சி.டி.கள் (Original audio C.Ds produced by Thiru Arutpa Deiva Isai Amutham Project, Singapore). நீடித்து உழைப்பவை.
(2) அதற்கு அடுத்து, தற்போது, சென்னையில் பூந்தமல்லி ஹைரோடில் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி வளாகத்தில் 8.1.09 முதல் 18.1.09 வரை இந்த ஆண்டு நடைபெறும் புத்தக விழாவில் திருவருட் பிரகாச வள்ளலார் இயற்றிய திரு அருட்பாக்கள், உபதேசங்கள், மற்றும் திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் எழுதிய திரு அருட்பா உரை விளக்க நூல்கள், தயவு நூல்கள், திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் ஆகியவை தனி ஸ்டால் மூலம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த ஸ்டால் எண். 273. தமது சங்கங்களுக்கும் சரி, தமது மாவட்டத்தில் இயங்கும் கிளைச் சங்கங்களுக்கும் சரி,அல்லது சன்மார்க்க அன்பர்கள் தனியாக வாங்கினாலும் சரி- ஏதெது வேண்டுமோ, அவற்றை. அன்பர்களை அனுப்பி சென்னையில் நடைபெறும் புத்தக விழாவிலோ (18.1.2009 வரை) அல்லது மதுரை நாராயணபுரத்திலோ கீழ்க்கண்ட விலாசத்திலோ பெற்றுச் செல்லலாம்.
மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார்ஆர்க் பெளண்டேஷன்,
நிர். 2/244-1, தண்டல் முத்துக் கோனார் தெரு, நாராயணபுரம் (கிழக்கு),
புது நத்தம் ரோடு, மதுரை 14. பின் கோடு 625 014.
செல். (91) 97898 72120.
இனிமேல் புதிதாக வரப் பெறும் திரு அருட்பா பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி.களையும், மேற்காணும் நிறுவனத்தின் மூலம் சொற்ப விலையில் பெற்றுச் செல்லலாம். இது குறித்து கீழ்க்காணும் (Website) இணைய தளத்திலும் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Works of Vallalar : visit : www.vallalar.org (For free downloading)
மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.14