புத்தகக் கண்காட்சி, சென்னை
திருஅருட்பா புத்தகங்கள் மற்றும் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள்
விற்பனை மையம் ஸ்டால் எண்.273
பூந்தமல்லி ஹைரோடு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள
செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகம்..
10.1.2009 அன்று சென்னை அருகே உள்ள பாடிய நல்லூர் சன்மார்க்க சங்கத்திலிருந்து அன்பர்கள் திரு ஜெகநாதன் ஆகியோர் மேற்படி புத்தகக் கண்காட்சியில் அன்பர் திரு முரளீதரனுக்கு உதவியாகப் பணி புரிந்துள்ளனர்.
இன்று 11.1.2009 (ஞாயிறு) கீழ்க்காணும் அன்பர்கள் பாடிய நல்லூர் சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அன்பர்கள் மேற்கண்ட புத்தகக் கண்காட்சியில் உதவிபுரிவதற்காகச் செல்ல உள்ளனர்.
1) திரு குமார், பாடிய நல்லூர்
2) திரு காசி, பாடிய நல்லூர்
3) திரு வினோத், பாடிய நல்லூர்.
"தருமமிகு சென்னை" என வள்ளற் பெருமான் பாடி வைத்துள்ளதால், பாடிய நல்லூரிலிருந்து அன்பர்கள் மேற்கண்ட புண்ணியப் பணியில் தம்மை
ஈடுபடுத்திக் கொள்கின்றனரோ என எண்ணத் தோன்றுகின்றது.
சென்னையில் என்ணிலடங்காத சன்மார்க்க சங்கங்கள் சுத்த சன்மார்க்கத்தினைப் பரப்பி வருகின்றன.
அவர்கள் - தமக்குள் முறை வைத்து (By turn) தமது அங்கத்தினர்களில் ஓரிரு நபர்களை
அன்பர் திரு முரளீதரன் மற்றும் திரு கோசலராமன் ஆகியோருக்கு உதவி செய்வதற்கு
அந்த புத்தகக் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கலாம்.
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது -
என திருவள்ளுவப் பெருந்தகை குறள் பாடி வைத்தார்.
அதனைக் காட்டிலும் இந்தப் புண்ணிய காரியத்தில்
சென்னை அன்பர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் நோக்குதற்குரியது.
கண்காட்சி 18.1.2009 வரையிலும் தான்.
எனவே வள்ளற் பெருமானின் அருள் நூலகளை விற்பதற்கு ஸ்டால் பிடித்துக் கொடுத்த தூத்துக்குடி சன்மார்க்க அன்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், சென்னை மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள அன்பர்கள் இப் பணியில் மேற்கண்ட ஸ்டாலுக்கு, உதவிக்கு வரவேண்டும்