| சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது | |
|
|
| தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரேவுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 32-வது புத்தகக் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. இந்த கண்காட்சியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தொடங்கி வைத்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதைத் தொடங்கி வைப்பதாக இருந்தது. உடல்நலக் குறைவால் அவர் பங்கேற்கவில்லை. எனினும் அவரது உரை விழாவில் வாசிக்கப்பட்டது. இந்த விழாவில் எழுத்தாளர்கள் சி.மணி (கவிதை), ஆர்.சூடாமணி (சிறுகதை-நாவல்), ந.முத்துசாமி (நாடகம்), பேராசிரியர் நெடுஞ்செழியன் (கட்டுரை), கிரிஷ் கர்னாட் (கன்னட இலக்கியம்), எஸ்.முத்தையா (ஆங்கிலம்) ஆகிய 6 பேருக்கு 'கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி' விருது வழங்கப்பட்டது. இது, ரூ.1 லட்சம் ரொக்கம், பொற்கிழி, பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டது. புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சா.கந்தசாமி, திருப்பூர் கிருஷ்ணன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் உள்பட பலர் கலந்து கொண்டனர் |
நன்றி - மேலே உள்ள யாஹூ தமிழ் செய்தித் தாளுக்கு.
இத்தகைய புத்தகக் கண்காட்சியில்தான் ஸ்டால் எண்.273ல் திரு அருட்பிரகாசரின் திரு அருட்பா மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா ஆகியோரின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், 8.1.2009 - புத்தக விழாவில் முதல் நாளில் நடைபெற்ற செய்திகளை மேலே கண்ட விபரப்படி தெரிந்து கொண்டுள்ளீர்கள்.
சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மேற்படி புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் மற்றும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் இயற்றிய சுத்த சன்மார்க்க நூல்களைப் பெற்றுப் பயின்று பயன் பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
Write a comment