புத்தகக் கண்காட்சி 2009, சென்னை
8.1.2009 முதல் 18.1.2009 வரை.
திரு அருட்பா மற்றும் தயவு நூல்களுக்கென தனி
ஸ்டால் எண். 273.
இடம்- செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி, பூந்தமல்லி சாலை, சென்னை.
(பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
தூத்துக்குடி அன்பர் திரு கலியுக வரதன் மற்றும் அவரது சங்கத்தைச் சார்ந்த மூத்த சன்மார்க்க அன்பர்களின் பெரு முயற்சியால், இந்த ஆண்டு (2009) சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பா மற்றும் அது சம்பந்தப்பட்ட புத்தகங்களுக்கென்றே ஒரு தனி ஸ்டால் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது.
அதன் பிரகாரம் அந்த அன்பர், ஸ்டால் வைப்பதற்குரிய டிபாசிட் தொகை கட்டி. ஸ்டால் எண்.273 என்ற இடத்தையும் பிடித்துக் கொடுத்து விட்டார்.
மதுரையிலிருந்து அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அன்பர் திரு கோசலராமன் ஆகியோரால், இந்த புத்தக விற்பனை 8.1.2009 அன்று துவங்கப் பட்டுவிட்டது. அவர்களுடன் மேட்டுக்குப்பம் திரு சேதுராமன் அவர்கள் இணைந்து செயல்படுகின்றார்.
ஸ்டாலை நிர்வகிக்க போதுமான சன்மார்க்க அன்பர்கள் தேவைப்படுகின்றது.
கூட்ட நேரங்களில், விற்பனை ஸ்டாலில், கூடுதலாக அன்பர்கள் இருந்தால் தான் வரக்கூடிய அன்பர்களுக்கு புத்தகங்கள் குறித்து விளக்கிச் சொல்வதற்கும்,
பெருமான் அடைந்த நிலை மனித குலத்துக்கு எந்த விதத்தில் பயன் படக்கூடியது என்பதை எல்லாம் எடுத்துச் சொல்வதற்கும், உற்ற - ஆன்ம நேயம் மிக்க - சன்மார்க்க தன்னார்வத் தொண்டர்கள் மேலும் இருந்தால்
இன்னும் அந்த ஸ்டால் போட்டதன் நன்மை அனைவருக்கும் சென்றடையும்.
8.1.2009 அன்று உயிர் உறவு திரு சங்கரய்யா அவர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் , வந்து புத்தகங்களை எல்லாம் வாங்கிச் சென்றுள்ளார் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
புத்தக ஸ்டால் வேலை நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.30 வரையிலும் தான்.
மற்ற விடுமுறை நாட்களில், காலை 11.00 மணி முதல் இரவு 8.30 வரையிலும் உண்டு.
எனவே, இதனைக் காணும் சன்மார்க்க அன்பர்கள், சன்மார்க்க சங்கங்கள், தாமும் தமது அன்பர்களுக்குத் தேவையான புத்தகங்களை அந்த ஸ்டாலில் பெற்றுச் செல்லலாம் எனத் தெரிவிக்கப் படுகின்றது.
தயவுடன் ஒரு கோரிக்கை.
தமது சங்கத்தின் மூலம் 18.1.2009 வரை ஒரு சில சன்மார்க்கிகளை, அந்த புத்தக ஸ்டாலில் அன்பர் திரு முரளீதரனுக்கு உதவியாக அனுப்ப வேண்டப்படுகின்றது.
சன்மார்க்கம் தழைக்க வேண்டும் என விரும்புவோரும். நன்கு பரவ வேண்டும் என்று உளங் கொண்டிருப்போருக்கெல்லாம், இது ஒரு நல்ல அரிய சந்தர்ப்பம்.
எனவே, விரைந்து உதவுவீர் வள்ளல் பெருமானின் அருள் நூல்கள் விற்பதற்கு.