DAEIOU - தயவு
மதுரையில் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் சொற்ப விலையில் கிடைக்கின்றன.

ள்ளலார்ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.14
திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் சொற்ப விலையில் கிடைக்கின்றன.
நாள் 3.1.2009
வணக்கம்,
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் மூலம், திரு அருட்பா பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி.கள், சிங்கப்பூரில் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் அவர்களின் மேற்பார்வையில், தயார் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அந் நிறுவனத்தின் மூலம் திரு அருட்பா பாடல்கள் 11 ஆடியோ சி.டி.கள் வரப்பெற்றுள்ளன. ஆறு திருமுறைகளிலும் உள்ள எல்லா திரு அருட்பா பாடல்களையும் இசை வடிவம் பெறச் செய்ய வேண்டும் என சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான தயாரிப்புச் செலவு, பாடகர்கள் ஊதியம், Cost of C.D. ரெகார்டிங் தியேட்டர் செலவு, ஆர்க்கெஸ்ட்ரா, செலவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இதன் விற்பனைத் தொகை மிகவும் குறைவானதே ஆகும்.
லாப நோக்கம் இல்லாமல், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி அடங்கிய திரு அருட்பா பாடல்கள் அனைவரின் வீட்டிலும் ஒலிக்க வேண்டும், அனைவரும் அந் நெறியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில்,. அந் நிறுவனம், மிக மிகக் குறைந்த விலையில், கீழ்க்கண்ட விலாசத்தில் ஆடியோ சி.டி.களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இவை அனைத்துமே ஒரிஜினல் சி.டி.கள் (Original audio C.Ds produced by Thiru Arutpa Deiva Isai Amutham Project, Singapore). நீடித்து உழைப்பவை.
தமது சங்கங்களுக்கும் சரி, தமது மாவட்டத்தில் இயங்கும் கிளைச் சங்கங்களுக்கும் சரி எத்தனை வேண்டுமோ, அவற்றை. கீழ்க்கண்ட விலாசத்தில் அன்பர்கள் நேரிலோ அல்லது அன்பர்களை அனுப்பியோ பெற்றுச் செல்லலாம்.
மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார்ஆர்க் பெளண்டேஷன்,
நிர். 2/244-1, தண்டல் முத்துக் கோனார் தெரு, நாராயணபுரம் (கிழக்கு),
புது நத்தம் ரோடு, மதுரை 14. பின் கோடு 625 014.
செல். (91) 97898 72120.
தயாரிக்கப்பட்டு, இன்னும் வரப் பெறும் திரு அருட்பா பாடல்கள் அடங்கிய புதிய ஆடியோ சி.டி.களையும், மேற்காணும் நிறுவனத்தின் மூலம் சொற்ப விலையில் பெற்றுச் செல்லலாம். இது குறித்து கீழ்க்காணும் (Website) இணைய தளத்திலும் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.
இங்ஙனம்,
தயவுடன்,
மேனேஜிங் ட்ரஸ்டி,
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்.
செல் ;; (91) 97898 72120.