வடலூர் சத்திய தருமச் சாலையில் அணையா அடுப்பு..
வடலூரில் வள்ளல் பெருமான் ஏழை எளிய மக்களின் பசியாகிய நெருப்பினை அணைப்பதற்காக “தருமச் சாலையில்” அணையா அடுப்பினை ஏற்றி வைத்தார், பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யப் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என வள்ளல் பெருமான் அவர்கள் இந்த ஏற்பாட்டினைச் செய்தார்கள். அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அத்னை சன்மார்க்க உலகம் நன்கு அறியும்.
அப்பணி தடைபடாது நடைபெற வேண்டும் என்ற முறையில் சன்மார்க்க அன்பர்களும், பட்டி தொட்டிகளில் இருந்து வருவோரும் அரிசி முதலான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்து, தமது பங்களிப்பினை நிறைவேற்றுகின்றனர்.
ஏழை பணக்காரார் என்ற வித்தியாசம் பார்க்காமல், தினந்தோறும் மூன்று வேளைகளிலும், அன்னதானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் இதனை நிர்வகித்து வருகின்றது.
ஒரு அன்பர், இந்த இணையதளத்தின் (Suddha Sanmarga discussion forum) பகுதியில்,. வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த அணையா தீபத்திற்குப் பதிலாக, தெய்வ நிலைய நிர்வாகம், ஸ்டீமர் மூலம் உணவு தயாரிக்கும் பணியினை மேற்கொள்ள இருப்பதாகவும், மலேசியாவிலிருந்து வந்த அன்பர்கள் மூலம் இப் பணி நடைபெற இருப்பதாகவும், தமக்குத் தெரிந்த செய்தியினை வெளியிட்டுள்ளார்.
அவ்விதம் “அணையா அடுப்பினை” மாற்றினால், வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சத்திய ஞான தீபத்தையும் மின் விளக்காக மாற்ற வேண்டும் என்றால் ஒத்துக் கொள்வார்களா என்றும் அவர் கேட்டுள்ளார்.
காலத்திற்கேப்ப மாற்றங்கள் நிகழ்வது என்பதும் அது, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்றுதான் என்றிருந்தாலும், சில நியதிகளை யாரும் மாற்ற நினைப்பதில்லை.
குறிப்பாக, திருச்சி மாவட்டம் துறையூரில் இயங்கி வரும் அகத்தியர் ஆலயத்தில், இது போன்று, ஸ்டீமர் வைத்து உணவு தயாரிக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதே போன்று, தஞ்சாவூரில் இயங்கி வரும் அகத்தியர் ஆலயத்திலும், ஸ்டீமர் வைத்து உணவு தயார் செய்து வழங்குகின்றனர்.
ஒரே நேரத்தில் அதிகமான நபர்களுக்கு, வேகமாக உணவு தயாரிப்பதற்காக, இம் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
இச் செய்தி உண்மையா என்பதும் தெரியவில்லை.
வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த அணையா அடுப்பினை மாற்றுவது என்பது அன்பர்களின் மத்தியில் ஒரு கலக்கத்தைத்தான் ஏற்படுத்துகின்றது.
இது குறித்து அந்த அன்பரின் ஆதங்கத்திற்கு சன்மார்க்க உலகம், தனது கருத்தினை தெரிவிக்கலாமே ………
13 Comments
============================================================================================
அணையா அடுப்பை அணைக்கப் பார்க்கிறார்களா ?
இது சன்மார்க்க அன்பர்கள் பலருக்கும் கவலைத்தரும் ஒரு செயலாகும்.
அந்த அடுப்பு பல கால் அணையாமல் ஏழைகளின் பசி நெருப்பை அணைக்க அல்லவோ வள்ளல் விரும்பினார். இப்படி புதுமை மற்றும் சில காரணங்களால் அதை அணைக்க பார்ப்பது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
பலருக்கு உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்ய விரும்பினால் அதை தனியாக அருகில் வேறு இடத்தில் ஸ்டீமர் வைத்து செய்யலாம். அணையா அடுப்பின் மூலம் செய்யும் அண்ணா தர்மம் தொடர்ந்து நடைபெறட்டும். அதற்கு அணையா அடுப்பை அணைக்க வேண்டும் என்ற வார்த்தையே வேண்டாம்.
அந்த பழைய முறை யாராலும் எதனாலும் பதிக்காமல் இருக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
But I don't know detail information...
அணையா அடுப்பு அணையாமல் இருக்கும் படச்சத்தில், streamer முறை கொண்டு வரப்படலாம்.
நன்றி,
செல்வக்குமார்
the aniya addupu should however remain. please refer to our posting and see what miracles are happening at this sacred place.
http://www.vallalarspace.com/ArutJothiNilayam/Album/576
Arutprakasa Vallalar Deiva Nilayangal and the concerned Head
of the Department, viz., Hindu Religious and Charitable Endowments, Chennai a decision was taken to provide the
steamers .. that too .. in addition to the .. Anaiya Aduppu now
available.
This is just to speed up the preparation of the food at the time heavy arrival of devotees at the Dharmasalai. They also stated that the Senior Sanmargi Thiru Mu.Balasubramanian, of Chennai was also contacted in this regard, got his idea and other sources at Vadalur for changing the cooking method to steamer in addition
to the Anaiyaa Aduppu.
In this way, the Anaiyaa Aduppu is continued to cook the food for the downtrodden.. In addition to that, the steamer method is also going to be introduced for preparing the food etc.,just to speed up the cooking and supply it in a quick manner.
So the idea is welcomed.
By this time .. if the Steamer is provided at the Dharmasalai, the Sanmarga World is very much thankful to the man .. or Sangam who supplied it to Dharmasalai in the interest of all.
Vanakkam,
Daeiou Team.
அங்கு நீராவி முறையில் உணவு தயாரிப்பதை தொடங்கி விட்டதை கண்டேன். மேலும் வள்ளலாரின் அணையா அடுப்பிலும் உணவு தயாரித்துக் கொண்டு இருப்பதையும் கண்டேன். அந்த அடுப்பு தற்போதும் அணையாமல் இருக்கும் வகையிலும் உள்ளதைக் கண்டேன்.
நன்றி,
செல்வக்குமார்
K.Gurunathan,
Tirunelveli.
Kindly visit the article with photos of the newly added features under the reference given below.
{ContentRefr:2114}
The traditional " anaya aduppu " should not be changed. For easy and quick preparation of food for devoties, no harm to provide steamer in the kitchen.
whereas , the said kitchen should be construct separately . it must be away from the " anaya aduppu ". We should NOT give wrong direction to the next generation.
If we do so, the next generation would lit the " ARUT PRAKASA JOTHI " (DHEEPAM ) with electric spark light for JOTHI DHARSANAM.
NAM YAAR ? ELLAVATRAYUM MAATRA ? THINK WHOM I ?
CHANT ALWAYS, " ARUTPERUNJOTHI , ARUTPERUNJOTHI ; THANIPERUNKARUNAI, THANIPERUNKARUNAI "
wishes
K SRINIVASAN, THIRUNINRAVUR