4.1.2009 ஞாயிறு-திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் 7-ஆம் ஆண்டு நிறைவு விழா.
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்
மலையடிவாரம், திண்டுக்கல்
பதிவு எண் 6/1948.
மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு
(84-வது நிகழ்வு)
ஏழாம் ஆண்டு நிறைவு விழா
அழைப்பிதழ்.
அன்புடையீர்,
அன்பான வந்தனம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினாலும், தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் அருளாசியினாலும் வரும் 4.01.2009 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு 84வது மாதாந்திர ஆன்மீக இசை நிகழ்ச்சியும், ஏழாம் ஆண்டு நிறைவு விழாவும் நிகழ்வில் குறித்த வண்ணம் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருட்பிரகாச வள்ளலார் பேரருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தில் தினசரி காலை 7.30 மணிக்கு “அமுது” வழங்கப்படுகிறது.
தினசரி பகல் 11.00 மணிக்கு ஆதரவற்றவர்களுக்கு நடமாடும் சத்திய தருமச்சாலை ஊர்தியின் மூலம் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அன்னம் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்.
நாள் 4.01.2009 ஞாயிற்றுக் கிழமை
நேரம் – காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை
தயவுத்திரு தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் அருள் உரை
ஒலிபரப்பப்படும்.
பின்பு “சத் விசாரம்” நடைபெறும்
நேரம் – மாலை 6.00 மணி
இறைவணக்கம்
அருட்பெருஞ்ஜோதி ஆன்மீக அறக் கட்டளை
மாலை நேர வகுப்பி மாணவிகள்
ஆண்டறிக்கை வாசித்தல் – தயவு திரு மேடா B. நித்தியானந்தம்
செயலாளர், அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்.
திரு அருட்பா இன்னிசை
தமிழ் இசை சங்கீத கலாநிதி
திரு அருட்பா இசைச் செம்மல்
திரு அருட்பா கானமணி
சப்தநாத பிர்ம சிம்மக் குரலோன்
தஞ்சை தயவுத்திரு M. ஞானமணி ராஜப்பிரியர் குழுவினர்
ஜோதி வழிபாடு.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே குவலய மெல்லாம் ஓங்குக.
இங்ஙனம்,
விழாக் குழுவினர்.
Write a comment