25.12.08 (வியாழன்) மதுரை ரயில்வே காலனியில் சுத்த சன்மார்க்கக் கூட்டம் நடந்த விபரம்.
25.12.2008 அன்று காலையில் சுமார் 10.00 மணி அளவில், சுத்த சன்மார்க்கக் கூட்டம், கோச்சடை செல்லும் வழியில் உள்ள ரயில்வே காலனியில் சன்மார்க்கி செல்வி லலிதா மணி அவர்கள் வசிக்கும் வீட்டில், நடைபெற்றது. சன்மார்க்க சான்றோர் பெருமக்களும் ரயில்வே காலனி, மற்றும் மதுரையின் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான சன்மார்க்க அன்பர்கள், தங்களது குடும்பத்தினருடன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அன்னை திருமதி மீனாம்பாள் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தலைவர் திரு டி.ஆர்.ஜவஹர்லால், ஞான தீபம் பத்திரிக்கை ஆசிரியரும் அருள் அறக்கட்டளை ட்ரஸ்டி திரு முரளீதரன், அருள் ட்ரஸ்ட் உறுப்பினர்களுடனும் , தயவு விஜயராமன் அவரது துணைவியார், குழந்தைகள், தலைமை ஆசிரியர் (ஓய்வு) திரு மாணிக்கம், திரு ஹரிகோவிந்தன், அருட்பா திரு ரெங்கநாதன், சம்மாட்டிபுரம் சன்மார்க்க அன்பர் திரு கண்ணப்பன் அவரது மனைவியார், நாராயணபுரம் தயவு அன்பர் அவரது மனைவியார், செக்கானூரணியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் திரு ராமசாமி, சன்மார்க்கப் பெரியவர் தாயுமானவர், மலேசியாவிலிருந்து வந்திருந்த திரு என், குமணன் (இ.மெயில் kumanan62001@yahoo.com) அவரது துணைவியார், ஊமச்சிகுளம் திரு சந்திரமோகன், பள்ளி மாணவர்கள், அருள் ட்ரஸ்டில் உள்ள ஏனைய உறுப்;பினர்கள் ஆகியோரும் அருகில் வசிக்கும் மூத்த அன்பர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐயர் பங்களாவைச் சேர்ந்த மூத்த சன்மார்க்கி திருமதி சிவகாமி அம்மையார். செட்டியபட்டியைச் சேர்ந்த சன்மார்க்கி திருமதி அம்மாக்கண்ணு அம்மாள் அவரது பேரக்குழந்தைகள், மற்றும் திரளான சன்மார்க்க பெண்மணிகள் அருகில் வசிப்போர் ஆகியோர் திரளாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பவுண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ராமானுஜம் தலைமை தாங்கினார்.
அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் சொல்லி கூட்டம் துவக்கப்பட்டது. முதலில் 5 நிமிடம் புருவ மத்தி சிற்சபையை நினைத்து தியானம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சத்திய சிறு விண்ணப்பம் திருமதி சிவகாமி அவர்களால் அன்பர்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
அருட்பெருஞ்ஜோதி அகவல், திரு மாணிக்கம் (தலைமை ஆசிரியர்-ஓய்வு) அவர்களால் துவங்கப்பட, அனைத்து சன்மார்க்க அன்பர்களும் அதனைத் தொடர்ந்து படித்தனர்.
அதனைத் தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி அட்டகம் அன்பர்களில் சிலரால் படிக்கப்பட்டது.
மலேசியாவிலிருந்து வந்திருந்த சன்மார்க்க அன்பர் திரு எம். குமணன் தான், மலேசியாவில், செலோங்கார் என்ற பகுதியில் சன்மார்க்க சங்கம் நடத்தும் திரு கோபால்சாமி அவர்கள் மூலம், சன்மார்க்கக் கல்வி பயில்வதாகத் தெரிவித்தார். இந்தியா வந்தபின்,. தாம் கலந்து கொள்ளும் சன்மார்க்கக் கூட்டம் இது என்றார்.
அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் தயாரிக்கப்பட்ட 10 ஆடியோ சி.டி.களை, அவர் பெற்று சென்றார். மேற்கொண்டு தேவைப்பட்டால், சிங்கப்பூர் அன்பர் திரு சிவக்குமார் அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பின்னர், அருட்பா திரு ரெங்கநாதன் அவர்களால் பேரன்புக்கண்ணி பாடப்பட்டது.
ஜோதி வழிபாடு மாவட்டத் தலைவர் திரு டி. ஆர். ஜவஹர்லால் அவர்களால் துவக்கப்பட, அனைத்து அன்பர்களும் படிக்கப்பட்டது. அதன் பின் தியானம் மேற்கொள்ளப்பட்டது.
பின்பு, திரு அருட்பா பாடல்கள், திரு ரெங்கநாதன். திரு தாயுமானவன், திருமதி சிவகாமி அம்மையார், திரு ஹரிகோவிந்தன், மற்றும் திருமதி அம்மாக் கண்ணு அம்மாள் ஆகியோரால் பக்தி ரசத்துடன் பாடப்பட்டன
. அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம், அகவல் பாராயணம், திரு அருட்பா பாடல்கள் முதலானவற்றைப் பாடியது .. ..மற்றும் சுத்த சன்மார்க்க கூட்டங்களால்,. அப் பகுதி முழுவது,ம் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்பட்டன.
சன்மார்க்கம் கடைப்பிடிக்கும் 2 குடும்பங்களில், திருமணம் புரிவதற்கு தகுதி வாய்ந்த பெண் வேண்டுதல்.
இந்தக் கூட்டத்தில் , கீழ்க்காணும் இரண்டு அன்பர்களுக்காக, வள்ளல் பெருமான் வகுத்த சன்மார்க்க ஒழுக்கம் மேற்கொள்ளும் குடும்பத்திலிருந்து சைவ உணவு உட்கொள்ளும் Degree முடித்த பெண்கள் யாரேனும் இருந்தால் பெற்றோர்களுடன் கலந்து பேசி, மனப் பொருத்தம் மணப் பொருத்தம் இருப்பின், அவர்களை திருமணம் செய்து கொள்வதற்காக, வரன்கள் வேண்டி, அறிவிக்கப்பட்டது.
(1) மேட்டுக்குப்பத்தில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு சேதுராமன் அவர்கள், தனது மகன் K.P.S. சத்யஜோதிக்காக பெண் தேடுகின்றார். திரு சத்ய ஜோதி, சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் அக்கவுண்டண்டாகப் பணியாற்றுகின்றார். அவரது வயது 32 ஆகும்.
(2) சென்னை எழும்பூரில் (வயது 29) ரயில்வே டிக்கட் வசூலிப்பவராகப் பணிபுரியும் (Railway Ticket Collector) திரு பாஸ்கரன் என்ற சன்மார்க்க அன்பருக்காகவும் பெண் வேண்டி அறிவிக்கப்பட்டது. அவர் சென்னையைச் சேர்ந்தவர்.
விருப்பமுள்ளவர்கள், இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அன்னதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 75 நபர்கள் இந்த சன்மார்க்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர். அனைவருக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.
Write a comment