DAEIOU - தயவு
20.12.2008, 21.12.2008 மதுரை மாவட்ட சன்மார்க்க நிகழ்ச்சியில் வள்ளலார் குறித்து பசும்பொன் பெருமகனார் 1949ல் பேசிய உரை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார் 12.6.1949ந் தேதியன்று மதுரையில் ஆற்றிய சுத்த சன்மார்க்க அருளுரை-புத்தகம்.

வரும் 20.12.2008 (சனி) மற்றும் 21.12.2008 (ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் மதுரை மாநகரில் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கமும், மதுரை மாவட்ட சுத்த சன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்பும் சேர்ந்து பேரணி, சன்மார்க்கப் பயிற்சிமுகாம் முதலானவற்றை நடத்த உள்ளன.

இதற்கான முழு முயற்சிகளையும், மதுரை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் மற்றும் மேற்படி சங்கத்தின் செயலாளர் திரு P.R. சுப்ரமணியன் ஆகியோர் தனது அலுவல் குழுவினருடன் சேர்ந்து செய்து வருகின்றனர்.

கீழ்க்காணும் சிறப்பு நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெற உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட சன்மார்க்க சங்க அங்கத்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் பெருமகனார் அவர்கள், 12.-6-1949-ஆம் தேதியன்று, மதுரையில் வள்ளல் பெருமானாரைப் பற்றியும், சுத்த சன்மார்க்கத்தைப் பற்றியும் பேசிய உரையினை சொற்ப விலையில் புத்தக வடிவில் கொடுக்க உள்ளனர்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் நான்கு மாசி வீதிகளிலும் சுற்றி வர, கஜமுக ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுத்த சன்மார்க்க புத்தகங்கள், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளின் திரு அருட்பா பாடல்களுக்கு அளித்துள்ள விளக்க நூல்கள் மற்றும் தயவு நூல்கள்,. விற்பனைக்கு கிடைக்கும்.

சென்னையில் உள்ள பிரேமா பிரஸ் மூலம் அண்மையில் வெளிவந்துள்ள வள்ளல் பெருமானின் வாழ்க்கை வரலாறு புத்தகம் இந் நிகழ்ச்சியில் கிடைக்கும்.

திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் தயாரிக்கப்பட்ட திரு அருட்பா பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி.கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதால், அனைவரும் தமது குடும்பத்தாருடனும் சுற்ற்ம் சூழ வருகை தரும்படியும், அருள் விளக்கம் பெற்றுச் செல்லுமாறும் விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.