கோழி, ஆடு, வளர்க்கக் கூடாது, கண்மாயில் மீன் பிடிக்கக் கூடாது .. தீவிர சுத்த சன்மார்க்கம் கடைப்பிடிக்கும் கிராமம் .. குறித்த தகவல்
புதுக் கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்கம் 4.12.2008 அன்று பார்வையிடப்பட்டது. அப்போது அங்கிருந்த அன்பர் திருஞானம் என்பவர் அந்தச் சங்கத்தின் செயல்பாடுகளைச் சொன்னார்.
அத்துடன் நில்லாமல், புதுக்கோட்டையின் அருகே வாடிமனைப்பட்டி என்ற ஒரு கிராமம் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து 2 கி.மீ நடந்து தான் செல்ல வேண்டும்.
அந்த கிராமத்தில் சுத்த சன்மார்க்கம் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.
(1) அங்கே கோழிகள் வளர்ப்பதில்லை.. ..
(2) ஆடுகள் வளர்ப்பதில்லை…. ..
(3) ஞாயிற்றுக் கிழமை எல்லா ஜீவராசிகளுக்கும் விடுமுறை
என்று பட்டியலிட்டுக் கொண்டே போனார்.
இப்படியும் ஒரு அதிசயமான கிராமம் இருக்க முடியுமா .. .. என வியப்படைந்த பொழுது, அங்கு 2 பெண்கள் வந்தனர்.
இதோ இவர்கள், அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களிடமே நேரில் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றார்.
வந்த இருவரும் தாயும் மகளும்.
தாயார் பெயர் திருமதி ரெத்தினம் (கணவர் பெயர்) திரு சின்னையா. மகளின் பெயர் (செல்வி) அருட் சுடர்
அதன் பின்னர் இன்னும் ஒரு சிலர், அதே கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் வருகை புரிந்தனர்.
அவர்களை விசாரித்தபோது, ஆமாம். அவர் கூறியது உண்மைதான். வாடிமனைப் பட்டி கிராமத்தில் சன்மார்க்கக் கொள்கைகள் கடந்த 50 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
அனைவரும் சுத்த சன்மார்க்கிகளாக மாறிவிட்டனர்.
இந்த கிராமத்தில் கோழிகள், ஆடுகள் வளர்க்காததற்கு சிறப்பான காரணம் .. வேரொன்றுமில்லை ..
அவைகளை வளர்த்தால் .. ஒரு கால கட்டத்தில் அவைகளை கொன்று தின்னும் எண்ணம் வளரும். எனவேதான் வளர்ப்பதில்லை என்றனர்.

கண்மாய்கள் அழியும்போது (தண்ணீர் வற்றும்போது) அதில் வளர்ந்த மீன்களையும் நாங்கள் பிடிப்பதில்லை. அவை தானாகவே இறந்து விடும் என்றனர். மீன்களைப் பிடித்தால், அதனை கொன்று தின்னும் எண்ணம் வளரும். எனவே யாரும் மீன்களைப் பிடிப்பதில்லை.
பயிர்களுக்குப் பூச்சி மருந்து அடிப்பதில்லை .. ..அவை இறந்துபடுமே என்ற எண்ணத்தில் .. ..
கிராமத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் வாராந்திர விடுமுறை
பிறக்கும் குழந்தைகளுக்கு ‘அ’ என்ற உயிரெழுத்தில் தான் தற்பொழுதெல்லாம் பெயரிடப்படுகின்றது என்றனர்.
அதற்கு என்ன சிறப்புக் காரணம் என வினவியபோது, அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தில் முதல் எழுத்து ‘அ’ தானே ..
எனவேதான் இவ்வாறு ‘அ’வில் ஆரம்பிக்கும் பெயர்களை வைக்கின்றோம் என்றனர்.
என்ன தாக்கம் ஏற்பட்டிருந்தால் இந்த அன்பர்கள் இவ்வளவு தீவரமாக இருக்க முடியும் .. என்ற எண்ணத்தில் .. சில பெயர்கள் சொல்ல முடியுமா எனக் கேட்டபோது…
சற்றேனும் தாமதிக்காமல், (மகள்-(செல்வி) அருட்சுடர் .. பொரிந்து தள்ளினார்.
அனிதா..
அரவிந்த ராஜ்..
அருட் செல்வம்..
அருண்குமார்..
அருள் அரசன்..
அருட் பிர்காசம்..
அன்பரசன்..
அன்பழகன்..
பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று.
சற்றே ஆசுவாசப்பட வேண்டியதாயிற்று.
இவ்வளவு தீவிரத்தினை இந்த கிராமத்தில் ஏற்படுத்திய யாரேனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்ட போது ..
அவர் பெயர் திரு முத்தையா என்றனர். அவர், சன்மார்க்க டைரக்டர் என்று சொன்னார்கள். 2 மாதங்களுக்கும் முன்புதான் அவர் இறந்துள்ளார்.
அவரது மகன் சத்திய சீலன் அங்கு வந்திருந்தார்.
திரு முத்தையா அவர்கள் செய்த ஒரு தீவிரமான காரியம் என்னவென்றால்…

அந்தக் காலத்திலேயே சைக்கிளில் அன்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 99 கிராமங்கள், பட்டி தொட்டி எல்லாம் சென்று, சன்மார்க்கக் கல்வியைப் புகட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 128 கிளைச் சங்கங்கள் உள்ளன என்ற தகவல் ஆச்சரியப்பட வைத்தது.
தாலுகா அளவில் ஒவ்வொரு சன்மார்க்க சங்கம் கூட இல்லாத மாவட்டங்கள் பல இருக்கும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில், சன்மார்க்கக் கல்வி பரப்புவதில் எவ்வளவு தீவிரமான ஈடுபாட்டுடன் இருந்துள்ளனர்.
எவ்வளவு உன்னதமான பணி..
சன்மார்க்கத்திற்கு எதையும் செய்யக் கூடாது .. ஆனால்,,தமது பெயர் பத்திரிக்கைகளில் வரவேண்டும் என ஆர்வம் காட்டும் நபர்கள் சன்மார்க்க சங்கங்களில் இருந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்,
இப்படியும் ஒரு மாமனிதரா .. .. ?
ஆச்சரியம்தான் அங்கு மிஞ்சியது..

2 Comments
This message is the eye opener to all the people . Many people who still believe that i did that , it was done by me, I made so and so etc.............etc.. why that the word comes as I?
Is it not ignorance?
Many people are doing the wonderful services without coming in to the screen. This is only the true others are just illusions.
Earning the name and fame through various activities will not give fruitful result.
வாழ்க வாடிமனைப்பட்டி மக்கள்! வளர்க வள்ளளார் பணி!
with best regards
K.Kumaresan
Thankyou for Good&Happy Message For Vadipati GramaMagal's Sanmarga service(Karunai) Life Activities.I am very Happy to this Message.I Have Very Appreciate to Sister Arulsutar's Good Answer&Other People's Karunai Answers.
Vallalar Must Given to the Deathlesslife in to KarunaiMughu Muthaiya Avl.I am
Very Confirm not Doubt.Wish you Vallalar Blessings to Each&Every Children,Younger&Seinor Citizen.One day I Will going to this Village.My Future Chidren are Study in Sanmarga Education in Village.These Village are Good Example of Sanmarga Village. Vallalar Blessings to this Village.
With Vallalar Loving,
AruljothiSujatha,