திரு அருட்பா பாடகர்கள் அறிமுகம்…
மதுரை மாநகரில் திருஅருட்பா மணி- ரெங்கநாதன் ….
மதுரை என்றாலே மதுரமான (இனிமையான) பாடல்கள் தவழும் இடம் என
பாடகர்கள் பொருள் கொள்கின்றனர்.
மதுரையிலே, திரு அருட்பா பாடல்கள் பாடுவதில் வல்லவர் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் நீங்கள் எல்லோரும் நன்கு அறிந்தவர்.
அவர் இயற்பெயர் ரெங்கனாதன் என்பதாகும். ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களில் அளவிலாக் காதல் கொண்டவர். எங்கு சென்றாலும், திரு அருட்பாவினை இசையுடன் பாடுவதில் வல்லவர்.
மதுரையில், பெரியார் பஸ் ஸ்டாண்டின் அருகில் உள்ள “இம்மையில் நன்மை தருவார்” ஆலயத்தில், இவர் வார வழிபாடு, மாதாந்திர பூச நாள் வழிபாடு முதலானவற்றினை முன்னின்று நடத்தி வருகின்றார்.
ஆரம்ப காலங்களில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் பாடல்களை இந்த ஆலயத்தில் பாடுவதை ஆட்சேபித்த கோவில் நிர்வாகம், இவரது குன்றாத ஆவல், திரு அருட்பாவினை இவர் பாடும் பொழுது ஏற்படும் மன ஆறுதல், பல திரு அருட்பா பாடல்களை மனமுருகப் பாடும் இவரது தன்மை முதலானவற்றைக் கண்ணுற்று, தனது எதிர்ப்பினை வாபஸ் பெற்றுக் கொண்டு, இவரை, இந்த ஆலயத்தில், நிகழ்ச்சிகள் நடத்துவற்கு அனுமதி தந்துள்ளது.
திரு அருட்பாவில் திருவடிப் புகழ்ச்சி, மும்மொழிகளின் கலப்புப் போல் காட்சி தரும். திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள், அதற்கு எழுதிய உரை விளக்கத்தினை படித்தால், எவ்வளவு ஆழமான சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அதிலே பொதிந்துள்ளன என்பது தெரியும்.
இறைவனின் திருவடிப் பெருமையினை அனைவரும் அறிந்து கொள்வதற்காகவே இதனை வள்ளல் பெருமான் பாடிச் சென்றுள்ளார். அந்த திருவடிப் புகழ்ச்சியினை, மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறமையினன இவர் பெற்றவர்.
வள்ளல் பெருமானின் திரு அருட்பாக்களை அந்த ஆலயத்தில் பாடி பரவி, அனைவரது கவனத்தையும், சுத்த சன்மார்க்கக் கருத்துக்களின்பால் ஈர்த்து வருகின்றார்.
மதுரையில் சன்மார்க்க நிகழ்ச்சி என்ற ஒன்று எங்கு நடைபெற்றாலும், அங்கு தவறாமல், இவரது பாடலும், பிரசங்கமும் நடைபெறுவது மிகவும் பிரசித்தம்.
இவரது வயோதிகம், திரு அருட்பாவில் ஆழ்ந்த ஞானம், அருட்பாவினைப் பாடுவதில் பாண்டித்தியம், திரு அருட்பா கான மழை, முதலானவை இவருக்கு வள்ளல் பெருமான் கொடுத்துள்ள அருட் கொடைகள்.
இவரது இசைப் புலமையினை அறிந்த திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள், இவருக்கு, அருட்பா மணி என்ற பட்டத்தைக் கொடுத்துச் சிறப்பித்துள்ளார்கள்.
என்ன .. .. உங்களுக்கும் இவர் பாடும் திரு அருட்பா பாடலைக் கேட்க ஆர்வம் வந்து விட்டதா ?
அல்லது உங்கள் ஊரில் உள்ள இசை நிகழ்ச்சியில் இவரது திரு அருட்பா பாடல்களை ஏனையோரும் கேட்டு அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா ? …
இவரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண் ..
97158-67756.
Write a comment