வடலூர் சத்திய ஞான சபையில் திரு அருட்பா பாடும்
சன்மார்க்க சான்றோர் திருமதி சரோஜா....
வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி உள்ளார்.
புறத்தில் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான், இதனை ஏற்படுத்தி தலை நடு காற்குளத்தே
உள்ள சிற்சபையில் இக் காட்சியினை சன்மார்க்க அன்பர்கள் கண்டு களித்து உலகியல்
நடத்த வேண்டும் என்றார்.
அனக நெறி பயின்று, சுத்த சன்மார்க்க வழியில் நிற்க வேண்டும் என்று சொல்லி
வைத்தார். அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி திரு அருள் பாலிக்கும் இடமான
வடலூர் சத்திய ஞான சபையில் மெய்யன்பர்கள் அனனவரும் தினந்தோறும் சென்று வழிபடுகின்றனர்.
அந்த இடத்தில் பல அன்பர்கள் பல சன்மார்க்கப் பெரியோர்கள் எந் நேரமும் பாடிப் பரவும்
நிகழ்ச்சியும் அன்றாடம் நடைபெறுகின்றது.

அந்த ஆடகப் பொற்சபையில் திரு அருட்பா பாடுவதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்க
வேண்டும். அதுவும் ஆஸ்தான .. திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் .. பாடகராக ..
பாட வேண்டும் என்றால் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அப் பொறுப்பு ஏற்றிருப்பவர் பெயர் திருமதி சரோஜா என்பதாகும். இவர், ராமநாதபுரம்
மாவட்டத்தினைச் சேர்ந்தவர். இசை மழை என்று பலர் பலவிதமாகப் பாடினாலும், திரு அருட்
பிரகாசரின் அருள் நடனம் புரியும் இடத்தில் பய பக்தியுடன் பாடுவதற்கு இவருக்கு ஆண்டவர்
அருள் பாலித்திருக்கின்றார்.
அவர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதியின் முன்பு தனியே திரு அருட்பா பாடும் காட்சியும், .. .. .. ..
அன்பர்களுக்கு மத்தியில் திரு அருட்பா பாடும் காட்சியும்,

அவ்வளவு இனிமையாக திரு அருட்பா பாட அவருக்கு வள்ளல் பெருமான் அருளினை வழங்கியுள்ளார்.
நீங்களும் கேளுங்கள் .. வடலூர் செல்லும் ;பொழுது .. .. .. .. ..
Thankyou information for KarunaiMughu.Thirumathi.Saroja Avl.
Wish you vallalar Blessings to KarunaiMughu.Saroja Avl.I am Very Happy to Good Information.
With Vallalar Loving,
AruljothiSujatha