DAEIOU - தயவு
,சென்னை - வேப்பம்பட்டு - மறைமலை நகர் சன்மார்க்க சான்றோர்கள்.

உற்ற துணை உள் ஒளியே .. திரு அருட்பிரகாச வள்ளலார்
திரு க.கிருஷ்ண மூர்த்தி.
இந்தப் படத்தில் உள்ள இருவரும் மிகச் சிறப்புப் பெற்றவர்கள். ஒருவர் பெயர் திரு க.கிருஷ்ணமூர்த்தி, இவர், வேப்பம்பட்டு சன்மார்க்கத்தின் சங்கத் தலைவராக உள்ளார். வயது 70க்கும் மேலாகிறது. வள்ளல் பெருமானின் கருணையினை வேண்டி திரு அருட்பா பாடல்களை மனம் உருகிப் பாடுகின்றார். சங்கத்தினை திறம்பட நடத்தி வருகின்றார். உற்ற துணை உள் ஒளியே .. திரு அருட்பிரகாச வள்ளலார் என்ற நூலினை எழுதி அருளுரை வழங்கி உள்ளார்.
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் என்றால் எங்கென்றாலும் ஓடோடி வருகின்றார். கடந்த 11.11.2008 அன்று - இவர், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் சென்னையில் நீண்ட காலம் தங்கியிருந்த தங்கச் சாலை தெருவில் அமைந்த ஷ்ரீ விசா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு (மேல் மாடியில் உள்ளது) வந்திருந்தார். அந்தப் பள்ளியின் தாளாளரின் நினைவு நாளுக்கு (12.11.2008) ,அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் இங்கே வந்திருந்ததாகச் சொன்னார்.
உடன் இருக்கும் அம்மையார் பெயர் திருமதி நாக புஷ்பம். இவரது உறவினர்தான் அந்தப் பள்ளியின் தாளாளர். இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு பாரீஸில் நடைபெற்ற சன்மார்க்க மாநாட்டில் கலந்து கொண்டவர். தற்போது இவர் சென்னையை அடுத்த மறைமலை நகரில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றார். பூச நாட்களில் வடலூர் வருவதைத் தமது வழக்கமாகக் கொண்டுள்ள இவர், மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர். வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுபவர். தாம் பிறந்த இடம் வியாசர்பாடி என்றார்.
வள்ளல் பெருமானுக்குப் பாம்பும் பணிந்ததே அது, தங்கச் சாலைக்கு அருகேதானே என்று இவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, வாருங்கள் நானும் அங்கேதான் செல்கின்றேன் என, மதுரையில் இருந்து சென்றிருந்த தயவு அன்பரையும் பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள அந்த ராமலிங்க சாமி கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய உதவினார்.
(போட்டோ தனியே பிரசுரிக்கப்படும்)