திருவள்ளூர் மாவட்டம் – பொன்னேரி சன்மார்க்க சங்கம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத் தலைமை இடத்தில், பொன்னேரியில் அமைந்துள்ளது. இது ஒரு டவுன் பஞ்சாயத்து ஆகும். தாலுகா அலுவலகமும் இங்கு அமைந்துள்ளது. டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் அருகில் சமரச சன்மார்க்க சத்திய சங்கம் அமைந்துள்ளது.
இந்த சன்மார்க்க சங்கம் 1954ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. கீழ்க்கண்ட நபர்கள், இங்கு சன்மார்க்க சங்க உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து இந்த சங்கத்தினைத் திறம்பட நடத்தி வருகின்றனர்.
தலைவர் .. திரு மனோகரன்.
செயலாளர் .. திரு கலைச் செல்வம்.
பொருளாளர் .. திரு பி.எஸ்.நடராஜன்.
துணைத்தலைவர் .. திரு சுந்தர்.
இச் சங்கத்தில் கட்டப்பட்டுள்ள சத்திய ஞான சபையில் ஒரு புறம் வள்ளல் பெருமானையும், நடுவில் அருட்பெருஞ்ஜோதி தீபத்தினையும், மற்றொரு பக்கம் அருட்பெருஞ்ஜோதி அகவலினையும் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றது.
தர்மச் சாலை, உணவு தயாரிக்கும் அறை என தனித்தனி அறைகளாக உள்ளன.
தற்போது இச் சங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தினையும் அன்பர்கள், உள்ளூர் பிரமுகர்களின் உதவியுடன் சுமார் ரூ.5 லட்சக் கொடுத்து விலைக்கு வாங்கி, குளியல் அறை முதலானவற்றைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அன்னதானம் முதலானவை இச் சங்கத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியில், இச் சங்கம் அமைந்திருந்தாலும், சென்னையிலிருந்து புறப்பட்டால், வரும் வழியில், பாடிய நல்லூர் வந்து (17 கி.மீ) அங்கு ஒரு சன்மார்க்க சங்கத்தைப் பார்த்து விட்டு, இங்கு வரலாம்.
சென்னையிருந்து இங்கு வருவதற்கு, மொத்த தூரம் சுமார் 35 கி.மீ. ஆகும். இதனை அடுத்து 4 கி.மீ.தூரத்தில்தான் வள்ளல் பெருமானின் தாயார் திருமதி சின்னம்மையார் பிறந்த சின்னக் காவனம் என்ற ஒரு அருமையான கிராமம் உள்ளது. அங்கும் சிறப்பாக இயங்கும் ஒரு சன்மார்க்க சங்கம் உள்ளது. அதனையும் அன்பர்கள் காணலாம்.
Write a comment