DAEIOU - தயவு
வள்ளலாரிடம் பாம்பும் பணிந்தது - சென்னை பேசின் ப்ரிட்ஜ் அருகே.

வள்ளலாரிடம் பாம்பும் பணிந்தது.

வள்ளல் பெருமானின் வரலாற்றினை அறியாத சன்மார்க்கிகள் இருக்க முடியாது. பெருமான் தனது

அன்பர்கள் குழாம் சகிதம் தாம் வசித்து வந்த இடத்திலிருந்து வேற்றூர் சென்று கொண்டிருந்தார்.

காட்டின் நடுவே சென்று கொண்டிருந்தபோது ஒரு பாம்பு வந்தது. உடன் வந்த அன்பர்கள்

அனைவரும் பயத்தில் என்னவென்று செய்வதறியாது ஓடினர். ஆனால் வள்ளல் பெருமானோ அந்த

இடத்தை விட்டு நகரவில்லை. பாம்பு வள்ளல் பெருமான் அருகில் வந்தது.- கடிக்கவில்லை. ஆனால்

காலில் பணிந்து நின்று பின்னர் ஓடிவிட்டது. இந்த அதிசயத்தை அன்பர்கள் ஒளிந்திருந்தூ கவனித்தனர்.

அதன் பின்னர் வள்ளல் பெருமானை நெருங்கி வந்து நடந்த விஷயத்தைக் கேட்டறிந்தனர்.


இந்த இடம், சென்னை தங்கச் சாலைத் தெரு பேருந்து நிலையத்திலிருந்து வியாசர் பாடி செல்லும் வழியில்

பேசின் பிரிட்ஜ் அருகே இந்த கோயில் உள்ளது.. ரோட்டின் ஓரத்தில் வள்ளலார் கோயில் என ஒன்றை நிர்மாணித்து உள்ளனர்.

அக் கோவிலில் இந்த விவரங்களை எழுதி வைத்துள்ளனர். இங்கு, இப் பகுதி மக்கள் பூஜை செய்து

வழிபாடு செய்கின்றனர். அன்னதானம் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.

சென்னையில் உள்ள - சென்னை செல்லும் அன்பர்கள் தங்கச் சாலைத் தெருவில் இருந்து வியாசர்

பாடி செல்லும் ஷேர் ஆட்டோக்களில் - "ராமலிங்க சாமி கோயில்" எனக் கேட்டாலே ஏற்றிக் கொண்டு

அங்கு இறக்கி வீடுகின்றனர். சன்மார்க்க அன்பர்கள் அனனவரும் காணும் விதத்தில் மெயின் ரோட்டிலேயே

இந்தக் கோயில் அமைந்திருப்பது ஒரு சிறப்பு ஆகும்.

 

snake.jpg

snake.jpg

3 Comments
KUMARESAN KRISHNAMURTHY
Dear sir
As you aware our respected vallalar had all the power or occult skill (omnipotent) from the almighty,It is no wonder that the serpent prostrated or worshiped the vallalar.
vallalar says it as
பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே
Hence he could do more wonders. He did, He does through this space , he will do more.
with thanks and regards
K.Kumaresan
Friday, November 14, 2008 at 20:51 pm by KUMARESAN KRISHNAMURTHY
siva b
அரிய தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அய்யா.
Saturday, November 15, 2008 at 04:45 am by siva b
Vallalar Space
added a missing photo
Saturday, August 3, 2013 at 15:38 pm by Vallalar Space