வள்ளலார்ஆன்மநேய ஒருமைப்பாட்டு விழா
வள்ளலார் ஞான எழுச்சி 7வது மாநாடு
186வதுவருவிக்க உற்ற அருட்தின விழா.
நடைபெற்ற இடம் - சிவகாமி திருமண மண்டபம்,
வடசேரி, நாகர்கோவில்.
நாள் 12.10.2006 ஞாயிற்றுக் கிழமை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வருடந்தோறும் வள்ளலார் ஞான எழுச்சி மாநாட்டினை, கடந்த 7 ஆண்டுகளாக, அவ்வூரைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர், திரு பத்மேந்திரா சுவாமி அவர்கள் கொண்டாடி வருகின்றார். அவர், வடசேரியில் பயோனியர் தெருவில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ஒன்றை நிறுவி சன்மார்க்கப் பணி செய்து வருகின்றார்.
அந்த வகையில், இந்த ஆண்டில், வள்ளலாரின் 186வது வருவிக்க உற்ற அருட்தினவிழா மற்றும் வள்ளலாரின் ஞான எழுச்சி 7வது மாநாடு, வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டு விழா ஆகிய மூன்று விழாக்களையும் நாகர்கோவிலில் சிறந்த முறையில் நடத்துவதற்கு, திரு பத்மேந்திரா சுவாமி அவர்கள் விழைவு கொண்டு அதனை அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு விடுமுறை நாளில் நடத்தினால், பல்வேறு பணிகளில் உள்ளோரும் வள்ளற் பெருமானின் அருட் கருணையினால் நடத்தப்பெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்கு வாய்ப்பு ஏற்படும், அதன் மூலம் மென்மேலும் சன்மார்க்க நெறி நாகர்கோவிலிலும் அதனைச் சுற்று உள்ள பகுதிகளிலும் பரவும் என்ற அடிப்படையில், இவ் விழாவினை 12.10.2008 அன்று ஞாயிற்றுக் கிழமையினில் நடத்துவதற்கு முடிவு செய்தார்.
http://www.vallalarfiles.com/image/bCe1,$,2fA3FLxiCB,$,2bW2mYbY7g,$,3d,$,3d/sz-tn650/121020081122900000.jpg
அவரது இந்த உயரிய நோக்கத்திற்கு, நாகர்கோவிலைச் சேர்ந்த அறநெறிச் செல்வர் திரு P. குமாரசுவாமி, M.S. மற்றும் அவரது துணைவியார் திருமதி லதா குமாரசுவாமி, M.A. அவர்களும் முழுப் பொறுப்பேற்று, துணை நின்று மாநாட்டினை அமைத்துத் தருவதென முடிவெடுத்தனர்.
அந்த அறநெறிச் செல்வரின் தாத்தா திரு குமாரசுவாமி அவர்கள் நாகர்கோவிலை தொழில் நகரமாக மாற்றுவதற்கு, தொழில் துறைகளில் பல்வேறு வகைகளில் உதவி புரிந்துள்ளார்.
அதன் பிரகாரம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சன்மார்க்கச் சான்றோர்களுக்கும், ஆன்றோர் பெருமக்களுக்கும் இவ் விழாவினில் பங்கேற்பதற்கு, ஏனைய அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பிதழ், இந்த இணைய தளத்தின் மூலமாக, உலகெலாம் எடுத்துச் செல்லப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டது., இந்த மாநாடு நடத்துவதற்கு நாகர்கோவிலைச் சேர்ந்த திரு சுப்பையா அவர்களது, சிவகாமி அம்மாள் திருமண மண்டபம் தேர்வு செய்யப்பட்டு, அவரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது..
அதேபோல், இவ் விழாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் அன்பர்கள் தங்குவதற்கென திரு குமாரசுவாமிக்கு சொந்தமான பயோனியர் பாரடைஸில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முந்தைய நாளில் இவ் வைபவத்தில் கலந்து கொள்ள வந்த சன்மார்க்க அன்பர்களுக்கு, இந்த பயோனியர் பாரடைஸில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம், நாகர்கோவிலின் மையத்தில் மணி மேடை என்ற ஒரு முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது.
http://www.vallalarfiles.com/image/WWRpxceB4uwdmH0ovCcu7A,$,3d,$,3d/sz-tn650/121020081123800000.jpg
அந்த மணிமேடையின் சிறப்பு என்னவென்றால், பழைய காலக் கட்டிடக் கலை அமைப்பில், கட்டிடம் கட்டப்பட்டு, அதன் மேல், கெடிகாரம் எல்லா இடத்துக்கும் தெரியும் வகையில் 4 சாலைகளும் சந்திக்கும் ஒரு மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் பெயர் மணி மேடை என வழங்கியது போலும்.
அனைவரையும் சிரிக்க வைத்து, தமது கருத்துக்களின் மூலம் சிந்திக்க வைத்த மறைந்த சிரிப்பு நடிகர் N.S. கிருஷ்ணன் அவர்களின் சிலை அம் மணி மேடையில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. அச் சிலையைப் பார்க்கும்போது தத்ரூபமாக அவரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவரது சொந்த ஊரான ஒழுகின சேரி நாகர்கோவிலை அடுத்த 2 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது.
இவ் விழாவிற்கு சேவை செய்யக் கருதி பல்வேறு சங்கங்களிலும் இடங்களிலுமிருந்து வந்த அன்பர்கள் முதல் நாளிலேயே வந்து திருமண மண்டபத்திலேயே தங்கி தங்களது ஒத்துழைப்பினை நல்கினர்.
அதிகாலை 4.00 மணிக்கே திருவளர் செல்வி பி. அங்ரி பத்மேந்திராவால் அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டு, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய திரு அருட்பாவிலிருந்து, அருட்பெருஞ்ஜோதி அகவல் சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தாழக்குடியில் வள்ளலார் உலக மையம் நடத்தி வரும் சன்மார்க்கப் பெரியவர் திரு கோபீந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். கும்பகோணத்தைச் சேர்ந்த சன்மார்க்க பெரியவர், திரு ஜெய்சிங் ஸ்டாலின் அவர்கள் உடன் பங்கேற்றார். ஏனைய அன்பர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் தாங்கி வரும் அருட்பெருஞ்ஜோதி அகவலை மனமுருகப் பாடினர். அந்தக் காலை நேரத்தில், அந்தப் பகுதியே இதன் மூலம் வள்ளல் பெருமானின் அருளாட்சி பரவியது.
அதன்பின்னர், சன்மார்க்க அன்பர்கள் புடைசூழ, சுத்த சன்மார்க்கக் கொடி கட்டப்பட்டது. அப்போது சிற்சக்தி துதி பாடி அந்தக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சன்மார்க்கக் கொடி உயருவதைப் பார்த்த அன்பர்கள் மிகவும் பரவசமடைந்தனர்.
டாக்டர் திரு வெற்றி வேல், சேலம்.
சேலம் சன்மார்க்க அன்பர் டாக்டர் வெற்றிவேல் அவர்கள், அனைவரையும் வரவேற்றார். கன்னியாகுமரி ஒரு ஞானபூமி ஆகும். மொழி இனம் தாண்டி, அகில உலக சகோதரத்துவம் என்ற தாகத்துடன் அனைவரும் இந்த சன்மார்க்க எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள் வள்ளலாரின் கொள்கைகள், மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, பரவ வேண்டும் என்றார். இறைவன் ஒளி மயமாக இருக்கின்றார். மின்சாரம் அனைத்தையும் இயக்குகிறது. நம்மில் யாராவது அதனைப் பார்க்க முடிகின்றோமா ? அதேபோல் இறைவன் அருவமாக உள்ளார். இயற்கை உண்மையராக, இயற்கை வடிவினராக இறைவன் உள்ளார். ஒவ்வொருவரின் சிரநடுச் சிற்றம்பலத்தில் இறைவன் இருந்து கொண்டு அனைத்தையும் இயக்கி வருகின்றார். இதனை மனித குலம் உணர வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஆன்றோர்கள் பாடி வைத்தனர். இதனை மனிதன் உணரவில்லை இன்றளவும்.
வள்ளல் பெருமான் “பேருற்ற உலகில் ஒரு சமய நெறி” என்றெல்லாம் திரு அருட்பாவில் பாடி வைத்துச் சென்றுள்ளார். வள்ளல் பெருமானை இன்றளவும் தெரிந்து கொள்ளாத மனிதன், மனிதனே அல்ல. இரக்கம் நீங்கிடில் என் உயிரும் நீங்கிடும் என்றார் வள்ளலார். இந்த அளவு இரக்கத்தை இதுவரை யாரும் உணர்த்தவில்லை.
பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருள் .. என்ற திரு அருட்பா பாடலைப் பாடினார்.
இறை வணக்கம் பாடுதல்
இறைவணக்கம் – திரு அருட்பா பாடல்களை டாக்டர் அனந்தா சீனிவாசனும் நீதித்துறை சார்ந்த திருமதி காயத்திரிசேகர் அவர்களும் உருக்கத்துடன் பாடி அனைவரையும் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரவும் நிலைக்கே கொண்டு சென்றனர்.
அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றுதல்
மேல்மருத்துவர் சித்தர் பீடத்திலிருந்து வந்திருந்த அன்பர் அருட்பெருஞ்ஜோதி தீபத்தினை ஏற்றினார். அவரைத் தொடர்ந்து, இக் கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து சான்மார்க்கச் சான்றோர்களும் அருட்பெருஞ்ஜோதி தீபத்தினை ஏற்றினர்.
திரு சுப்புராமன், பன்னாட்டு சன்மார்க்க சங்கத் தலைவர், சென்னை.
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க வேண்டும். இந்த பன்னாட்டு சன்மார்க்க சங்கம் துவங்கி, 3 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சங்கம் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் திரைப்படத் துறை தயாரிப்பாளர் திரு கே.ஆர்.ஆவார். தோன்றிய இந்த சங்கத்தினை அனைவரும் கூடி நல்ல முறையில் வளர்க்க வேண்டும். திரைப்படத்துறையில் அவர் பணியாற்றினாலும் சிறந்த ஆன்மீக வாதி.
தஞ்சாவூர் டாக்டர் திரு சிவராமன் அவர்கள் செயலாளராக சிறப்புடன் பணியாற்றுகின்றார். அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், முன்னாள் முதல்வர் ஆகப் பணிபுரிந்தவர். சுவாமி திரு பத்மேந்திரா அவர்கள் தென்னாட்டின் கடை கோடியில், சுத்த சன்மார்க்க கொடியை ஏந்தி, சன்மார்க்க நெறி பரவக் காரணம் ஆக உள்ளார்.
இந்த நகரத்தில் பயோனியர் குமாரசுவாமி என்றால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அவர்களுடன் சுவாமி பத்மேந்திராவும் இணைந்து சன்மார்க்க நெறியினைப் பரப்பும் சிறந்த பணியினை மேற்கொண்டுள்ளனர். வள்ளற் பெருமானுக்கு முன்பு வந்த பல ஞானிகளும் அறிஞர் பெருமக்களும் சன்மார்க்க நெறியினைச் சொல்லி வைத்துள்ளனர். ஆனால் வள்ளற் பெருமான் சமரச சுத்த சன்மார்க்கத்தினைப் பரப்பிச் சென்றார்.
அவர் பரப்பிய நெறியில் நின்றால், அரசுக்கு வேலை சுலபம். எந்த பிரச்னையும் தோன்றாது. ஆனால் சன்மார்க்கம் ஏன் இன்னும் பரவவில்லை. மனிதனிடம், அவா வெகுளி மயக்க நிலை இன்னும் உள்ளது. எதையும் பேசுவது சுலபம். நடைமுறையில் கொண்டு வர வேண்டும். தற்போது சமய வெறி. ஜாதி வெறி, நாட்டு வெறி, மொழி வெறி என்று ஒவ்வொன்றின் பாலும் வெறி ஏற்பட்டு, மனித சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கின்றது.
ஒரு நாட்டில் உள்ளவர்கள் பிற நாட்டைத் தாக்குகின்றனர். மொழி வெறியர்கள் அதன் காரணமாக, அண்டை மாநிலங்களைத் தாக்குகின்றனர். பிறப்பால் அனைவரும் உயர்வு தாழ்வு பார்க்கின்றனர். அதனைத் தவிர்த்தால், சமரசம் விரைவில் பாவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
http://www.vallalarfiles.com/image/wBd1zgYrb4RdyMNxJlT1eg,$,3d,$,3d/sz-tn650/121020081123680000.jpg
முன்னர் வந்த பெரியோர்கள், பல அற நெறிகளைப் போதித்தனர். உருவ வழிபாடு செய்யச் சொன்னார்கள். அதில் என்ன இருக்கிறது? அம் முன்னோர்கள் சொன்ன கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வள்ளற் பெருமான், எல்லோரும் ஒரே வழியில் செல்ல சத்திய ஞான சபை கட்டி, தீப வழிபாடு செய்யச் சொன்னார். அவ் வழிபாடு, சமயம், நாடு, மொழி, மதம் கடந்ததாகும். ஆயிரமாயிரம் பாக்களைப் பாடி வைத்தும், விண்ணப்பங்கள் சொல்லி வைத்தும் மனித குலம் திருந்துவதற்கு வழி வகுத்தார். இதனை நம் மனதில் அனைவரும் கொண்டு செயல்பட வேண்டும்.
நம் மனதில் சன்மார்க்கம் உள்ளதா ? ஆண்டவர் திரு உள்ளம் கொண்டு சீர்திருத்தக் கொள்கைகளை வள்ளற் பெருமான் மூலம் பரப்ப வைத்தார். நாத்திகக் கொள்கைகளை யாரும் கடைப் பிடிக்கக் கூடாது. அந்தக் காலத்தில் வள்ளற் பெருமானையே நாத்திகர் என்றனர். ஆனால், அவர் ஆன்மீகத்தைப் போதித்தார். நாத்திகக் கொள்கைகளைக் குழி வெட்டிப் புதைக்கச் சொன்னார்.
வள்ளல் பெருமானது கருத்துக்கள் ராஜாராம் மோகன்ராயை விடவும் தந்தை பெரியாரை விடவும் மிகவும் உயரியது. சத் என்பதற்கு பொருள் இயற்கை என்பதாகும். நாம் நமது உயிரை காண முடிகின்றதா ? எதனைக் கொண்டு உணருகின்றோம் ? உடலைக் கொண்டுதான். இறை உண்மையினை ஆக்கத்துடன் பிறப்பிக்க இந்த உலகில் ஞானிகள் அவதரிக்கின்றனர். வள்ளல் பெருமான் 185 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். சமய நெறி பிடித்தோர் சமய வெறி பிடித்தோர் ஆவர்.
வழக்குகளில் கூட பெருமானைச் சிக்க வைத்தனர். வள்ளலார் அருள் தயை இரக்கம் முதலானவற்றைப் போதித்தார். அருளுடைய எல்லோரும் சன்மார்க்கம் சார்ந்தவர். இந் நெறிதான் தழைத்து ஓங்க வேண்டும். இதற்கு இந்த மாநாட்டின் மூலம் ஒற்றுமையுடன் வள்ளலார் வகுத்த நெறி பரப்புவோம் என சபதம் ஏற்போம்.
சன்மார்க்க நெறி பரவுவதற்கு, நாங்கள் நல்ல முயற்சி எடுத்து வருகின்றோம். வடலூர் வள்ளற் பெருமான் காலத்திற்குப் பின்னர் எவ்வாறு உள்ளது. அதனை அனைவரும் அறிவீர்கள். வள்ளலார் சொல்லிச் சென்ற நோக்கங்களை நிறைவேற்ற வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் அயராது பாடுபடுகின்றது.
அவர் வகுத்துச் சென்ற கல்வித்திட்டம் மாணவர்களிடையே பரவ வேண்டும். ஒழுக்கக் கல்வியினை மாணவப் பருவத்திலிருந்து அவர்கள் கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக கற்றுக் கொடுக்க வேண்டும். அது ஜாதி மத பேதமற்றதாக இருக்க வேண்டும். அதற்கு நாங்கள் சிலபஸ் தயாரித்து அரசாங்கத்திடம் கொடுத்துள்ளோம். நமது ஒருங்கிணைந்த ஒற்றுமை தான் அதனை செயல் படுத்த வழிவகுக்க வேண்டும்.
சன்மார்க்க சங்கங்கள் பல உள்ளன. ஒற்றுமை ஏதும் அவற்றினிடையே இல்லை. ஆரம்பக்கல்வி முதல் கல்லூரி வரை ஒழுக்கக் கல்வி வள்ளல் பெருமான் சொன்ன வகையில் போதிக்கப்பட வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும் இது குறித்து கோரிக்கையினை கொடுத்துள்ளோம் அதனை செயல்படுத்த அனைத்து சன்மார்க்க சங்கங்களும் ஒன்று கூடி வலியுறுத்த வேண்டும்.
வள்ளலார் திரு உருவப்படம் திறப்பு விழா.
இதற்குப் பின் வள்ளல் பெருமானின் திருவுருவப் படம் மற்றும் வல்லநாடு சித்தர் திரு உருவப் படம் ஆகியவை திரு ஜி.பால்ராஜ் (P.T.C) மற்றும் நாகம்மாள் மில்ஸ் லிமிடெட் நாகர்கோவில் உரிமையாளர் அறநெறிச் செல்வர் திரு பி.குமாரசுவாமி எம்.எஸ்.அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.
திரு சித்தார்த், மாவட்ட நீதிபதி, மகளிர் நீதி மன்றம், மதுரை.
வள்ளலார் தெய்வ நிலைய வரலாற்று மலர் மதுரை மகளிர் நீதி மன்ற மாவட்ட நீதிபதி திரு இ.மு.க.ச.சித்தார்த் அவர்களால் வெளியிடப்பட்டது. அவர் பேசியதாவது –
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற 6வது வள்ளலார் ஞான எழுச்சி மாநாட்டிலும் நான் இங்கு பணிபுரிந்த போது பங்கேற்றேன். இன்றும் 7வது ஞான எழுச்சி மாநாட்டில் மதுரையிலிருந்து வந்து கலந்து கொண்டிருக்கின்றேன். சன்மார்க்கம் குறித்து மேடையில் பேசிவிட்டு மட்டும் செல்வது சிறப்பல்ல. அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற இந்த ஞான எழுச்சி மாநாட்டில் உறுதி மொழி ஏற்று அதனை செயலாற்றவும் வேண்டும்.
வள்ளல் பெருமான் காண்பித்த சுத்த சன்மார்க்க நெறி நாடு, இனம், மொழி, மதம் ஆகியவற்றிற்கெல்லாம் கட்டுப்படாத ஒரு சிறந்த நெறி ஆகும். ஜாதி ஒழிய வேண்டும் என அரசியல் சட்டங்கள் வருமுன்பே, வள்ளல் பெருமான் அவர்கள்- இதனை வலியுறுத்தினார். அவர் ஒரு சித்தர். பெரும் புரட்சியாளர். நாமெல்லாம் பக்தர்கள். இறைவனைக் காண முயல்பவர்கள். ஆனால் சித்தர்கள் எல்லாம் இறைவனைக் கண்டவர்கள்.
பல்வேறு கால கட்டங்களில் இது போன்ற சித்தர்கள் எல்லாம் மனித குலம் மேம்பாடடைய வேண்டும் என்று தோன்றியுள்ளனர். முதலாம் நூற்றாண்டில் திருவள்ளுவரும் 3ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகரும், 5வது நூற்றாண்டில் திரு மூலரும், 7ஆவது நூற்றாண்டில் திரு நாவுக்கரசரும் சம்பந்தரும் 9ஆம் நூற்றாண்டில் சுந்தரரும், 10ம் நூற்றாண்டில் பட்டினத்தாரும், 14ஆம் நூற்றாண்டில் மெய்கண்டாரும், 15ஆம் நூற்றாண்டில் அருணகிரியாரும், 18ஆம் நூற்றாண்டில் தாயுமானாரும், 19ஆம் நூற்றாண்டில் வள்ளல் பெருமானும் வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் உதித்துள்ளனர். சமயக் குரவர்கள் நால்வரையும் குறித்து வள்ளல் பெருமான் பாடி வைத்துள்ளார். திரு ஊரன் அடிகளார் அவர்கள், திரு ஞான சம்பந்தர்தான் வள்ளல் பெருமானின் குரு என தமது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.vallalarfiles.com/image/upX64P7tNmkCfSLfAIPBCw,$,3d,$,3d/sz-tn650/121020081123220000.jpg
வள்ளல் பெருமான் முருகனை கண்ணாடியில் கண்டார். திரு ஒற்றியூரில் வடிவுடை அம்மனை வழிபட்டார். அவருக்கு வழி காட்டி நூலாக திரு வாசகம் அமைந்தது. வள்ளலார் திரு நாவுக்கரசர் அப்பர் திரு ஞான சம்பந்தர் மாணிக்க வாசகர் ஆகிய சமயக் குரவர்களை எல்லாம் தாம் பாடிய திரு அருட்பாவில் வாழ்த்தியுள்ளார். இதனை எல்லாம் ஊரன் அடிகளார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
திரு, அருள், பா - என பிரித்து திருவருட்பாவினைப் பொருள் கொள்ள வேண்டும். அழகு, மேன்மை, செல்வம், தெய்வத் தன்மை என அதற்கு உண்மைப் பொருள் ஆகும். திரு அருட்பா பாடல்கள் அனைத்தும் இறைவனது அருளால் பாடப்பட்டவையாகும்.
வள்ளற் பெருமான் காலத்தில் அவருடன் இருந்த இறுக்கம் இரத்தின முதலியார் அவர்களால் முதலில் திரு அருட்பாக்கள் வெளியிடப்பட்டன. வடலூரில் வள்ளற் பெருமான் வாழ்ந்த காலம் மிக அற்புதமான காலம் ஆகும். அவர் உச்சிப் பொழுதில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒளி தோன்றும் எனக்கூறுவர்.
ஒரு நேரம், வெளியே சென்ற வள்ளற் பெருமான் திரும்பி வரவில்லையே என சண்முகம் பிள்ளை அவர்கள் வருந்தினார். ஆனால் வள்ளற் பெருமானின் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே கிடப்பதைக் கண்டு மிகவும் பயந்தார். அவை பின் ஒன்று பட்டன.
கடலூரில் தேவநாதன் மகன் அய்யாசாமிக்கு உடல் நலமில்லை. இதனை ஒரு அன்பர் வள்ளலாரிடம் தெரிவித்தார். வள்ளற் பெருமான் அப்போது சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். அவரிடம் திருநீறு கொடுத்து அதனை குணமாக்கி உள்ளார். இரவு முழுவதும் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளளர் இதற்காக தம்மிடம் நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டாம் என வள்ளலார் கூறினார்.
வள்ளலார், திருவதிகை கோவிலுக்குச் செல்லும் போது கூட்ட நெரிசலாக இருந்தது. வள்ளலார் பல இடங்களிலும் காட்சியளித்தார். தனியே உலாவும்போதும் முன்னே முன்னே சென்று அதிசயம் நிகழ்த்தியுள்ளார். ஒருமுறை இரவு உணவு அனைவருக்கும் வினியோகம் செய்து முடிவடைந்த வேளையில் ஆகாரம் வேண்டி வந்த நபர்களுக்கு “பிச்” என்றவுடன் உணவு போதுமான அளவு கிடைத்தது. வந்திருந்த அனைவருக்கும் வழங்கியது போக மீந்தும் இருந்தது. இதனைக் கண்ட அன்பர்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
ஒருமுறை தர்மச் சாலையில் அன்ன வினியோகம் செய்வதற்கு அரிசி இல்லை என வள்ளல் பெருமானிடம் சொல்லப்பட்டது. மறு நாளே 3 வண்டிகளில் அரிசி காய்கறி முதலானவை வந்து சேர்ந்தன. அனைவரும் திரு அருட் செயலை வியந்தனர். திரைமறைவில் திருச்சிற்றம்பலக் காட்சியினை அன்பர்களுக்கு வள்ளல் பெருமான் காண்பித்தார்.
வருடந்தோறும் திருவாதிரைத் திருநாளுக்கு தில்லைச் சிதம்பரம் செல்வதை பெருமான் வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் அவருடன் அன்பர்கள் பலரும் செல்பவர்கள். ஒருமுறை அங்கு அந்நாளில் செல்லாமல், அன்பர்களுடன் நெடுநேரம் வள்ளல் பெருமான் பேசிக் கொண்டிருந்தார். ஏன் செல்லவில்லை என்பது அன்பர்களுக்குத் தெரியவில்லை. தாமதித்துப் பார்த்த சில அன்பர்கள் புறப்பட்டுச் சென்று விட்டனர். பலர் அங்கு செல்லாமல் உள்ளாரே என வருத்தப்பட்டனர். அந்த தரிசனத்தை தருமச் சாலையில் பெருமான் காண்பித்தார்.
http://www.vallalarfiles.com/image/skWPaxD7nTqhVVNnKH9MaA,$,3d,$,3d/sz-tn650/121020081123020000.jpg
ஒரு முறை கோடை காலத்தில் தண்ணீர் எங்கும் வற்றி விட்டது. அனைவரும் பெருமானிடம் வந்து முறையிட்டனர். ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவரச் செய்து அதனைக் கொட்டச் செய்தார். உடனே மழை பெய்தது. புதுப்பேட்டை என்ற ஊரில் இதே போன்றதொரு நிலைமை ஏற்பட்டது. 6 குடங்களில் தண்ணீர் கொண்டு வரச் செய்து கீழே ஊற்றவே, மழை கொட்டோ கொட்டு எனக் கொட்டியது. மக்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. திரு அருட்செயலை வியந்தனர்.
திரு ராமச்சந்திரன் என்பவர் வள்ளற் பெருமானை தமது ஊருக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். அங்கு செல்லும்போது செரஸ்தார், அவரது உதவியாளர் ஆகியோரும் உடன் சென்றனர். குள்ளஞ்சாவடியில் கள்வர்கள் அனைவரையும் மறித்தனர். வண்டி ஓட்டியும் உதவியாளரும் ஓடி விட்டனர். வண்டியில் இருந்த 2 பேரையும் சீக்கிரம் இறங்குங்கள் என கள்வர்கள் தம் கைகளை ஓங்கி, அவசரப்படுத்தினர். அவசரமோ என பெருமான் கேட்டனர். உடனே அவர்களது ஓங்கிய கைகள் அப்படியே நின்று விட்டன. அவர்களது கண் பார்வையும் போய்விட்டது. உண்மை தெரிந்து, அவர்கள் வேண்டி நின்றபோது பெருமான் அவர்களிடமும் கருணை காண்பித்து, அவர்களைத் திருத்தினார். திருட்டை விட்டுவிடும்படி அவர்களிடம் பெருமான் அறிவுறுத்தினார். அவர்களும், திருட்டுத் தொழிலை அன்றிலிருந்து விட்டு விட்டனர்.
For more photos: http://www.vallalarspace.com/Ramanujam/Photo/1132
பெருமான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஒற்றியூரில் படுத்திருக்கும்போது ஒரு திருடன் ஒரு காதில் அணிந்திருந்த கடுக்கனைக் கழற்றி விட்டான். அவனது செயலை அறிந்த பெருமான், திரும்பிப் படுத்தார். அவன் மறு காதில் இருந்த கடுக்கனையும் கழற்ற ஏதுவாக இச் செயலைச் செய்தார்.
அமாவாசை என்பவர், காலனியில் வசித்தவர். இறந்து போன மாட்டின் இறைச்சியை உண்டு வந்தார். பெருமான் அது கூடாது என்றார். பெருமானிடம் அமாவாசை ½ ரூபாயை வேண்டிப் பெற்று, கொல்லா நோன்பினைக் கடைப்பிடித்தார். அவருக்கு தினமும் ½ ரூபாய் கிடைத்து வந்தது. பெருமான் செம்பைப் பொன்னாக மாற்றும் தகர வித்தை தெரிந்தவர்.
பெருமான் மீது ஆறுமுக நாவலர் பொய் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில் அவர் 2 குற்றச் சாட்டுக்களைச் சொல்லியிருந்தார். அதில் ஒன்று சிதம்பரத்தில் செய்த சொற்பொழிவில் ஆறுமுக நாவலரை அவதூறாகப் பேசியது என்பது ஆகும். இவ் வழக்கு 1869 ஆம் ஆண்டில் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. செளந்தரநாயகம் பிள்ளை இவ் வழக்கில் வாதிட்டார். விசாரணை நாளன்று வள்ளல் பெருமானை 3 முறை அழைத்தனர். அவர்கள் நீதிமன்றத்தினுள் நுழையும் போது வழக்குத் தொடுத்த நாவலரும் எழுந்திருந்தார். நீதிபதியும் எழுந்தார். அங்கு கூடி இருந்த அனைவருமே எழுந்திருந்தனர். வாதியை நீதிபதி கேட்டார். நீர் ஏன் எழுந்திருந்தீர் என்று. அவர், அனைவரும் எழுந்திருந்ததால் நானும் எழுந்தேன் என்றார். இதன் மூலம் பிரதிவாதியான வள்ளல் பெருமானை பெரியவர் என்பதை, ஒத்துக் கொள்கின்றீர். வணங்கி நின்றீர். எனவே இவ் வழக்கில் உண்மை இல்லை என அவர் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
வள்ளலார் ஞான எழுச்சி மாநாடான இன்று, இங்கு, பல வழக்குறைஞர்கள், பல மருத்துவர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர் பங்கு பெற்றுள்ளீர்கள்.
இனி வரும் காலத்திலும் இந்த மாநாடு நடைபெறும் போது, நானும் பங்கு பெற வேண்டும் என்பதே எனது அவா என்றார்.
நினைவுப் பரிசு இந்த இடைவெளியில் வழங்கப்பட்டது. மாணவ மாணவியர்களை. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி முதலானவற்றில் பயிற்றுவித்த பள்ளி ஆசிரியர் பெருமக்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
டாக்டர் பி.கே. சிவராமன், செயலாளர், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம், தஞ்சாவூர்.
இந்த விழாவில் நீதிபதி அவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர், ஞான வேரான தவத்திரு ஊரன் அடிகள், திரைப்படத்துறை இயக்குனர் என பல்துறை சார் அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டுள்ளீர்கள். கற்றறிந்த உங்கள் மூலம் சுத்த சன்மார்க்க நெறி இந்த பகுதியில் நன்கு பரவிக் கொண்டு உள்ளது. வள்ளற் பெருமானின் வாழ்க்கை அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே அனைவரும் இது குறித்துச் சொல்லி விட்டனர்.
வள்ளல் பெருமான் பக்திமான். அவர் ஒரு சித்தர் வழி வந்த மகான். ஆனாலும் அதிலிருந்து மாறுபட்டு தனக்கென தனி வழி வகுத்துக் கொண்டவர். வள்ளல் பெருமானை மற்ற சித்தர்களிலிருந்து வேறு கோணத்தில் எல்லோரும் பார்க்க வேண்டும். அவரது கொள்கை மனிதனை நினை – மனிதனை இறைவனாக்கு என்பதுவே ஆகும். இன்றைய மனித குலம் கடவுளிடம் கோரிக்கை வைப்பது அதனை நிறைவேற்றுவதற்கு வேண்டுதல் செய்து கடவுளை ஒரு பிசினஸ் மேன் ஆக்கிவிடுகின்றனர். வைத்த கோரிக்கை நிறைவேற வேண்டுமென மீண்டும் மீண்டும் தவறிழைக்கின்றனர்.
மற்ற மற்ற ஞானிகளிடமிருந்தும் சித்தர்களிடமிருந்தும் வள்ளல் பெருமான் வேறுபட்டு விளங்கினார். புதிய சிந்தனையை அவர் படைத்தார். பழைய ஒழுக்கம் தத்துவம், சடங்காசாரங்கள் முதலியவற்றை அவர் சாடினார். சுத்த சன்மார்க்கப் பெருநெறியைச் சார்ந்த ஒழுக்கத்தை மக்களிடையே விதைக்க வேண்டும் என அவர் முனைந்தார்.
சத் மார்க்கம் – ஒழுக்கத்தினை அடிப்படையாகக் கொண்டது. சத் என்றாலே வட மொழி ஆகும். வள்ளலார் ஒழுக்கக் கல்வியை மையமாக வைத்து சமய மதங் கடந்து சன்மார்க்கத்தைப் போதித்தார். சைவ சித்தாந்ததிற்கு மேற்பட்டது வள்ளல் பெருமான் போதித்த சுத்த சன்மார்க்க நெறி. அவர் ஜீவகாருண்யச் சிறகுகளை விரித்து உயர்ந்தார். மக்கள் அதனைப் பார்த்தனர்.
தனி மனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி ஆகியவற்றிற்கு ஜீவகாருண்யமே உயிர் நாடி. உயிர் இரக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். பிற உயிர்களுக்காக தானாகவே இரங்க வேண்டும் எனப் போதித்தார். வள்ளற் பெருமான் உருக்கத்துடன் இரக்கத்தையும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் இணைத்தளித்தவர். சைவ சித்தாந்தத்தையும், சன்மார்க்கத்தையும் படித்துப் பார்த்தால், வித்தியாசம் என்னவென்று தெரியும்.
http://www.vallalarfiles.com/image/CJxFnfiOEk6sNT8zdBtnUg,$,3d,$,3d/sz-tn650/121020081123380000.jpg
வள்ளலார் சைவ சித்தாந்தக் கருத்துக்களுக்குள் அடங்கியவர் அல்லர். அவர் ஒரு மாபெரும் மனிதர். எல்லோரும் இறை நிலை அடையும் ஒழுக்க நெறி முறைகளை வகுத்தவர்.
இலகும் ஐந்தொழிலையும் யான் செய்யத் தந்தனை .. என பாடியவர்.
சன்மார்க்கத்துக்கும் 3க்கும் தொடர்பு உண்டு. வள்ளலார் அமைத்தது சாலை சங்கம் சபை ஆகும். அதுவே திரிதேக சித்தி நிலைக்கு இட்டுச் செல்வது. அவர் புதிய விளக்கங்களை எல்லாம் கொடுத்தார். புதிய சமுதாயத்தைத் துவக்கக் கனவுகண்டார்.
ஒத்தாரும் உயர்ந்தாரும் ஒருமையுளராக வேண்டும் .. என பாடியவர்.
மனிதன் தெய்வமாகவே ஆகவேண்டும் என்ற புதிய கருத்தினை வள்ளலார் வகுத்தார். வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் அவரது கொள்கைகளையும் கருத்துக்களையும் நடைமுறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிக் கிடக்கும் சன்மார்க்க சங்கங்களை ஒன்றுபடுத்துவதற்கு, இந்த சங்கம் தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றாது.
அனைவரும் ஒருமித்தால் மிக சக்தி வாய்ந்த சாதனையினைப் படைப்பதற்கு அது வாய்ப்பாக இருக்கும். இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 50 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. அன்பு பாசம் பண்பை விதைத்து ஒவ்வொருவரும் வள்ளலாரின் கொள்கையினைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த சங்கம் செயல்பட்டு வருகின்றது.
திரைப்பட இயக்குனர் திரு கே.ஆர். அவர்கள். வள்ளலார் குறித்த மெகா சீரியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். வள்ளலாரின் தனித்துவம், ஒருமைப்பாட்டு உணர்வு ஜீவகாருண்ய ஒழுக்கம் முதலானவற்றை வலியுறுத்தும் விதத்தில் அந்த சீரியல் இருக்கும். ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் இது இருக்கும்.
இந்த சங்கத்தின் தலைவர் திரு சுப்புராமன் அவர்கள், வள்ளுவர் கோட்டம் சென்னையில் அமைந்தது போல் வள்ளலார் கோட்டம் அமைப்பதற்கான முனைப்புடன் ஒரு மிகப்பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். ம இந்த சங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்னவெனில், முன்னாள் எம்.எல்.ஏ.நிலக்கோட்டை திருமதி பொன்னம்மாளுடன் வடலூர் சென்று அங்கு நிலவும் உண்மையான நிலையினை கண்டுபிடித்தோம். ஞான சபையில் வள்ளல் பெருமான் சொன்னதற்கு மாறாக, உருவ வழிபாடு மற்றும் பிரதோஷ வழிபாடு கடைப்பிடிக்கப்பட்டதை கண்டு பிடித்தோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இது குறித்து விளக்கிக் கூறினோம். இந்து அறநிலையத் துறை ஆணையரையும் இது குறித்து சந்தித்து விவரங்களை விளக்கினோம். சட்டசபையில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரச் செய்தோம். இளைஞர்கள் மற்றும் சன்மார்க்க மூத்த பெரியோர்களைக் கொண்டு உண்ணா நோன்பிருக்கச் செய்தோம். சென்னை உயர்நீதி மன்றத்திலும், மதுரையில் உள்ள அதன் கிளையிலும் வழக்குகளை தொண்டர் குல பெருமாள் மூலம் தாக்கல் செய்தோம். அதில் ஏற்பட்ட மாற்றம், வள்ளல் பெருமான் சொன்ன வழிபாட்டு முறையினை உடனே வடலூர் சத்திய ஞான சபையில் கொண்டுவருவதற்கு உடனடியாக விசாரித்து உத்திரவிடச் செய்தோம். இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் அது செயல்படுத்தப் பட்டது.
நீதி போதனை வகுப்பில் பள்ளி கல்வித் துறையின் மூலம், வள்ளல் பெருமான் வகுத்த நெறிகளை பாடமாக்குவதற்குக் கோரிக்கை வைத்துள்ளோம்.
நானுரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தை .. என வள்ளல் பெருமான் சொல்லிச் சென்றார்.
அதனை இந்த சங்கம் செயல்படுத்துவதில் பெருமுயற்சி எடுத்து வருகின்றது. இச் சங்கம் பல திட்டங்கள் வைத்திருந்தாலும். வடலூர் பெருவெளியில், வரும் பக்தர்களுக்கு, குடிநீர், கழிப்பறை வசதி, வைத்தியம் பார்த்தல், தியான சாலை, விவகார சாலை, விருத்தி சாலை, மருத்துவ சாலை போன்றவற்றை அமைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கான வரைபடம் இதோ அனைவரின் முன்பும் காண்பிக்கப் படுகின்றது.
For more photos: http://www.vallalarspace.com/Ramanujam/Photo/1132
சென்னையில் உள்ள, தலை சிறந்த கட்டிட வடிவமைப்பாளர், திரு வேணுகோபால் அவர்கள் மூலம், மாஸ்டர் பிளான் தயார் செய்து, அதனை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் திரு பிச்சாண்டி, ஐ,ஏ.எஸ்.அவர்களிடம் கொடுத்துள்ளோம். அதன் படி செயல்படுத்தி எல்லா வசதிகளும் ஏற்படுத்தப்பட்டால், வடலூரில், வரும் பக்தர்களுக்கு நல்ல வசதி கிட்டும் என்பது உறுதி. வள்ளல் பெருமானின் கருத்துக்களின்பால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டார் அனைவரும் வந்து பார்த்து வழிபட்டுச் செல்ல, இதுபோன்ற அமைப்புக்கள் அவசியம். இவை இங்கு அரசால் அமைக்கப்பட்டால் அயல் நாட்டினர், சிரமமின்றி, வடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மிகும்.
மதம், ஜாதி, சமயம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதி வள்ளல் பெருமான். அவர் ஏற்படுத்தித் தந்த இடத்தினை நல்ல விதத்தில் சீர்திருத்துவோம்.
அடுத்தபடியாக பள்ளி கல்லூரிகளில் வள்ளல் பெருமானின் கொள்கைகள் குறித்து கட்டுரைப் போட்டி, மற்றும் பேச்சுப் போட்டி வைத்து, அதில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேட்டவலம்சுப்பிரமணியபாரதியார்.
திருவண்ணாமலை பகுதியில், வள்ளலாரின் நெறிமுறைகளை பரப்பி வருகின்றேன். உலகம் தழைக்க வந்துதித்த வள்ளல் பெருமானாரின் நெறிமுறைகள் இந்த உலகம் எல்லாம் பரவ வேண்டும் .. பரம்பொருளே சன்மார்க்கப் பணி செய்ய வேண்டுவனே .. என்பது எனது அவா. பெண்கள் எல்லாம் சன்மார்க்கப் பிள்ளைகளைப் பெற வேண்டும். நாகர்கோவிலில் ராஜாக்கள் இருந்து செய்யவேண்டியதை ஒரு துறவி திருபத்மேந்திரா அவர்கள் செய்து வருகின்றார். இது போற்றுதற்குரிய ஒன்றாகும். அவர்களுக்கு பக்க பலமாக சாது சிவா சுவாமிகளும் தொழிலதிபர் குமாரசுவாமி அவர்களும் இருந்து செயல்படுத்த உதவி வருகின்றனர். வள்ளலார் ஒரு சித்தர். சாது சிவா சுவாமிகள் முதலில் காவிஉடையில் இருந்தார். பின்னர், வள்ளல் பெருமானின் ஒழுக்க நெறிமுறையினைக் கடைப்பிடித்து, வெள்ளாடைத் துறவியாக காட்சி அளிக்கின்றார். வேட்டவலத்திற்கு அமைச்சர் பெருமக்கள், குன்றக்குடி அடிகளார் பெரியோர்கள் ஊரன் அடிகள் எல்லாம் வந்துள்ளனர். நான் திருவண்ணாமலைக்கு அருகே இருந்து வந்திருக்கின்றேன் திருவண்ணாமலை என்றாலே ஜோதி தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆதியுமந்தமுமில்லா அருட்பெருஞ்ஜோதி ஆகும் அது. வேட்டவலத்தில் வள்ளலாரின் கால்பட்டதால், அருளின் வெளிப்பாடு ஆகியது. ஜமீந்தாரின் மனைவியில் மகோதர நோயை வள்ளலார் குணப்படுத்தினார்கள். மேடையில் பல டாக்டர் பெருமக்கள் திரைப்படத்துறை இயக்குனர் எல்லாம் இருக்கின்றனர்.
வள்ளலார் முருகப் பெருமானைமுதன் முதலில் வணங்கினார். அருணகிரியார் திருப்புகழ் பாடினார். ஞான சம்பந்தருக்கு ஞானப்பால், இறைவனால் வழங்கப்பட்டது. திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்திநாயனார் என திருக்கூட்ட மரபில் வந்த ஞானிகளில் கூட்டம் கணக்கில் அடங்காது.
http://www.vallalarfiles.com/image/iOAzJ0VUlhK2HaCoa3Jk,$,2bA,$,3d,$,3d/sz-tn650/121020081122720000.jpg
ஆனால், வள்ளல் பெருமான், சிறு குழந்தையாக 5 ஆண்டுகளில் அருட்பா பாடல்களை இசைக்க ஆரம்பித்து விட்டார்.
வேட்டவலம் என்ற நடு நாட்டில் இருந்து இந்த நாஞ்சில் நாட்டில் ஒரு மண் வந்து இங்கே வள்ளலாரின் கொள்கை குறித்துப் பேசுகின்றது. அவர் வகுத்த நெறி மனித குலத்தால் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அதன்பின்னர். இசையமைப்பாளர்திருசாயிகுமார்அவர்கள்இசைஅமைத்ததிருஅருட்பாஆடியோசி.டிவெளியிடப்பட்டது. ஊரன்அடிகள்தலைமைதாங்கினார்.
அந்த ஆடியோ சி.டி.யில் இருந்த நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ என்ற பாடல் அரங்கினில் அனைவரும் கேட்டு மகிழ இசைக்கப் பட்டது. வள்ளல் பெருமானின் கருத்துக்களை விளக்கும் இந்த அருமையான பாடலை, அரங்கினில் இருந்த அனைவருமே கேட்டு ரசித்து அவரது திருவருளை வியந்தனர்.
தமிழ்நாடு சுற்றுலா மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு சுரேஷ் ராஜன்அவர்கள்.
வந்திருந்தபல்சன்மார்க்கசாதனையாளர்களுக்குநினைவுப்பரிசினைமுதலில்மாண்புமிகுஅமைச்சர்வழங்கினார்.
இந்தமாநாட்டினைசீரோடும்சிறப்போடும்நடத்திக்கொண்டிருக்கும்திருபத்மேந்திராசுவாமிகளின்இயற்பெயர்பத்மநாதன்என்பதாகும். அவர், என்னுடன்பள்ளியில்ஒன்றாகப்படித்தவர்.
அவர்வள்ளற்பெருமானின்கொள்கைகளையும்நெறியினையும்கன்னியாகுமரிமாவட்டத்தில்பரப்புவதில்முனைப்புடன்செயல்பட்டுவருகிறார். வள்ளலார்உருவவழிபாடுகூடாதுஎன்றவர். ஒளிவழிபாட்டினைவலியுறுத்தியவர். ஒளியைகடவுளாகபாவித்துவழிபடச்சொன்னவர்.
ஒளிவழிபாடுஐதீகமுறைப்படிபார்த்தாலும், விஞ்ஞானவாயிலாகப்பார்த்தாலும்சரியானஒன்றே.
அவரதுநெறிஜாதிமதம்மொழிஇனம்நாடுஅனைத்தையும்கடந்தஒருபெருநெறிஆகும். எனவேநாங்கள்அவரதுகொள்கைகளைவிரும்புகின்றோம். அவரதுகொள்கைகளும்பெரியாரதுகொள்கைகளும்ஒரேமாதிரிஆனவைஆகும்.
கோவில்கள்எல்லாம்தற்போதையகாலகட்டத்தில்ஜாதிக்கோவில்களாகமாறிக்கொண்டிருக்கின்றன. வள்ளலார்சமரசசன்மார்க்கநெறியினைப்போதித்தவர். தமிழ்நாடுமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள், எல்லோரும்அர்ச்சகர்ஆகலாம்எனஉத்தரவுபிறப்பித்தார்.
வள்ளலார்நாம்அனைவரும்ஆன்மநிலையில்சகோதரசகோதரியர்என்பதையேசன்மார்க்கநெறியாகப்போதித்தார்.
இந்தசன்மார்க்கநெறியினைக்கடைப்பிடித்தால்நாட்டில்பிரச்னைகளுக்கெல்லாம்முற்றுப்புள்ளிவைத்துவிடலாம்.
திருஇதயத்துல்லா, இலக்கியமன்றச்செயலாளர், சென்னை.
வள்ளலார், அருட்பெருஞ்ஜோதி என்ற புதிய வழிகாட்டுதல்முறையினை வழங்கியவர். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என தமது வருத்தத்தை வெளியிட்டவர். மனிதர்கள் சுத்த சன்மார்க்க நெறியினை கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்தினார். அவர்களது கொள்கைகளை போற்றுவதற்காகவும், மனித குலம், அதனை கடைப்பிடித்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற விதத்திலே இம் மாநாடு நடைபெறுகின்றது. வள்ளலார்காலத்திற்கு முன்னரெல்லாம் சமயங்கள் பல இருந்தன. வள்ளலாரும் பழைய கருத்துக்களைத்தான் சொல்லி வைத்தார். நாம் ஏன் வள்ளலாரை ஒருபுரட்சியாளர் என்கின்றோம் ? அன்பே சிவம் என்றார். திருமூலர் ஒன்றே குலம், - ஒருவனே தேவன் என்றார். அதனையே தான் திருவள்ளுவரும், திரு நாவுக்கரசரும் சொல்லிச் சென்றனர். அவர்கள் சொன்னதையேதான் வள்ளலாரும் சொன்னார். அதில் புதுமை ஏதுமில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் .. என திரு வள்ளுவர் திருக்குறள் பாடிவைத்தார். வள்ளலார் என்ன புதுமையினைச் சொன்னார் ? பண்டைய மக்கள் நெருப்பினை வழிபட்டனர். சன்மார்க்கத்திற்கு முன்னர், சக மார்க்கம் தாச மார்க்கம் சத்புத்திர மார்க்கம் சன்மார்க்கம் என்றெல்லாம் சன்மார்க்கம் அழைக்கப்பட்டிருந்தது. வள்ளலார் என்ன புதுமையாகச் சொன்னார். 19ஆம் நூற்றாண்டில் ராஜாராம் மோஹன்ராய் தயானந்த சரஸ்வதி ராமகிருஷ்ணர், முதலானோர் தோன்றினர். அவர்களது காலத்தினை ஒட்டிவள்ளலாரும் தோன்றினார். அகம் பிரம்மாஸ்மி என்றெல்லாம் இறைவனை குறித்த வாசகங்கள் ஏற்கனவே இருந்தும், மனித குலம் அதனை மறந்தது. அவ்விதம் மறந்ததை, மகான்கள் அவ்வப்போது உதித்து, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அது போன்ற கொள்கை, கோட்பாடுகளை மீண்டும் சொல்லிச் சென்றனர். வள்ளலார் சொல்லி வைத்தது சுத்த சன்மார்க்கம் ஆகும். திருநாவுக்கரசர் சொல்லியதையும் சிவத்தையும் இருதட்டுக்களில் வைத்துப் பார்த்தால், இரண்டும் ஒன்றினையே ஒக்கும்.
ராமலிங்கரை ஒரு தட்டிலும் அருட்பெருஞ்ஜோதியினை ஒருதட்டிலும் வைத்துப் பார்த்தால், அருட்பெருஞ்ஜோதி ஒரு புதுமையாகத் தெரியும். அவர் வழி காட்டும் இடம் – எம் பெருமான் யார் என்றார் என்றால் அருட்பெருஞ் ஜோதி – தனிப் பெருங் கருணை என உரைத்தார். ஓர் உருவம் ஓர் நாமம் வார்த்தையாக இருந்தது. ஏகம் சத் – என ரிக் வேதம் சொல்கிறது. இந்து என்றால் இந்தியன். வள்ளலார் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயன்றார். ஆனால் அவர்காட்டிச் சென்ற வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல், நாம் எல்லாம் தோல்வி கண்டுள்ளோம் என்றுதான் சொல்ல வேண்டும். சமரசம் என்பது எல்லா மதங்களையும் ஒன்றாகப்பார்ப்பது என வலியுறுத்திவள்ளலார் சொன்னார்.
ஒருசந்தர்ப்பத்தில் ஜமீந்தார் ஒருவர், வள்ளலாரைக் காண்பதற்காக மாட்டுவண்டியை வேகமாக ஓட்டி வந்தேன். 6 மணிநேரம் வரவேண்டிய பயணத்தை3 மணிநேரத்தில் வந்தேன் என்றார். மாட்டை விரட்டினேன் என்றார். அதற்காக வள்ளலார் வருத்தப்பட்டார். முஸ்லீம் மதத்தில் ரஹ்மான் என்றால் அளவற்ற அருளாளன் என்பதுபொருள். ரஹீம் என்ற நிகரற்ற அன்பு உடையவன் என்பதும் பொருள் ஆகும். வள்ளலார் இதனைச் சொன்னார். அதனால், வள்ளலார் என்னையும் ஈர்த்தார். அவர் சொல்லிச் சென்ற தனிப் பெருங்கருணை மிகச் சிறப்புவாய்ந்ததாகும். உன்னையறிந்தால் நீ உன்னை அறிந்தால் என்பது ஒரு சினிமாவில் வரும் பாட்டுஆகும். அக் கருத்துக்கள் வள்ளலாருடையவை ஆகும். என்னுள் என்ன இருக்கிறாது – சிவம் – அல்லா – ஆன்மா ஒன்றுதான். ஆனால் மதத்தின் பெயர்தான் வெவ்வேறு ஆக இருக்கின்றது. இந்த எண்ணத்தை உருவாக்கியவர் வள்ளலார். அவர் என்ன உண்மை எனச் சொன்னாரோ அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அவரது கருத்துக்களை இளைஞர்களின் நெஞ்சிலே விதைக்க வேண்டும்.
http://www.vallalarfiles.com/image/1CZSeiHWytj,$,2b7Z3bYLd4nQ,$,3d,$,3d/sz-tn650/121020081123040000.jpg
இன்று நாட்டில் ஏன் இவ்வளவு பிரச்னைகள் ? அவரது கருத்துக்களைப் பின்பற்றி நடக்காததால்தான்.
ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், திரு வள்ளுவரும், கன்னியாகுமரியில் தான் பிறந்தவர்கள் என பல ஆய்வுகள் சொல்கின்றன. இப்படிப்பட்ட பெரியவர்கள், அருளாளர்கள் என்ன சொன்னார்களோ அக் கருத்தைக்களை அவர்களது காலத்துக்குப் பின்னர், யாரும் பின்பற்றவில்லை. வள்ளலார் பசிப்பிணி போக்கச் சொன்னார். அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் .. என்றெல்லாம் முன்னோர்கள் பாடி வைத்தனர். வள்ளலார் சொன்ன வழியிலிருந்து நாம் எல்லாம் வெகு தூரம் விலகி வந்து விட்டோம். இந்து சமயம். இந்த உலகிற்கே வாழ்க்கை நெறியினை வழிகாட்டிய சமயம் ஆகும். ரிக் வேதம் தந்தது இந்த பூமிதான். “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என வள்ளலார் பாடினார். எல்லா மதமும் ஒன்றுதான். நமதுகுறை வள்ளலார் வழியினைப் பின்பற்றாததுதான். சமரச சன்மார்க்கம் என்பது அன்பை விதைப்பது ஆகும். ஜோதியாய் இறைவனை வழிபடு என்றார்வள்ளலார். நெருப்பிலிருந்து வந்தது ஜோதி ஆகும். நூருல் அலாமுன் ..கிறிஸ்துவத்திலும் இறைவன் உருவம் இல்லாதவன் என்பதே போதிக் கப்படுகின்றது. முதல் மனிதன் ஆதம் என்பவன். ஆதி சிவன் .. பின்னர் மனுதர்மம் வந்தது. இந்த பூமி தீர்க்க தரிசிகள் பலர் பிறந்த பூமி. வள்ளலார் ஆறாம் திருமுறையை இறுதியில் இயற்றினார். அவரது சீர்திருத்தக் கருத்துக்களை. இளைஞர் மனத்தில் விதைத்து விட வேண்டும்.
அதன் பின்னர், மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டி முதலானவற்றை நடத்திய பள்ளி கல்லூரி ஆசிரியப் பெருமக்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப் பட்டது.
திருகருப்பசாமி, சென்னை.
வள்ளலார் தமது 6-வது வயதில் சென்னை சென்றார். தங்கச்சாமி தெருவில் 35 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார். குமரக்கோட்டம், கந்த கோட்டம் மண்ணடியில் உள்ள கோவில்களில் எல்லாம் சென்று வழிபட்டார். .. தரும மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் .. என அருட்பா பாடினார். அதன் பின்னர் தேட்டிலே மிகுந்த சென்னையில் வாழ்வது குறித்தும் பாடினார். அவர் காட்டிய அன்பு கருணை எனப்பட்டது. கைகளை வீசி நடந்தால் கர்வம், எனக் கூறியவர் வள்ளலார். உண்மைஅன்பு உண்மை ஜீவகாருண்யத்தை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் வள்ளலார். பேருபதேசத்தில் நானும் உங்களைப்போல் சமய மதங்களில் நம்பிக்கைகொண்டிருந்தேன் என்றவர்.. பின்னர் .. இன்னும் சில நாட்கள் மட்டும் இங்கிருப்பேன்..நீங்கள் எல்லவரும் ஆத்ம விசாரணை செய்யுங்கள். உடம்பு, மனம் ஆகியவைஎப்படிப்பட்டது என்பது குறித்த ஆத்ம விசாரணையை அவர் சொல்லிச் சென்றார். நாம் பதவி, சொத்து, சுகம் ஆகியவற்றிற்காக வாழ்கிறோம். அவற்றை நீக்கி ஒழுக்க நெறி கடைப்பிடித்தால், கரும் பச்சை திரை நீங்கி விடும்.என்கின்றார். அப்படி ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டே வந்தால் ஜோதி தென்படும்.
பெரும் ஒளி தென்படும். சன்மார்க்கி என்பவன் சாகக் கூடாது. ஆத்ம விசாரம் சதா செய்து கொண்டே இருக்க வேண்டும். புலால் உணவைத்தவிர்க்க வேண்டும். உடல் பற்றிய ஆராய்ச்சி – பற்றற்ற தன்மையில் வாழ்தல் என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
For more photos: http://www.vallalarspace.com/Ramanujam/Photo/1132
மனம் வேலைசெய்தால், பற்று பிடித்துவிடும். பற்றுக் கொள்வதை விடுத்து யார் மனதைக் கட்டுப் படுத்துகின்றோமோ அவர்களுக்கு மரணம் என்பது இல்லை. அவர் சொல்லியது .. ஆண்டவர் வரக் கூடிய நேரம். அவரை உங்களுக்குள்ளேயே தேடுங்கள். நாபிக்கமலத்தில் இருந்து நெற்றிப் பொட்டு வரை ஒரு நாடி இருக்கின்றது என்ற உண்மைகளை வள்ளலார் சொல்லிச் சென்றார். திரைகள் எல்லாம் நீங்கி 7 திரைகளும் அகன்று, நீங்கள் உங்களுக்குள்ளேயே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணலாம் என்றார். அனைவரும் தன்னைப்போல் ஆவதற்கு இந்தவழி முறைகளை எல்லாம் தெள்ளத் தெளிவாக அவர் சொல்லி வைத்தார். சன்மார்க்கத்திற்கென ஒரு தனிக் கொடி கட்டிக் கொண்டார். எனவே அவரது நெறியினை ஒவ்வொருவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
டாக்டர்ஜே. ராஜமூர்த்தி, அரசுகுழந்தைகள்நலமருத்துவர், திருவெண்காடு, நாகப்பட்டினம்.
இந்தியத்துணைக் கண்டத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 கடல்களும் சங்கமிக்கும் நாகர்கோவிலில் இந்த ஞான எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. மற்ற இடங்களில் நடக்கும் இதுபோன்ற மாநாடுகளுக்கும் இங்கே நடைபெறும் இந்த மாநாட்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, என் உளம் பூரிக்கின்றது. இங்கே பங்கெடுப்பவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். கிட்டத்தட்ட 50 %. அரசு 37 % மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும், நாகர்கோவிலில் நடைபெறும் இம் மாநாட்டிற்கு 50 % வருகை தந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். சுத்த சன்மார்க்க கருத்துக்களை இயலாகவும், திரு அருட்பா பாடல்களை இசையின் மூலம் ஒலிக்க வைத்திருப்பதும், நாட்டிய அரங்கினை இங்கே அரங்கில் தவழ விட்டிருப்பதால், முத்தமிழும் இங்கே சங்கமித்துள்ளதைக் காண்பதில் மனம் பூரிக்கிறது.
எனக்கு மிகுந்த ஆச்சரியம். திரு இதயதுல்லா அவர்கள் சற்று முன்னர் பேசினார்கள்.. நாகர்கோவிலுக்கு நாங்கள் ஒன்றாக ரயில் வண்டியில் வந்தபோது 4 மணி நேரம் தாமதமாக ரயில் வந்தது. அந்த சந்தர்ப்பத்தில், அவரிடம் உரையாடியபோதும், இங்கே விழா மேடையில் அவரது எழுச்சி மிக்க பேச்சினைக் கேட்டபோதும் அவர் வள்ளலார் நெறிகளில் கொண்டிருந்த பற்றும் பார்ப்பதற்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தன. இஸ்லாமிய சமுதயாத்தைச் சேர்ந்த ஒருவர் வள்ளலார் நெறிகளில் கொண்டிருந்த ஆர்வம் மிகுந்த வியப்பளித்தது. நான் ஒரு நல்ல ஆன்மீகவாதி என்றார். அவரது பேச்சு, தெளிவாகவும், பொதுவான கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது. அனைத்து உயிர்களிலும் இருப்பது அந்த ஆன்மாதான். ஞானம் என்பது என்ன ? தன்னைத்தானே உணர்தலே ஆகும். தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலா என வள்ளலார் இதனைத்தான் பாடிவைத்தார். நான்பிறப்பால் இந்து ,, இப்போது சன்மார்க்கி. அவர் பிறப்பால் இஸ்லாமியர் .. இப்போது சன்மார்க்கி.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்.அவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அதிலே பேசப்பட்ட விஷயம் என்ன தெரியுமா ? நாட்டிலே கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுவே அதன் கருப்பொருள். கடவுள் மனிதனைக் காப்பாற்றுவதை விட்டு விட்டு, மனிதன். கடவுளைக் காப்பாற்ற வேண்டிய அவல நிலை தற்போது நிலவுவது விந்தையிலும் விந்தை. நாட்டிலே உள்ள ஒவ்வொருவரும் தத்தமது மதம்தான் உயர்ந்தது என்கின்றனர். எவரும் உண்மையான மனிதன் என்ற நிலையிலிருந்து பார்க்கவில்லை என்பதையே இது உணர்த்துகின்றது.
வள்ளல் பெருமான் 6ந் திருமுறையில் தெளிவாகக் காட்டிவிட்டார். தனித் தலைமைப் பெருங்கடவுளாக உள்ள இறைவன் அருட்பெருஞ்ஜோதியாக உள்ளான் என்பதாக. வள்ளலார் ஒரு பெரும் புரட்சியாளர். சீர்திருத்தச் சிந்தனை மிக்கவர். நாம் நன்றாகப் பார்க்க வேண்டும். இதுவரை வந்துதித்த ஞானிகள் அனைவரும் சைவம் சார்ந்து இறைவனைத்துதித்தார்கள். வள்ளலார் அனைத்தையும் கடந்து ஒருவனே தேவன் என்ற முறையில் ஆறாந் திருமுறையில் திரு அருட்பாக்களை பாடினார். எத் துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல் …என்றெல்லாம் பாடியது இதனையே விளக்குவதாகும். கூடுகின்ற மதங்களெல்லாம் சமயங்களெல்லாம். .. என்று சமய மதங்களை தமது அருட்பாவினால் சாடுகிறார்.
இந்த விதத்தில் அவர்., மற்ற ஞானிகளிடமிருந்து வேறுபட்டுநிற்கின்றார். அவர்காட்டிய ஒளி வழிபாடு, மிகச் சிறந்தது. கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக.. எனவும் தெய்வங்கள் பலப்பல சிந்தைசெய்வாரும் .. என்றும்.. உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக என அகவலிலும் .. உருகி உருகிப் பாடி வைத்துள்ளார்.
வள்ளலாருக்கு முன்பே சன்மார்க்கத்தைக் காண்பித்தவர் திருமூலர். அதையும் தாண்டி, சுத்த சன்மார்க்கத்தை இந்த உலகிற்குக் காண்பித்தவர், வள்ளல் பெருமான் ஆகும். தங்கத்திலே 916 KDM தங்கம்தான் சுத்தமானது. துரிசு நீக்கப்பட்டது – கலப்பில்லாதது.என்கின்றோம். அதேபோல் மதக் கலப்பில்லாதது. வள்ளலாரின் நெறியான சுத்த சன்மார்க்கம் ஆகும். சாதியிலே மதங்களிலே சாத்திர … என பாடினார். சாதி வெறி பிடித்தால் என்ன ஆகும். சமீபத்திய நாளிதழ்களிலே நாம் காண்பது என்ன ? மதுரை மாவட்டத்திலே உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள உத்தப்புரத்திலே .. இரு சாராரிடையே ஜாதிச் சண்டை. அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வட்டத்தில் உள்ள கண்டதேவியில் தேரோட்டுவதில் இரு ஜாதிகளிடையே சண்டை. இவற்றை எல்லாம் விடுத்து, வள்ளலார் மனிதனுக்குள்ளே இறைவனைக் காணச் சொன்னார். எப்படி சாத்தியமாகியது என்பதை அண்டங்கள் அத்தனையும் நான் காண .. என பாடி வைத்து அனைவருக்கும் புலப்படுத்துகின்றார். இதுவரை வந்த அறநெறிகளின் சாரம்தான் திருவருட்பா. அல்லா உருவமற்றவர் என்றார் முகமது நபி அவர்கள். வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாக இறைவன் உள்ளார் என்றார். இருவருமே புரட்சிசெய்தவர்கள். இருவரிடமே ஒரு ஒற்றுமை உண்டு. மானிடராகப் பிறந்து ஞானியாக வாழ்ந்தவர்கள்.
அருட்ஜோதிஆனேன்என்றுஅறையப்பாமுரசு ..
ஜோதியுட்ஜோதியுட்ஜோதி..
பாதியிரவில்எழுந்தருளிப்பாவியேனை ..
வஞ்சகநெஞ்சினர்வாய்மைமூடிச்சென்றனர் ..
என அருட்பாக்கள் பாடியவர்.
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார். நமக்குள்ளே இறைவனை உணர வேண்டும். அனைவரும் வள்ளலார் பெற்ற அனுபவத்தினை பெற வேண்டும்.
புறத்திலே உருவ வழிபாடு மக்கள் செய்கின்றனர். வழிபாட்டில் இச்சை இருக்கக் கூடாது. மனித குலத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஆனால் தற்போதெல்லாம் சுயலாபத்திற்காக பக்தி வியாபாரமாக்கிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். வள்ளலார் சொன்ன ஒளி வழிபாடு ஒரு உத்தமமான வழிபாடு. இதில் இடைத்தரகர் யாரும் கிடையாது. வள்ளலார் தாமே நடைமுறையில், சாதனையினை நிகழ்த்திக் காட்டி வாழ்ந்துள்ளார். போதனையைத்தான் இதுவரை வந்த ஞானிகள் செய்தனர். ஆனால் வள்ளலார் வெறும் போதனையுடன் நில்லாது, சாதனையினையும் சேர்த்துச் செய்து காட்டியவர். வள்ளலாரின் முக்கிய கொள்கை ஜீவகாருண்ய ஒழுக்கம், ஒளி வழிபாடு ஆகும். மற்ற ஆன்மீக வாதிகளை ஒப்பு நோக்குகையில், இது உயரிய வழிபாடு ஆகும்.
நாம் பார்த்தோமானால், நாத்திவாதிகளால் தொல்லை ஏது இல்லை.. ஆனால், ,கடவுள் உண்டு என்பவர்கள் தான் என்மதம் பெரியது, என்மதம்தான் பெரியது .. என்று வாதிட்டு வம்பு வழக்கில் ஈடுபடுகின்றனர். கோவில்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் ஆகியவற்றிற்கு குண்டு வைக்கின்றனர். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றார் தந்தை பெரியார். அவர் சொன்னது ஆத்மாவை கடவுளாக வணங்கு என்பதுதான். வள்ளலார் நெறியில் அன்பு அறிவு ஆன்ம நேயம் உண்டு. மனித சமுதாயம் எல்லோரும் இந்தச் செந்நெறியினைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நாகர்கோவிலில் சுவாமி பத்மேந்திரா அவர்கள், உருவானதைப் போல எல்லா இடங்களிலும் உருவாக வேண்டும். சுத்த சன்மார்க்க நெறி தழைத்துப் பரவ வேண்டும். அது ஒன்றே இவ்வுலகத்தை .. குறிப்பாக மானுட சமுதாயத்தை உய்விக்கும் நெறி ஆகும்.
திருஎஸ். ஜெயபால், சட்ட மன்ற உறுப்பினர் குளச்சல்.
எனக்கு மிகவும் மன ஆறுதல் உண்டு. உலக சமாதானத்திற்காக, நல் வாழிவிற்காகவும் வள்ளலார் சுத்த சன்மார்க்க நெறியினை போதித்தார். மனிதன், மதத்தைப் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றான். நாகர்கோவிலில் நடக்கும் ஞான எழுச்சிமாநாட்டினைப் போல எல்லா இடங்களிலும் மாநாடுகள் நடைபெற்று, வள்ளலாரின் நெறி உலகம் முழுவதும் பரவ வேண்டும். சமயங்கள் அனைத்துமே நல்ல கருத்துக்களைத் தான் சொல்லி வைத்தன. ஆனால் வள்ளலார் ஞானத்தைப் போதித்தவர். அது கேட்டுப் பெறுவதல்ல. கேட்டு பெற்று, அனுபவத்தின் மூலம்தான் அடைவது. அவனே முழுமை பெற்ற மனிதன். அப்படிப்பட்ட ஞானத்தைப் போதிக்கும் மாநாடாக வள்ளலார் சங்கம், இங்கு .. நாகர்கோவிலில் ..அமைந்துள்ளது. சமரச சன்மார்க்க சத்திய சங்கம் என்றால் மனித சமுதாயத்திற்கு எனப் பொதுவாக ஏற்பட்டது ஆகும். எந்த மதத்திற்கும், இது சொந்தமானதல்ல. வருடந்தோறும் இது போன்ற மாநாடுகள் நடைபெற வேண்டும். மனித சமுதாயம் சுத்த சன்மார்க்க நெறியினைப் பயின்று வாழ்வில் நந்நிலை அடைய வேண்டும்.
மேல்மருத்துவர்சித்தர்பீடம்அன்பர்.
அவர் தனது உரையில் இதுபோன்ற ஆன்மீக மாநாடுகள் அடுத்தடுத்து நடைபெற வேண்டும். அதன் மூலம் இந்த மனித குல சமுதாயமே திருந்தி வாழ வேண்டும்.
அதன் பின்னர், பரதநாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி மாணவியர் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்றனர்.
சாது சிவாசுவாமி அவர்கள், வல்லநாடு சித்தர் பீடம்.
குமரி முனையினை ஒரு மலை என்பார்கள். இம் மாவட்டத்திலே, நாகர்கோவிலில் ஒரு சன்மார்க்க மலை உருவாகின்றது. சுவாமி பத்மேந்திரா அவர்கள், இந்த ஒரே அரங்கினுள் பல்வேறு சன்மார்க்க சான்றோர்களை எல்லாம் தன் அன்பின் மேலீட்டினால் கொண்டு வந்து அடைத்து, மக்களுக்கு, சுத்த சன்மார்க்க நெறியினைப் போதிக்கும் பெரும் தொண்டினைச் செய்து விட்டார்.
இன்றைய தேதியில் எது வேண்டுமானாலும் நடக்கிறது. மதத்தின் பெயரால் மதம் பிடிக்கலாம். மனிதனுக்கும் மதம் பிடிக்கலாம். நமது இந்தியப் பெரு நாடு, இறையாண்மை மிக்க நாடாகும். மக்களுக்கும் மதத்திற்கும் உள்ள இடைவெளிக்கு என்ன காரணம் ? நாமெல்லாம் எந்த திசையில் இருக்கின்றோம் ? எப்படிவாழப்போகின்றோம் ? ஒரு காலத்தில் மக்கள் விண்ணைப்பார்த்து விவசாயத்திற்கு மழை வேண்டினர். அப்படி அவர்கள் வேண்டுதலை ஏற்று, மழையும் பெய்தது – ஒரு காலத்தில். ஆனால் இப்போது எந்த இடத்தில் குண்டு வந்து விழுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.
வள்ளலார் சுத்த சன்மார்க்க நெறிஎன்ற ஒரு அருமையான நெறியினைப் போதித்தவர். மனித நேயத்தினைப் போதித்தவர். மனித உறவு இன்றைய கால கட்டத்தில் ஏன் இல்லாமல் போயிற்று ? மதத்தின் வழியே வியாபாரம் நடைபெறுகின்றது. இதற்காகவா மகான்கள் பிறந்து போதித்தனர் ? கருவரையில் பிறந்த குழந்தைகள் கரு பட்டறைக்கு பயப்பட வேண்டியுள்ளது. வள்ளலாரின் நெறி மிகச் சிறந்தது. வடலூரில் ஒரே விதமான வழிபாட்டு முறை நிலவ வேண்டும். இந்த சமுதாய முழுவதும் வள்ளல் பெருமான் வகுத்த சீரிய நெறியினைப் பின்பற்ற வேண்டும். முக்கூடல் சங்கமிக்கும் இந்த இடத்தில் இதுபோன்ற ஆன்மீக எழுச்சி மிக்க மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அனைத்து சன்மார்க்க சங்கங்களும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அகற்ற வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி அகவலை கை எடுத்தாலே வேற்றுமை பறந்து விடும். உடல், நாடி நரம்பு அனைத்துமே ஜீவ காருண்யத்திற்கு செலவழித்த வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை நாம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இந் நெறி பரவி, சன்மார்க்கக் கொடி ஒன்றே பறக்க வேண்டும். இங்கே குழுமியிருக்கும் அனனவரும் இதனை ஒருசூளுரையாக ஏற்போம். சுத்த சன்மார்க்கைகள் பரவுவதற்கு அடியேனை ஒரு கருவியாக அழைத்தால், உடனே வந்து தொண்டு செய்யத் தயாராக உள்ளேன்.
சுவாமிபத்மேந்திரா
சாது சிவா சுவாமி அவர்கள் வருடந்தோறும் 3,00,.000 பேர்களுக்கு அன்னதானம் அளித்து வள்ளலார் வகுத்த நெறியில் சீரிய தொண்டு செய்து வருகின்றார்கள்.
அதன் பின்னர் ஏழை சலவைத் தொழிலாளி ஒருவருக்கு தொழில் அதிபர் திரு குமாரசுவாமி அவர்கள் இலவசமாக சலவைப்பெட்டி வழங்கினார்.
டாக்டர் துரைசாமி, உலக மையம், வடலூர்.
சன்மார்க்கம் என்பது முன்பும் இருந்தது. வள்ளலார் பெருமான் காண்பித்தது சுத்த சன்மார்க்க நெறி. இதுதான் இதுவரை இல்லாத ஒன்று. வெகு சிறப்பான நெறி. எல்லோரையும் நேசிக்கின்ற – எல்லா உயிர்களையும் நேசிக்கின்ற ஆன்ம நேயம் என்ற கருத்தை முன் வைத்து வள்ளலார் அருபெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்தார். அன்பு கருணை இரக்கம் தயவு இந்த உணர்வு இருந்தால்தான் – ஜாதி ஆசாரங்களைக் கடந்து – மத உணர்வுகளைக் கடந்து அனைவரையும் ஒரு பெரு நெறியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை வள்ளல் பெருமான் தமது சுத்த சன்மார்க்க நெறியின் மூலம் போதித்தார்.
வள்ளல் பெருமான் வாழ்ந்த காலம், ஆங்கில ஆட்சி நடைபெற்ற காலமாகும். அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலம். மக்கள் ஒருவருக் கொருவர் ஜாதி, மதத்தின் பேரால் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். வள்ளலார் அவர்களுக்காக இறைஞ்சி இறைவனிடம் முறையிட்டுக் கொண்டார். அவர்கள் எல்லாம் திருந்தி, சன்மார்க்க நெறி கொண்டொழுக வேண்டும் என போதித்தார். அவர் போதித்தது மிகவும் எளிமையான ஜோதி வழிபாடு ஆகும்.
For more photos: http://www.vallalarspace.com/Ramanujam/Photo/1132
வள்ளல் பெருமானின் காலத்திற்குப் பின்னர், வடலூர்ப் பெருவெளியில் இதுவரை எந்த விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. சுத்த சன்மார்க்க நெறியினை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என அங்கு சொன்னால், ஒரு கூட்டம் அங்கு இருந்து கொண்டு செய்ய விடாமல் பண்ணுகின்றனர் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம், தமிழ் நாட்டில் உள்ள எல்லா சங்கங்களையும் இணைப்பதற்கு ஒரு நல்ல, சீரிய, கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கும், இம் முயற்சி எடுத்து வரும் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்திற்கும் உறு துணையாக என்றும் இருக்க வேண்டும்.
திரு சூரியமூர்த்தி, வடலூர்.
வள்ளலாரின் நெறியில் பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ மாணவியருக்குப் பரிசு வழங்கிய நிகழ்ச்சி இங்கே நடைபெற்றது. அவரது உயரிய சுத்த சன்மார்க்க நெறி குழந்தைகளிடமும் தற்போது இவ்விதமான போட்டி வைப்பதன் மூலம் பரவி வருகிறது. அதற்கு இம் மாநாட்டினை நடத்தும் திரு பத்மேந்திரா சுவாமிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் நல்ல கருத்துக்களைச் சொல்லிச் சென்றார். அதன்பின் 30 ஆண்டுகள் இடைவெளி கடந்து விட்டது. இந்த ஆண்டு, 130வது ஆண்டு விழா தந்தை பெரியாருக்கு விழா எடுத்தனர்.
திரு அருட்பா 6. திரு முறைகள் வெளி வந்துள்ளன. அவற்றில் எல்லாம் எல்லா மதங்களையும் இதுவரை வந்த சமுதாய சாஸ்திரங்களை எல்லாம் வெறுத்து ஒரே மார்க்கமாக சுத்த சன்மார்க்கத்தினை மனித சமுதாயம் ஏற்க வேண்டும் என வள்ளலார் பாடி வைத்தார். அவரது கொள்கைகள் இன்னும் வேகமாகப் பரவுவதற்கு இதைப்போன்றே ஞான எழுச்சி மாநாடுகள் எல்லா இடங்களிலும் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றம் – சாவி கை மாறியிருக்கிறது. அங்கே – வடலூர் சத்திய ஞான சபையில் - இதற்கு முன் இருந்த திரு சபாநாத ஒளி அவர்களைப் பொறுத்த மட்டில், சரியான நேரத்தில் அனைத்தினையும் செய்ய வேண்டும் என்பார். அதனை மக்கள் மாற்ற விரும்பினர்.
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் இதற்கான தீவிரமான முயற்சியையும் எடுத்து வருகின்றது. நான் என்ற நிலைமை மாறி, சன்மார்க்க சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து, தாம் விரும்பும் மாற்றத்தினை வடலூரில் கொண்டு வருவதற்கு செயல் பட வேண்டும்.
திருமதி உமா பன்னீர் செல்வம்
பல்வேறு மதங்கள் மொழி இடம் என இருந்ததை மாற்றி ஒன்று சேர்ப்பதுவே சுத்த சன்மார்க்க நெறி ஆகும். தந்தை பெரியாரின் கருத்தும்,. வள்ளலாரின் கருத்தும் ஒத்தவை ஆகும். பல்வேறு இந்தியாவிற்கு வந்திருந்தாலும், அவர்களில் நாட்டில் இல்லாத ஒரு சிறப்பான நெறியினை சுத்த சன்மார்க்க நெறியில் கண்டார்கள். அவர்களும் கற்று வருகின்றார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அனைவருமே தவறாமல் அவரது நெறியினை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
திரு செளந்தரராஜன், திண்டுக்கல்.
வள்ளல் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறி, இனம், மொழி, மதம் அனைத்தையும் கடந்ததாகும். அதன் நிரந்தரத் தலைவர் வள்ளல் பெருமானாகும். நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்றார் வள்ளலார். எல்லா சன்மார்க்க சங்கங்களும் ஒருங்கிணைந்து வள்ளலார் சொன்ன நெறி முறைகளை மக்களுக்குச் சென்றடைவிக்க பெருமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு சங்கங்கள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தாலும், அனைவரும் ஒருமைப்பட வேண்டும். வள்ளலாரின் சுத்த சன்மார்க்கப் புது நெறியினை, வெளி நாட்டினர்களும் கற்றுக் கொள்ள அதனை அவர்களுக்கும் கற்பிக்க வேண்டும்.
எல்லா மொழிகளிலும் வள்ளல் பெருமானின் நெறி பரப்பப்பட வேண்டும். வடலூரில் நல்ல கழிப்பறை, தங்கும் அறை கட்டித் தரப்பட வேண்டும். அனைவரும் நால்வகை ஒழுக்கங்களைத் தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். “தினமணி” ஆசிரியர் சன்மார்க்க நெறியினை தனது வாழ்வில் கடைப்பிடித்ததால்தான் நல்ல முன்னேற்றம் கண்டார்.
திண்டுக்கல்லில் வள்ளல் பெருமான் சொன்ன மூலிகைகளைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்து வழங்குகின்றோம். ஏழை எளிய மக்களுக்கு பசிப்பிணி போக்கி வருகின்றோம். கோவில்கள், மாதாகோவில்கள், மசூதிகள் அங்கெல்லாம் இருக்கும் ஊனமுற்றோரைக் கண்டறிந்து அங்கேயே கொண்டு சென்று உணவளிக்கின்றோம். பள்ளி மாணவர்களுக்கு 6ஆம் வகுப்பிலிருந்து வள்ளலாரின் நெறியினைக் கற்றுத் தருகின்றோம்.
பிரதி மாதம் ஒருமுறை சன்மார்க்கப் பெரியவர்களை திண்டுக்கல் மலை அடிவாரம் சன்மார்க்க சங்கத்திற்கு அழைத்து வந்து சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்துகின்றோம். கடந்த மாதம் 81-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் வடலூர் திரு பெருமாள் அவர்கள் பேசினார். உலக மையம், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம், மாவட்டந்தோறும் இயங்கி வரும் சன்மார்க்க சங்கங்கள் முதலானவை, எல்லா சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியினை ஏற்படுத்தி சன்மார்க்க உலகிற்கு நல்ல பலத்தினை ஏற்படுத்த வேண்டும். வடலூரில் சன்மார்க்க நூலகம் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான், வெளி நாடுகளிலிருந்து வருவோர்,. அந் நூல்களைப்படித்து, சுத்த சன்மார்க்க நெறியினைக் கற்பதற்கு ஏதுவாக இருக்கும். வள்ளல் பெருமான் அனைவருக்குமாக வாங்கிக் கொடுத்த பெருவெளியினை மீட்டு நிலை நிறுத்த வேண்டும்.
டாக்டர் திரு பத்மநாதன் (S.B.I. Officer – Retired)
வள்ளலார் வகுத்த நெறியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு இந்த மாநாட்டின் மூலம் அனைவரும் ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின்னர், மதுரையில் இருந்து சென்ற வள்ளலார்ஸ்பேஸ் மெம்பர், இணைய தளத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு செந்தில் மருதையப்பன் (அமெரிக்கா) மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த திரு சிவக்குமார் (சிங்கப்பூர்) ஆகியோரின் பெரிய முயற்சியால், உலகளாவிய அளவில் உள்ள சங்கங்கள் மேற்படி இணைய தளத்தில் இடம் வழங்கப்பெற்று, அதனைப் பயன் படுத்தி வருவதையும் இதுவரையிலும் கிட்டத்தட்ட 75,000 சன்மார்க்க அன்பர்கள் இந்த இணைய தளத்தினைப் பார்த்துப் பயன் பெற்றுள்ள விபரங்களையும், என்ன இல்லை இந்த இணைய தளத்தில் .. நீங்கள் அனைவரும் தெரிந்து கொண்டு .. பயன் பெறுங்கள் .. என வலியுறுத்திப் பேசினார். இந்த இணைய தளம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் அங்குள்ள நபர்களுக்கு அவர் வழங்கி, அதன் பயன்பாட்டினை விளக்கினார்.
திரு காமாக்ஷி ஐயா, உலக மையம், வடலூர்.
உலகியலாரைத் திருத்துவதற்கே உதித்தவர் வள்ளல் பெருமான். எல்லா உயிர்களையும் சமரசத்துடன் நோக்கியவர். அகவலிலே இல்லாத தகவல் எதுவுமே இல்லை. அனைத்தும் அதிலே அடக்கம். ஊரன் அடிகள் அவர்கள் வடலூரைப் பற்றி எழுதிய வடலூர் வரலாற்றிலே அளப்பரிய செய்திகள் உள்ளதை அவர் தெரிவித்தார்.
அருள் – கடவுள் சக்தி, ஞானம் – பேரறிவு – சுத்த சிவம் – அருள் – சக்தி – சத்து ஆகும். சத்துப் போனவன் செத்துப் போவான். மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் .. என்பதை நினைவு கூர்ந்தார். வள்ளலாருக்கு மிஞ்சிய ஞானிகள் யாருமில்லை. ஏன் இதுவரை எவரும் வள்ளல் பெருமானைத் தொடர்ந்து ஒரு நந்நிலை அடையவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மிடையே நன் முயற்சி இல்லை என்பதையே இது காட்டுவதாக அமைந்துள்ளது. திரு அருட்பாவை அடிக்கடி படித்து, நமது ஆன்மாவை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், இந்த ஞான எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டதற்கே ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
எனக்கு உள்ள ஆசைகள் ஆவன .. ..
ஞான சபை சோம்பேறி மடமாக பத்துப் பதினைந்து நபர்கள் தூங்குவதை மாற்ற வேண்டும். .. மாற வேண்டும்.
அடித்து உதைத்து உணவளித்தல் என்ற நிலை மாற வேண்டும். இந் நிகழ்வு பல இடங்களில் நடைபெறுகின்றது. .. மாற வேண்டும்,
போட்டுவிட்டுச் செல்லும் செறுப்பு காணாமல் போகும் நிலை .. மாற வேண்டும். .. ..
வடலூரை ஞான பூமியாக மாற்ற வேண்டும் .. மாற வேண்டும்.
ஞான சபையில், வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சுத்த சன்மார்க்கக் கொடியினை இறக்கவே கூடாது.
அந்தப் பகுதியில் குப்பை போடக்கூடாது .. போடக் கூடாது..
நிறையத் தவறுகள் நடக்கின்றன. .. நடக்கக் கூடாது .. நடக்கவே கூடாது .. ..
மாதத் திங்கள் இதம் ஒன்று உலக மையத்தின் மூலம் வெளியாகின்றது. அனைவரும் அதனை வாங்கிப் படிக்க வேண்டும்.
சத்திய ஞான சபையினை எதற்காக வள்ளல் பெருமான் கட்டினாரோ அந்த நோக்கங்கள் நிறைவேற வேண்டும். வடலூரை அனைவரும் உடலூரில் காண வேண்டும்.
அதன்பின்னர், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின்பால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமிய அன்பர் திரு அ. செய்க் இல்யாஸ் என்ற ஒருவர், தனது குடும்பத்துடன் அசைவத்திலிருந்து, சைவம் கடைப்பிடித்து, சுத்த சன்மார்க்க நெறிக்கு வந்ததற்கு, அவரது செய்கையைப் பாராட்டி, அவருக்கு, வள்ளல் பெருமானின் உபதேசப் பகுதி நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அவர் எக்ஸெலன்ட் சமூக சேவை நிறுவனத்தின் தலைவராகக் கோட்டாரில் உள்ளவர்.
திரு ஊரன் அடிகள், வடலூர்.
முதலில் “அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் சொன்னார். ஆனால் வந்திருந்த கூட்டத்தினர் ஒரு சிலரே இதனைத் திரும்பச் சொன்னார்கள்.
வள்ளலார் வழங்கிய அருட் கொடைகள் பல. சில நிறுவனங்களாக .. சில நூல்களாக .. இன்னும் சில .. அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமாக .. அவை எண்ணிலடங்கா ..
இங்கே, இதையும் சேர்த்து 8 சுத்த சன்மார்க்க மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
For more photos: http://www.vallalarspace.com/Ramanujam/Photo/1132
சில முக்கியமான விஷயங்கள் இங்கே சொல்லியாகவே வேண்டும். திரு முருக கிருபானந்த வாரியார் அவர்கள் .. ஹரஹரநம பார்வதீ பதஹே .. என்பார்.
அனைவரும் அறிவீர்கள்.
வைஷ்ணவர்கள் .. கோவிந்த நாம சங்கீர்த்தனம்..... என்பார்கள். இவை எல்லாம். மந்திரங்கள் அல்ல. அவை மங்கள கோஷங்கள் ஆகும்.
ஆனால், அருட்பெருஞ்ஜோதி மந்திரம் அப்படி அல்ல. . மஹா மந்திரம் ஆகும் .. சைவத்தில் 5 எழுத்து .. பஞ்சாக்கர மந்திரம் என்பர்.. நமோ நாராயண .. என்பது .. மந்திரம். .. இவற்றை எல்லாம் கோஷங்களாக எழுப்புவார்கள்.
மந்திரங்கள் எல்லாமே கோஷங்கள் ஆகி விடாது. அதேபோல் கோஷங்கள் எல்லாமே மந்திரங்களும் ஆகா.
குருவானவர்.. சீடருக்கு உபதேசிப்பது – மந்திரம்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு உபதேசித்த மந்திரம்-அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பது ஆகும்.
வள்ளலார் சொல்றாரு .. எனக்கு ஆண்டவர் சொன்னது இம் மகா மந்திரம் .. என்று.
எனவே, வள்ளலாருக்கு ஆண்டவர் சொன்ன மந்திரத்தை சொல்வதற்கு தயங்கக் கூடாது. என்றவுடன்…அனைவரும் மகாமந்திரத்தை சொன்னார்கள்.
அதன்பின்னர் கன்னியாகுமரி வரலாற்றுப் பேரவை என்ற .. ஒரு ஆய்வுக் களஞ்சியம் .. இதழாக .. வெளியிடப்பட்டது. திரு ஊரன் அடிகள் தமது பேச்சினைத் தொடர்ந்தார்.
இதனை டாக்டர் பத்மநாதன் அவர்கள் எழுதி இருந்தார். அவர் .. உலகம் முழுதும் சென்று வந்தவர். பேச்சிப்பாறை அணை குறித்த நூல், அவரது 100வது மலராக வெளி வந்துள்ளது.
கன்னியாகுமரி மிகச் சிறந்த பூமி ஆகும். நிலவளம், நீர்வளம் அனைத்திலும் சிறந்தது. 3 சமுத்திரங்கள் கூடுகிற முக்கோண முனை (Tri-angle), உலகத்திலேயே 2 இடங்களில்தான் உள்ளன. இந்தியாவில் கன்னியாகுமரியில் – ஒன்று. மற்றொன்று தென் ஆப்பிரிக்காவில் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) எனப்படும். இரண்டு இடங்களுக்கும் சென்றிருக்கின்றேன். 1 பகல் 1 இரவு என 24 மணி நேரம் அங்கு இருந்தேன்.
இந்தியத் திருநாட்டில் வடக்கே பரமசிவன் – பார்வதி என தெய்வங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. தெற்கே கன்னி – குமரி. கிறித்துவத்தில் கன்னிப் பெண் தெய்வம் உண்டு. நித்தம் தவம் செய்யும் குமரியன்னை .. என பாடல்கள் உண்டு. கல்கத்தா பகுதிகளில் காளி பிரபல்யம் ஆகும். அது தானோ என்னவோ கலாட்டாக்களுக்கு அப்பகுதிகளில் பஞ்சமில்லை. பம்பாயில் மஹாலெக்ஷ்மி தான் பிரபல்யம். காந்தி அடிகள் .. சத்திய சோதனையில் .. கல்கத்தா காளியைக் கண்டு ஏமாந்தேன் என்பார். அவரது சீடரான விவேகானந்தர் ஒரு முறை காணாமல் போய்விட்டதாகவும் ஆஸ்ரமத்தில் இல்லை என்பதாகவும் தேடினர்.
கல்கத்தா – பம்பாய் ஆகிய இடங்களுக்குப் போகாத பெருங் கூட்டம், கன்னியாகுமரிக்கு வருகிறது. காரணம் என்ன ? இந்த பூமி ஞான பூமி. இது விஞ்ஞான மண் .. மெய்ஞ்ஞான மண்.
முந்தைய ஜனாதிபதி திரு அப்துல் கலாம்.. அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவர், சைவ சாப்பாட்டு முஸ்லீம். அவர் தேடிய தோரியம் .. அணு ஆராய்ச்சிக்குரிய மண் கிடைத்தது. அது தங்கம் – பிளாட்டினத்தை விட விலைமதிப்பு மிக்கது ஆகும். அது விளையும் மண், இந்த கன்னியாகுமரி மண் ஆகும்.
அவர் குரானையும், சைவ சமயத்தையும் எடுத்துச் சொல்கிறார். அவர் திருக்குறளில் சொல்லப்பட்ட நெறிமுறையின்படி வாழ்பவர்.
சற்று முன் பேசிய இஸ்லாமிய சகோதரர் திரு ஹிதயத்துல்லா சென்னையில் இருந்து இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என வந்துள்ளார். அவரது எழுச்சி மிக்க பேச்சினை அனைவரும் கேட்டீர்கள். வள்ளலாரிடம் ஏன் இவ்வளவு ஈடுபாடு அவருக்கு .. ? வள்ளலார் சமரசம் பேசியவர்..அதன் படி வாழ்ந்து காட்டியவர்.
வள்ளலார் காலத்திலேயே அருட்பா - மருட்பா போர் எல்லாம் நடந்தது. வள்ளலாருக்காக வக்காலத்து வாங்கியவர் சதாவதானம் சேகுத்தம்பிப் பாவலர் ஆகும். எதிர்த்தவர் கதிர்வேலு என்பவர். கதிர்வேலுக்கு – எதிர்வேலு சதாவதானி என்றனர்.
நாகர்கோவிலுக்கு கோட்டார் என்பது பழைய பெயர் ஆகும்.
விவேகானந்தருக்கு ஞானம் கிடைத்த மண் - இந்த மண். எனவே இது ஞான மண் ஆகும். அவர் இங்கு வந்து மெய்ஞ்ஞானம் பெற்றவர். விஞ்ஞானம் கற்றவர் முந்தைய ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஆவார். திரு மாதவன் நாயர், சிவதாணுப் பிள்ளை .. ஆகியவர்கள் எல்லாம் இங்கே தோன்றியவர்கள்.
தொல்காப்பியர் .. அதங் கோயில் என பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவப் பெருந்தகைக்கும் இதுதான் ஊர் என நிரூபித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் மாவட்ட கெஜட் உண்டு. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இல்லாமலேயே இருந்தது.
கேரளாவில் கெஜட்டியர் (Kerala Manual – Gazetteer ) திரு நாகமையா எழுதினார். கெஜட்டியர் போடுவதற்கு தூண்டியவர் திரு பத்மநாபன் அவர்கள் ஆகும்.
வள்ளல் பெருமான் போன்றவர்கள் – வள்ளல் பெருமானின் அந்தஸ்தில் உள்ளவர்கள் – இந்தியாவில் தான் தோன்ற முடியும். அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில்தான் தோன்ற முடியும். அதுவும் சைவத்தில்தான் தோன்ற முடியும். திருவள்ளுவர் சைவ சமயத்தில் தான் தோன்றியவர்.
சில வருடங்களுக்கு முன்னர், வள்ளலார் கிறித்துவரே என ஒரு கட்டுரையினை ஒரு பாதிரியார் எழுதி ஒரு நபர் மூலம் என்னிடம் கொடுத்து அனுப்பியிருந்தார். 15 பக்கங்கள் கொண்டது அது. வாங்கியவுடனே அதனைக் கிழித்துப் போட்டு விட்டேன்.
பின்னர், உலக தமிழ் மாநாட்டில் அவர் என்னை சந்தித்தார். அந்தத் தலைப்பினை மாற்றி, வள்ளலாரும் கிறிஸ்துவமும் என்று அவர் ஒரு புத்தகம் எழுதினார்.
வள்ளலாரும் நபிகள் நாயகமும், வள்ளலாரும் ஏசு நாதரும், வள்ளலாரும் வல்லநாட்டு சுவாமிகளும், வள்ளலாரும் நாராயண குருவும் என 15 பேர் பேசினார்கள். வள்ளலாரின் நெறிபோன்றதொரு உயர் நெறி ஏதும் இல்லவே இல்லை. திருவள்ளுவர். காந்தி மகான், வள்ளலார் போன்றோர் இந்த ஞான மண்ணில் தோன்றியவர்கள் ஆவர்.
தேவாரத்தை கசக்கிப் பிழிந்தால் அதில் வருவது .. பக்தி .. பக்தி .. பக்தி .. வெறும் பக்தி. ஆன்ம உருக்கம் அங்கு இல்லை. கடவுளுக்கு தோன்றியது. பக்தி வளர்ந்திருக்கு .. ஆன்மா உருகவில்லை என.
திருவாசகத்தைக் கசக்கிப் பிழிந்தால் வருவது.. ஆன்ம உருக்கம்..அவரவர்கள் உருகுவதற்காக.. பக்தி என்பது உள்ள உருக்கம். இது ஆன்ம உருக்கம் ஆகும். (Soul Melting). நூறு, இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வளர்ச்சி.
பக்தி இருக்கு .. ஆன்ம உருக்கம் இருக்கு .. ஒண்ணுமட்டும் இல்லை .. அது கருணை .. உயிர்க்கருணை.
கருணையும் பொருளையும் ஒன்றெனக் காணும் காட்சி ..
என்னையும் இரக்கந்தன்னையும் ..
இதுபோன்ற திரு அருட்பாக்களைப் பிழிந்தால் வருவது கருணை ஆகும். உயிர் இரக்கம் .. உயிர்க் கருணை .. எல்லா உயிர்க்கும் இரங்குவது.. பக்தி .. கடவுளிடம் வைப்பது. ஒரு ஆத்மா .. இன்னோரு ஆத்மாவைப் பார்த்து உருகுகிறது. இதற்கு வள்ளலார் வகுத்த நெறி சுத்த சன்மார்க்க நெறி .. உயிர் இரக்கம் .. ஜீவகாருண்யம் என்பதையே அவர் போதித்தார்.
பழைய சாதம் .. பக்தி .. வள்ளலார் வழங்கிய புதிய சக்தி .. கருணை ஆகும். ஜீவகருணை .. கடவுள் பக்தியுடன் சொல்லி .. இம் மார்க்கத்தை மக்களுக்கு போதிப்பதற்காக .. வருவிக்க உற்றவர் வள்ளல் பெருமான்.
சுவாமி பத்மேந்திரா அனைவரையும் கொட்டோடு முழக்கி வரவேற்று இங்கே அமர்த்தினார். இன்று மதியம் சாப்பாட்டில் 2 பாயாசம் வழங்கினார்கள்.. என்னவென்றால்…(1) கேரள நாட்டின் பாரம்பரியத்தின்படி ஒரு பாயாசமாம் (2) தமிழ் நாட்டின் பாரம்பரியத்தின்படி ஒரு பாயசம் என்றார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மிகவும் உதவியவர் திரு குமாரசாமி ஆவார். அந்தக் காலத்திலேயே 60-ம் நம்பர் நூல் நெய்து விற்பனன செய்தவர். அவரை பயோனியர் குமாரசுவாமி என அழைப்பார்கள். எல்லாவற்றிலும் முன்னோடி. இந்தப் பகுதி மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரும்பாடு பட்டவர். அவரது பேரன் பெயரும் குமாரசுவாமி.
அதேபோல் திரு சுப்பையா என்ற அன்பர் இந்த மண்டபத்தினையும், இந் நிகழ்ச்சி நடைபெறுவதற் கென்றே இந்த ஆண்டும் கொடுத்துள்ளார். அனைவருமே வள்ளல் பெருமானின் அருளுக்குப் பாத்தியம் ஆவார்கள்.
இதுபோன்றவர்களை எந்தக் கண்ணேறும் தாக்கக் கூடாது. வள்ளல் பெருமானே கண்ணேறு பற்றி, திரு அருட்பாவில் 4 இடங்களில் கூறியுள்ளார்.
பண்ணேறு மொழி அடியர் பரவி வாழ்த்தும்
நின் பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்
கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென்றால்
காட்டுகிலாய் கருணை ஈதோ ..
சுத்த சன்மார்க்க நெறியுடன் ஒழுக்க நெறி நின்று பணிபுரியும் இங்குள்ள எவரையும் கண்ணேறெல்லாம் தாக்காத விதத்தில் அருள்புரிய வள்ளல் பெருமான் உதவி புரிவதுடன், அவர்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கண்டிப்பாக அருளுவார்.
திரு பத்மேந்திரா சுவாமிகள், நாகர்கோவில்.
கடந்த 2000-ஆவது ஆண்டுமுதல் இந் நிகழ்ச்சிகளை, நாகர்கோவிலில் நடத்தி வருகிறேன். இதுவரை 7 மாநாடுகளை நடத்தி உள்ளேன். ஆரம்ப காலத்தில் இம் மாநாடு நடப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், அனைவருமே பின்னர் பங்கு கொள்கின்றனர்.
இந்த விழாவினில் கலந்து கொள்வதற்கும் சொற்பொழிவு செய்வதற்கும் அனைத்துப் பெருமக்களுக்கும், இது இங்கு தங்கு தடையின்றை நடைபெறுவதற்கு பெரும் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி.
இங்கு வந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் முதல் நாள் முதலே அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சன்மார்க்க நெறி சார்ந்த புத்தகங்களை மதுரையிலிருந்து, திரு மருது பாண்டி என்ற அன்பர் ஒருவரும், சேலம் டாக்டர் திரு வெற்றி வேல் அவர்களும், மற்றொரு புத்தக பதிப்பாளரும் ஆக 3 புத்தகக் கடைகள் அன்பர்களுக்கு, அருள் விளங்கும் புத்தகங்களை வழங்கின. திரு அருட்பா ஆடியோ சி.டி.களும், ஜோதிக் கூண்டும், பல்வேறு சன்மார்க்கச் சான்றோர் எழுதிய திரு அருட்பா விளக்க நூல்களும் இங்கு இடம் பெற்றன.
மொத்தத்தில் இந்த ஞான எழுச்சி மாநாடு, நாகர்கோவிலிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் மாநாடாக அமைந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? .. ..
For more photos: http://www.vallalarspace.com/Ramanujam/Photo/1132
Write a comment