DAEIOU - தயவு
2008 டிசம்பர் 6, 7, 8 தேதிகளில் திருவண்ணாமலையில் வள்ளல் பெருமானின் ஞான சபை, தருமச்சாலை முதலானவை திறப்பு விழா நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் வள்ளல் பெருமானின் தருமச்சாலை திறப்பு விழா
திருவண்ணாமலையில் வசிக்கும் மூத்த சன்மார்க்க அன்பர் திரு கலைநம்பி அவர்கள் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியால் ஈர்க்கப்பட்டவர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், கிரிவலப் பாதையில் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கப் பெரு நெறி பரப்புவதற்காக, ஞானசபை, தருமச் சாலை முதலானவை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
வள்ளல் பெருமானின் திரு அருளால், கடந்த 2 ஆண்டுகளாக, இப் பணியினை கடும் முயற்சி மேற்கொண்டு, கட்டி முடித்து, தற்போது கீழே குறிப்பிட்ட நாட்களில் திறப்பு விழா செய்வதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருகின்றார்.
2008 டிசம்பர் 6 (சனி)
2008 டிசம்பர் 7 (ஞாயிறு)
2008 டிசம்பர் 8 (திங்கள்)
ஆகிய தேதிகளில் அங்கு கீழே குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்ற உள்ளார்.
1. சத்திய தருமச் சாலை சமையற்கூடம் திறப்பு விழா-அணையா அடுப்பு ஏற்றி வைத்தல்.
2. அருட்பா பீடம் (எண்கோண வடிவில் உள்ளது)
3. கொடிமரம் ஸ்தாபனம்
4. தவக்குடில் திறப்புவிழா
5. அலுவலகக் கட்டிடம்
6. உணவுக் களஞ்சியம் திறப்பு விழா.
7. ஸ்தல விருஷம் நடுதல் விழா.
http://www.vallalarfiles.com/image/0Ord5draEcrU2,$,2fKxVVUKRw,$,3d,$,3d/sz-tn650/14.jpg24180000.jpg
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க. தமிழகமெங்கும் உள்ள சன்மார்க்க சான்றோர்களும் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர். அண்டை மாநிலங்களிலும் இருந்து அன்பர்களும் வருகை தர உள்ளனர்.
அவர்கள் தவிர, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும் அன்பர்கள் கலந்து கொள்ள வருகின்றார்கள்.
திருவண்ணாமலை அருகே கருமாரப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் சுவாமி வெள்ளைச்சாமி அவர்களைக் கொண்டு அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்ற உள்ளார்.
ரமணாஸ்ரமத்திலிருந்து திரு கணேசன் இந் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கின்றார்.
சிங்கப்பூரிலிருந்து வள்ளலார் திரு அருட்பா தெய்வ இசை அமுதம் திட்டத்தினை நடத்திவரும் திரு சிவக்குமார் அவர்கள் கலந்து கொள்கின்றார்.
பிரம்மகுமாரி சங்கத் தலைவர் வருகை தர உள்ளார்.
திரு அருட்பா இசை விழாவிற்கும் ஏற்பாடு செய்து வருகின்றார்.
விரிவான நிகழ்ச்சி நிரல் வரப்பெற்றவுடன் இந்த இணைய தளத்தில் முழு விவரமும் பிரசுரிக்கப்படும்.
இதனைக் காணும் அன்பர்கள் முன்கூட்டியே தயார் ஆவதற்கும், இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் இச் செய்தி இப்போது பிரசுரிக்கப்படுகிறது.