அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்
மாதாந்திரக் கூட்ட நடவடிக்கைகள்
நாள் – 3.8.2008 ஞாயிற்றுக்கிழமை.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான், தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் என்ற பல உரை நடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில், 6.4.2006 பூச நாள் அன்று, சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது
.
மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 3.8.2008ந் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணி. கொடி வணக்கம்
திரு அருட்பாவில், சிற்சக்தி துதி (கொடி வணக்கம்) 10 பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, தயவுக் கொடி ஏற்றப் பட்டது. தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்குப் பின்னர், வந்திருந்த அன்பர்கள் அனைவரும், சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து, திருவருட்பாவில் (1) திருவடிப் புகழ்ச்சி, (2) அருட்பெருஞ்ஜோதி அகவல் (3) அட்டகம் முதலானவற்றையும், சின்மயபுரம் என்ற சின்னாளப்பட்டி சன்மார்க்க அன்பர்கள், குறிப்பாக மாதர் சங்கத்தினர், வழக்கம் போல் திரளாகக் கலந்து கொண்டு, சுவாமி சரவணானந்தா அவர்கள் பெயரால் வழங்கிய சற்குரு வாழ்த்துப் பாவினையும் பாடினர்.
மதியம் 12.30 மணி
சன்மார்க்க தியானம் நடைபெற்றது.
பிற்பகல் 1.00 மணி
தயவுத்திரு மா.ராமலிங்கம் அவர்களால் வள்ளற் பெருமான் அருளிய பேருபதேசம் அனைத்து அன்பர்களுக்கும் படித்துக் காட்டப்பட்டு, பொருள் விளக்கம், மற்றும், சந்தேகம் தெளிவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பிற்பகல் 1.30 மணி வரவேற்புரை மற்றும் நன்றியுரை
தயவுநூல் வெளியீட்டு அறக்கட்டளையின் பொறுப்பில் இருக்கும் தயவுத்திரு எஸ்.ஆர்.ராமலிங்கம், அவர்கள் தமது உரையில், இதே நாளில், தூத்துக்குடி அன்பர்கள், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில், தயவு – இறை இயல் உண்மை – சித்திப் பெருவிழா மற்றும் சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளச் சென்று விட்டதால், இந்தக் கூட்டத்தினை இதுவரை இன்று செய்யப்பட்ட சிறப்புக்களுடன் நிறைவு செய்து, அனைவரையும் வரவேற்று, பின் நன்றியுரையும் பகர்ந்தார்.
பிற்பகல் 1.40 மணி
அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை நடைபெற்றது, இதனை திண்டுக்கல் திரு வே.அருணகிரி அவர்கள் முன்னின்று நடத்தினார்.
இக் கூட்டத்தில் கீழ்க்காணும் முக்கியமான அன்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1. தயவுத்திரு மேடா நித்தியானந்தம்
2. தயவுத்திரு மதுரை கணபதிராம்
3. தயவுத்திரு பாளையங்கோட்டை லக்ஷ்மையா குடும்பத்தினர்
4. தயவுத்திரு முத்துக்குமாரசாமி, கரூர்.
5. தயவுத்திரு எம். ராம்குமார்
6. தயவுத்திரு எம். ராம்சங்கர்
7. அருட்பெருஞ்ஜோதி தயவு நிலையத்தினைச் சேர்ந்த நாகல் நகர் அன்பர்கள் முருகதாஸ், ஷண்முகவேல், சுப்ரமணி, மாதவன்.
8. தயவுத்திரு ராமராஜ் தம்பதிகள், சின்னாளப்பட்டி.
9. தயவுத்திரு அமராவதி அம்மையார்
10.அனைத்து திண்டுக்கல் வாழ் தயவுத் தொண்டர்கள் ஆகியோர்.
சின்னாளப்பட்டி, தயவுத்திரு தயாசேகர், திருமதி ரவிச் சந்திரா ஆகியோரால் அன்னமளிப்பு உபயம் செய்து அன்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு பசியாற்றுவித்தல் பணி நிறைவேறியது.
இந் நிகழ்ச்சியில். சுமார் 150 சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Write a comment