வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கக் கூட்டம், தி.நகர், சென்னை.
(Regd No.345/2008).
நாள் 18.10.2008
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இன் சென்னை ஹோட்டலில் (INN CHENNAI HOTEL) 18.10.2008ந் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடந்தது.
அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள், சான்றோர் பெருமக்கள் ஆகியோர் வருகை புரிந்திருந்தனர்.
அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்துடன் கூட்டம் துவங்கியது.
டாக்டர் திரு கே. சிவராமன், செயலாளர் தஞ்சாவூர்.
மழையும் வெள்ளமுமாக தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலைமை இருந்தும், அதனை எல்லாம் பொருட்படுத்தாது, பல மாவட்டங்களிலிருந்தும், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த அனைத்து சன்மார்க்க அன்பர்களையும் வரவேற்கிறேன்.
இதுவரை வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க ட்ரஸ்ட் என பெயரிடப்பட்டு வந்த இந்த அமைப்பு, இனிமேல் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம், தி.நகர், சென்னை என அழைக்கப்படும் என்றார். அந்த விதத்தில், பதிவுத்துறையிலும் உரிய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.
ஏற்கனவே ட்ரஸ்டாக இருந்தது ஏன் சங்கமாக மாறியது என அனைவரும் கேட்கலாம். ட்ரஸ்ட் என்பது தனியார் அமைப்புக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. சங்கம் என்று பதிவு செய்ததால், இது பொது நிறுவனமாகக் கருதப்படும். இதுவே, இந்த மாற்றத்திற்கு அடிப்படைக்காரணம் ஆகும்.
வள்ளல் பெருமான் நிறைவேற்ற நினைத்த பல திட்டங்களையும் இந்த சங்க அமைப்பின் மூலம் நிறைவேற்றலாம். அதற்குக் கிடைத்த முதல் வெற்றி, டாக்டர் வேணுகோபால் அவர்கள் வடலூர் சத்திய ஞான சபையினைச் சுற்றி உள்ள இடங்களை உபயோகப்படுத்தத் தயார் செய்த மாஸ்டர் பிளான் அரசிடம் கொடுக்கப்பட்டு அவர்களது பரிசீலனையில் உள்ளது.
எனவே அதனை அனைத்து அங்கத்தினர்களும் இந்த (பெயர் மாற்றத்தினை) அங்கீகரிக்க வேண்டும். உடனே அனைவரும் கரவொலி எழுப்பி, இதனை அங்கீகரிப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும், சங்கத்தின் நிதி நிலைமையினை மேம்படுத்த வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அங்கத்தினர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும். சங்கத்திடமும் உள்ள நிதியும், சமீபத்தில் நாகர்கோவிலில் நடைபெற்ற வள்ளலார் ஞான எழுச்சி மாநாட்டில் செலவழித்தது போக சுமார் ரூ.1,00,000 மட்டுமே மிஞ்சும். எனவே நிதி நிலையினை சரிசெய்வதற்கு, எல்லா மாவட்டங்களிலும் சங்க உறுப்பினர்களை கூடுதல் எண்ணிக்கையில் சேர்த்து, நிதியினைக் குவிக்க வேண்டும். இதற்கு அனைவரும் தங்களால் ஆன முயற்சியினையும் ஒத்துழைப்பினையும் நல்க வேண்டும்.
11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், Moral Education Class-ல் மனுமுறை கண்ட வாசகம் சேர்க்கப் படவேண்டும். முன்னர் நான் எழுதிய 10ஆம் வகுப்பிற்கான கட்டுரை, அரசினால், பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அவ்விதம் சேர்க்கப்படும் பாடத்திட்டங்கள், 5 ஆண்டுகள் வரை இருக்கும். Syllabus committee இதனை தேர்வு செய்து, எல்லா சங்கங்களும் ஒருமித்துத் தீர்மானித்து high level-லில் அதனை கொடுத்து நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். இதனை எல்லாச் சங்கங்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இதனை அரசாங்கம் உணரும் நிலை ஏற்படும். அதன் பின்னர். பாடத்திட்டத்தில் கண்டிப்பாக இதனை சேர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
சென்னையில் வள்ளலார் கோட்டம் அமைப்பது குறித்து அரசாங்கத்திடம் ஏற்கனவே கோரிக்கை வைத்தோம். அதனை வலியுறுத்தி இடம் ஒதுக்கீடு செய்யப் பெற வேண்டும்.
வள்ளலார் உலா வருகை என்ற திட்டத்தினை எல்லா கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று வள்ளற் பெருமானின் கொள்கைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்வதற்கு ஒரு vehicle வாங்க வேண்டும்.
சங்க மாநாடுகள் அடுத்தடுத்து நடத்தப்படவேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். 2009ஆம் ஆண்டு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கணக்கு எண். 1213 155 131 201 ஆகும். இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
திரு கே. என். உமாபதி, இணைச் செயலாளர், சென்னை-
எந்தப் பகுதியில் இந்த சன்மார்க்க சங்கம் இயங்குகிறதோ அந்தப் பகுதியின் பெயரையும் இணைத்து வைக்க வேண்டும் என பதிவு அலுவலகத்தில் தெரிவித்து விட்டனர். இந்த சங்கத் தலைவர் திரு சுப்புராமன் அவர்கள் தி.நகரில் உள்ளார். அவரது அலுவலகமும் அங்குதான் உள்ளது. எனவே, இந்த சங்கத்தினை வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம், தி.நகர், சென்னை என 19.8.2008 அன்று பதிவு செய்துள்ளோம்.
மேலும் 31.8.2008 அன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர், இந்த சங்கம் 19.8.2008 அன்று பதிவு செய்யப்பட்டதை அறிவித்தார். அன்றைய தேதியில் திரு முத்து ஜோதி தலைமையில் வள்ளலார் குறித்த சீரியல் திரைப்பட இயக்குனர் திரு கே.ஆர். அவர்கள் மூலம் முக்கியமான மூத்த சன்மார்க்க அன்பர்களைக் கலந்து பேசி, வள்ளலார் குறித்த சீரியல் தொடர் எடுப்பது குறித்து விவாதித்தோம்.
பெண்ணாடம் திரு ஷண்முகம், சிதம்பரம் திரு நமசிவாயம், விரிவுரையாளர் (ஓய்வு), சேலம் திரு குப்புசாமி, திரைப்பட இயக்குனர் திரு கே.ஆர் ஆகியோர் வள்ளலார் குறித்த சீரியல் குறித்து விவாதித்து, அதற்கான முடிவினை எடுப்பார்கள். மறுநாள் 19.10.2008 அன்று, இது குறித்த கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் 2008 ஆகிய மாதங்களில் இத் தொடர் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
. ஏற்கனவே 31.8.2008 அன்று கூடிய போது, சங்க அங்கத்தினர்கள் எல்லாம் கூடி, அதன் பின் சங்க நிர்வாகிகளை விஸ்தரிப்பது பற்றி பேசிக்கொள்ளலாம் எனவும், அனைவரும் கலந்து பேசி அடுத்த கூட்டம் போடுவது குறித்து தீர்மானித்தோம். அதன்படி, 18,10.2008 - இன்றைய தேதியில் இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.
இருவரும் மிக விரிவாக அளித்த விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அலுவல் சார் அங்கத்தினர்களும், பல்வேறு இடங்களிலுமிருந்து வந்து கலந்து கொண்ட சன்மார்க்க சங்கத்தினர்களும், இந்த மாற்றத்தினை ஏற்றுக் கொண்டு, இத் தீர்மானம் அனைவராலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தச் சங்கத்தினை நன்கு வலுப்படுத்த வேண்டுமென்றால், நிறைய அங்கத்தினர்களைச் சேர்த்து, அவர்களிடமிருந்து ஆயுள் உறுப்பினர் கட்டணம், வருடாந்திர உறுப்பினர் கட்டணம் முதலானவை வசூலிக்க வேண்டும் என்று இருவரும் கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டனர்.
பழைய காலங்களில் திரு அருட்பா ஒன்று மற்றும் இரண்டாம் திருமுறைகளில் இருந்து ஓரிரு அருட்பா பாடல்கள் பள்ளிக் கல்வியில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதெல்லாம் திரு அருட்பா பாடல்கள் பள்ளிப் பாடங்களில் சேர்க்கப்படவில்லை. சன்மார்க்க ஒழுக்கத்தினையும் வள்ளல் பெருமான் கற்பித்துச் சென்ற உரை நடைப் பகுதியையும் பாட நூல்களில் சேர்க்கப் படவேண்டும்.. ஆறாவது வகுப்பு முதல் 10வது வகுப்பு வரை திரு அருட்பா பாடல்களில் ஒரு சில பகுதிகளையும், அதற்கு மேல் அந்தந்த வகுப்புக்குத் தகுந்தாற்போல் பாடல்களைத் தேர்வு செய்து சேர்க்க வேண்டும்.அதேபோல் உரைநடைப் பகுதியிலும், வகுப்பின் தகுதிக் கேற்ப சேர்த்து படிக்கச் செய்ய வேண்டும். கட்டாயப்பாடமாக நடைமுறைப் படுத்தப்பட்டால், அவர்கள் மூலம் உருவாகும் சமுதாயம் சன்மார்க்க சமுதாயமாகவே அமையும்.
சன்மார்க்கத்திற்கென அப்போது தனியே ஆள் சேர்க்கும் நிலையே ஏற்படாது. தானாகவே உருவாகும்.
இந்த சங்கம் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற கீழ்க்கண்டவற்றை ஏற்படுத்துவதை செயல்படுத்துவதற்கே.
1. உபகாரச்சாலை
2. சாஸ்திர சாலை
3. உபகார சாலை
4. விருத்தி சாலை
5. உபாசன சாலை
6. யோக சாலை
7. விவகார சாலை
8. சன்மார்க்க போதினி
வள்ளலார் சொல்லிச் சென்ற மேற்காணும் திட்டங்கள், கடந்த 140 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படவே இல்லை. மீண்டும் இவற்றையெல்லாம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த சங்கம் துவக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போதுள்ள வடலூரை, வள்ளற் பெருமான் அவர்கள் நினைத்த வண்ணம் உருவாக்க வேண்டும்.
டாக்டர் ஹூசேன்,சங்க நிர்வாகி. சென்னை.
இந்த சங்கம் பதிவு செய்யப்பட்டபொழுது (1) தலைவர், (4) துணைத் தலைவர்கள் (1) பொதுச் செயலாளர் (3) இணைச் செயலாளர்கள் (1) பொருளாளர் (1) வெளியீட்டாளர் (1) ஆடிட்டர் ஆகியோரை உள்ளடக்கியதாக இருந்தது.
ட்ரஸ்ட் என்பது வேறு, சங்கம் என்பது வேறு. சங்கம் என்பது ஜனநாயக முறைப்படி பதிவு செய்வதாகும். அப்படி இருந்தால்தான் சங்கத்தின் மூலம் பல காரியங்களை நாம் வலியுறுத்த முடியும். மேலும், ஏற்கனவே ட்ரஸ்ட் என இருந்ததை சங்கம் என மாற்றுவதற்கான காரணம் – வள்ளல் பெருமான் சொல்லியவற்றை செயலாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான். எனவே, இந்த இடைக்காலத்தில், அன்றைய தேதியில் இருந்தவர்களை வைத்து, உடனே “சங்கமாக” ரிஜிஸ்டர் செய்தோம். இதற்குண்டான Bye law போன்றவற்றை தமிழில் தயார் செய்துள்ளோம். இனிமேல் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். 1 மாத கால இடைவெளியில் பொதுக் குழு கூட வேண்டும். அனைவருக்கும் முன் கூட்டியே விவாதப் பொருட்களை அனுப்பி 3 வார கால இடைவெளியில் இனிமேல் கூட்டம் கூட்டப்படும்.
இச் சங்கத்தின் சட்ட திட்டங்களை ஒரு சில அன்பர்கள் படிக்கக் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில், கீழ்க்காணும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் 30.9.2006 அன்று சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் தமிழ்நாட்டில் இருந்து வந்த அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளின் முன்னிலையில் துவக்கப்பட்டது.
அது, தற்போது சங்கம் என பெயர் மாற்றப்பட்டு, சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சங்கத்தில் அங்கத்தினர் ஆவதற்கு 18 வயதிற்கு மேற்பட்டிருக்க வேண்டும். அங்கத்தினரை நீக்கும் உரிமை பொதுக்குழுவிற்கு உள்ளது.
இச் சங்கம் துவக்கப்பட்டதின் முக்கிய நோக்கமே, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் கொள்கைகளை அனைவருக்கும் பரப்புவதாகும். நிர்வாகக் குழுவில் பங்கு பெற்றுள்ளவர்கள் 3 கூட்டத்திற்குத் தொடர்ந்து வராவிடில், அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டு மற்றும் வாழ்நாள் மெம்பர்ஷிப் தொகை ஆகியவை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டன.
4 மாதங்களுக்கு ஒரு முறை நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஓராண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். 29 நபர்கள் தேர்வு செய்து அவர்களில் 13 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். எஞ்சியவர்கள் கமிட்டி மெம்பர்களாகக் கருதப்படுவர்.
நிர்வாக நலங்கருதி, அவசரக் கூட்டம் ஏதேனும் கூட்ட விரும்பினால், பொதுக் குழுவை கூட்டி, அதனை நடத்தலாம்.
சங்கத்திற்குத் தேவையான பொருட்கள், பொதுச் செயலாளரின் ஒப்புதலுடன் வாங்கப்படும்.
இந்த சங்கத்திற்கென ஒரு பத்திரிகை நடத்தப்பட வேண்டும். தற்போது Vision of Vallalar தயார் செய்யப்பட்டுள்ளது. Voice of Vallalar என்ற பத்திரிக்கை நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குனர் திரு ஏ. கோதண்டராமையா என்ற கே.ஆர். மற்றும் சங்க துணை தலைவர்.
வள்ளலார் வருகை உலா பிரச்சாரப் பயணத்திற்கென ஒரு vehicle வாங்கி வள்ளற் பெருமானின் கொள்கைகளை கிராமந் தோறும் சென்று அனைவரும் அறியும் வண்ணம் பிரச்சாரம் செய்ய வேண்டு உள்ளது. இதற்கென vehicle வாங்குவதற்கென ஒரு சிலர் sponsor-ல் வாங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வள்ளலார் வாழ்க்கை, கொள்கைகள் விளக்கம் குறித்த சீரியல் எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட முதலீடு வேண்டியுள்ளது. 5, 6 Episode தயார் செய்து விட்டால், ஒளிபரப்பைத் துவக்கலாம். தற்போதெல்லாம், ஒளிபரப்பும் சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கூடிய மட்டில், அவர்களை அணுகி, இந்த சீரியலை வெளியிடுவதற்கு ஆக்க பூர்வமாக அந்த சேனல்களை அணுகுவோம்.
செயலாளர் டாக்டர் திரு சிவராமன் அவர்கள் ஜெயா டி.வி.யில் கடந்த ஆண்டு பேசினார்கள். அனைவரும் ஆர்வத்துடன் கேட்டார்கள். நல்ல வரவேற்பு இருந்தது. சேனல்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, நமக்கு, இதனை செலவைக் குறைத்து ஒளிபரப்பும் வாய்ப்பு பெருகி வருகிறது. கூடிய மட்டில். 2009 ஜனவரி மாதம் முதல் சீரியல் துவங்கலாம் என இருக்கின்றேன்.
திரு ராமச்சந்திரன், சங்கப் பொருளாளர்.
இச் சங்கத்தின் நிர்வாகத்தை நடத்துவதற்கு முதலில் நிதி ஆதாரத்தை கூட்ட வேண்டியுள்ளது. ஆயுள் மெம்பர்ஷிப் சேர்த்தால் (ரூ.1,000/-) அது Corpus fund என்ற விதத்தில் டெபாசிட் செய்யப்பட்டு விடும். நிறைய மெம்பர்களை சேர்க்க ஒரு ஸ்பெஷல் ட்ரைவ் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆயுள் மெம்பர்கள் அதிகம் சேர்த்தால் அந்த தொகையினை டெபாசிட் செய்வதன் மூலம், அதில் வரும் வட்டியைக் கொண்டு, ஏனைய செலவுகளுக்கு அதனை பயன் படுத்த வாய்ப்பு உண்டு.
இந்தச் சங்கத்திற்கென கரூர் வைஸ்யா பேங்கில் கணக்கு துவங்கியுள்ளோம். உள்ள ஒவ்வொரு மெம்பரும் குறைந்த பட்சம் 5 ஆயுள் மெம்பர்களை சேர்க்க வேண்டும். 1,000 மெம்பர்கள் இவ்விதம் சேர்ந்தால் ரூ.1,00,000/- டெபாசிட் ஆகிவிடும். அடுத்தடுத்த செலவுகளுக்கு இது பயன்படும்.
அலுவல் சார் குழுவினர் தவிர, கீழ்க்காணும் நபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருவாளர்கள்
1. அருட்பெருஞ்ஜோதி அடிகள். அண்ணாநகர், சென்னை.
2. ஏ. வரதராஜன், எழில் நகர், தஞ்சாவூர்
3. பி. ஷண்முகம், எம்.ஜி.ஆர்.நகர், சென்னை.
4. வேணுகோபால், பெரம்பூர்.
5. ஏ.சுந்தரேசன். இந்திரா நகர் மேற்கு, பழனி.
6. ஏ.ராமானுஜம், நாராயணபுரம்.
7. வி. திலீப் குமார், நல்லெண்ணத் தெரு, ராயப்பேட்டை, சென்னை.
8. கே.துரைராஜ், மவுண்ட் ரோடு, சென்னை.
9. ஆர். ராஜவேல், விருகம்பாக்கம், சென்னை.
10. கே. ஜெயகுமார், என்.வி.என்.நகர், திருமங்கலம், சென்னை.
11. தியாகராஜன், என்.வி.என்.நகர், திருமங்கலம், சென்னை.
இறுதியில் திரு ஜி.என்.உமாபதி அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.
Write a comment