Vallalar Pannattu Sanmargha Sangam.
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்க சாதனைகள்

வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் 2006ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ந் தேதி தமிழக பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுகூடி சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் துவக்கப்பட்டது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளோடும் அருட்பிரகாச வள்ளலாரின் ஆசியோடும் தமிழக சன்மார்க்கிகளின் ஆதரவோடும் இந்த ஓராண்டு காலத்தில் இச்சங்கம் வியத்தகு சாதனைகளைச் செய்து நமக்கு விழிப்புணர்வை ஊட்டி இருக்கிறது.

சத்திய ஞான சபையில் ஒளி வழிபாடு
இன்று வள்ளல் பெருமானின் வடலூர் சத்திய ஞான சபையில் 138 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் ஒலிக்கிறது. சட்டப்பிரிவு 27, 28. 63ன்படி தமிழக அறநிலையத்துறை ஆணையரின் தீர்ப்பால் ஞான சபையில் வள்ளலார் ஒளி வழிபாடு நடக்கிறது. சபாநாத ஒளி சிவாச்சாரியாரின் சிவலிங்க உருவ வழிபாடும். பிரதோஷ பூஜையும் இன்று ஞான சபையில் இல்லை. இது ஒரு கூட்டு முயற்சியே என்றாலும் இதில் வள்ளலார் பன்னாட்டு சங்கத்துக்கு பெரும் பங்கு உண்டு. ஒற்றுமையோடும், ஒருமையோடும் எழுந்த சன்மார்க்கிகளின் ஒருமித்த குரல்தான், ஒருமித்த நீதிமன்ற அணுகுமுறைதான், ஒருமித்த உண்ணாவிரதப் போராட்டம்தான் ஒளி வழிபாட்டை 138 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வடலூரில் கொண்டு வந்து சரித்திரம் படைத்திருக்கிறது.

தமிழக சன்மார்க்க சங்கங்களின் ஒருங்கிணைப்பு (FEDERAL BODY)
வள்ளலார் பன்னாடு சங்அம் 15.10.2006ல் வடலூரில் துவங்கி ஏப்ரல் 2007ல்; திண்டுக்கலில் கால்பதித்து, மே 2007ல் தஞ்சையை இணைத்து ஜூலை 2007ல் மதுரையை வலம் வந்து, திருவாரூர், நாகை, காரைக்கால் சன்மார்க்கிகளை ஒன்று கூட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களை ஒருங்கிணைத்து. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, நமது ஒருமையை உலகுக்குக் காட்டி மகிழ்கிறது என்பது சத்தியமான உண்மை.

இச் சங்கத்தின் ஓராண்டு செயல்பாடுகளை அனைவரும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

சட்ட சபையில் வெட்டுத் தீர்மானம்
18.8.2006 வடலூர் ஒளி வழிபாட்டிற்காகவும். வடலூர் தெய்வ நிலைய
சீர்திருத்தங்களுக்காகவும் எங்களது வேண்டுகோளின்பேரில் செல்வி பால பாரதி M.L.A. அவர்கள் சட்ட சபையில் ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழக முதல்வரைச் சந்தித்தல்
10.11.2006 திருக்கோயில்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் திருமதி A.S.
& 11.11.06 பொன்னம்மாள் Ex M.L.A. அவர்களை வடலூருக்கு அழைத்து வந்து
அங்குள்ள நிலைமையை நாங்கள் நேரில் அறியச் செய்தோம்

உண்ணாவிரதப் போராட்டம்
8.12.2006 வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்க செயற்குழு
உறுப்பினர்களாகிய நாங்கள் தொண்டர்குலப் பெருமாள் தலைமையிலான ஒளி வழிபாடு கோரும் வடலூர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
12.12.2006 திருமதி பொன்னம்மாள், Ex M.L.A. தமிழக முதல்வர் கலைஞர்
அவர்களைச் சந்தித்து வடலூர் நிலைமையை நேரில் விளக்கினார்.
பின்னர் அறநிலையத்துறை அமைச்சரையும். ஆணையரையும்
சந்தித்து கோரிக்கைகளை சமர்ப்பித்தோம். இது சம்பந்தமான
தொடர் வழக்குகளில் ஈடுபட்ட தொண்டர்குலப் பெருமாள் அவர்
பணியைத் தொடர பன்னாட்டு சன்மார்க்க சங்கம் நிதி உதவி
செய்தது.

வேலை வாய்ப்புத் திட்டம்.
15.3.2007 தஞ்சையிலுள்ள சன்மார்க்க குடும்பங்களில் இருந்து 30 பேருக்கும் பெண்ணாடத்திலிருந்து 20 பேருக்கும் சென்னை பெரம்பூர் சிம்சன் குரூப் கம்பெனியில் சங்கத்தின்
உதவியோடு மெக்கானிக் வேலை வாங்கி மெக்கானிக் வேலை வாங்கித் தரப்பட்டது
15.11.2007 சென்னை மறைமலை நகரில் இயங்கும் யூ.கால் கம்பெனியில் தஞ்சையியிருந்து 7 பேர் மோட்டார் மெக்கானிக் டிரைனிங்கிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அயல்நாடுகளில் வள்ளலர் கொள்கை பரப்புதல்

7.8.2007 கோலாலம்பூர் வர்த்தக சங்கத்தில் வள்ளலரும். அறிவியல்
உண்மைகளும் என்னும் தலைப்பில் சன்மார்க்க சொற்பொழிவு
நிகழ்த்தப்பட்டது

நூல்கள் வெளியீடு
வள்ளலாரின் தியானம்
The Life and eaching of Vallalar (Booklet)
வள்ளலார் வழி திருமண கையேடு
சன்மார்க்க உயிரடக்கம்
இக் கையேடுகள் அச்சில் உள்ளன.

வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம்
15.8.2007 திண்டுக்கல் திருமலைக்கேணி சன்மார்க்க நெறிமுறை பயிற்சி முகாம்
50 நபர்களுக்கு நடத்தப்பட்டது


கடந்த ஓராண்டில் தஞ்சை, திண்டுக்கல், மதுறை பள்ளிகளில் மாணவர்களுக்கு திரு அருட்பா பாட்டு ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டி நடதி, சன்மார்க்க விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.

திரு அருட்பா இசைப் பேழைகள் வெளியீடு
திரு K.R. அவர்கள் தலைமையில் தலைவர் சுப்புராமன் அவர்களின் முயற்சியால் இசைக்கலைஞர்கள் S.P.பால சுப்ரமணியன். உன்னி கிருஷ்ணன், சின்மயி, ஷ்ரவ்யா, உஷாராஜன் மற்றும் இசைப்பள்ளிக் குழந்தைகள் பாடிய இசைப் பேழைகள் மூன்று வெளியிடப்பட்டுள்ளன.



"அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்" - வள்ளலார்

தொகுப்பு
பேராசிரியர் டாக்டர் பி.கி.சிவராமன்.

4 Comments
Ramanujam jam
உலகளாவிய அளவிலே திருவருட் பிரகாச வள்ளற் பெருமானாரின் கொள்கைகள் பரவுவதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், பன்னாட்டு சன்மார்க்க சங்கம் தன்னையும் ஈடுபடுத்தி, அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது ஆகும்.
கடந்த ஓராண்டில் மட்டுமே இம் மாநிலச் சங்கம் - ஏற்கனவே செயல்பட்டு வரும் ஏனைய சன்மார்க்க சங்கங்களின் செயல்பாட்டில் இம்மியளவும் தலையிடாமல் - அதே சமயம் - அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தீவிரமான கொள்கையின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக் கூட்டமெல்லாம் நடத்தி, வள்ளற் பெருமானின் கொள்கைகளைப் பரப்பி வருகிறது.
ஞான சித்தர்களின் காலம் வந்து விட்டது. இனியும் காலம் தாழ்த்தாதீர்கள் என வள்ளல் பெருமான் உலகியலீரை நோக்கி வாய்ப் பறையார்த்ததன் பலன் தற்போது கனிந்து வருகிறது.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய திரு அருட்பா ஆறாம் திருமுறை சத்திய அறிவிப்பு பாடல்
ஐயனருள் வருகின்ற தருணமிது கண்டீர்
ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்ஜோதி துரியநட நாதன்
சுகஅமுதன் என்னுடைய துரைஅமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கொயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் விரைந்தே.
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அருளிய தயவுப் பாக்களில் சுத்த சன்மார்க்கப் பதி வருகை பாடல்
.
தனித்தலைமைத் தயாநிதிஎன் தந்தைவரு தருணம்
சார்ந்ததின்று ஆதலினால் சேர்ந்துவம்மின் இங்கே
பனித்தநெடுங் கலியெல்லாம் பறந்துகெடும் இன்னே
பாரறியாப் பரமசுகம் பறந்துநமைத் தேடி
கனித்தகனி காம்போடே கிஞ்சுகவாய் கொஞ்சக்
களித்துவரு கின்றதுகை யேந்திபெறு வீரே
இனித்தகனி இறைவனது இன்புருவம் ஆகும்
ஏற்பீரேல் எக்காலும் இனித்திருக்க லாமே.
திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் - தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் தாண்டி - உலகளாவிய அளவிலே எல்லா நாடுகளுக்கும் பரவ வேண்டும் என்ற அடிப்படையில் www.vallalarspace.com இணைய தளத்தில் இடம் பெறச் செய்ததற்கு நன்றி.
தொடரும் பணிகளுக்கு வாழ்த்துக்கள்
Friday, May 2, 2008 at 12:53 pm by Ramanujam jam
Perumal  Devaraj
VERY GOOD EXCELLENT
perumal
bangalore
Saturday, May 17, 2008 at 05:42 am by Perumal Devaraj
k.ellappan
vazhga valamudan. oli vazhipadu thodara miga magizhchi.
ellappan
Monday, May 26, 2008 at 12:21 pm by k.ellappan
Ramanujam jam
கடந்த பல ஆண்டுகளாக சன்மார்க்க சங்கத்தினர்களின் மனத்திலே இருந்த ஆதங்கம், வடலூர் சத்திய ஞான சபையில், வள்ளல் பெருமான் காட்டிய வழியில், ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதுவாகும்.
பல தரப்பட்ட போராட்டங்களை, மாநிலம் முழுவதிலும் சன்மார்க்க அன்பர்கள் பல்வேறு கால கட்டங்களில் மேற்கொண்டதாலும், வடலூரிலேயே தொடர் போராட்டங்கள் மேற்கொண்டதாலும், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கமும், இதனை மிகவும் வலியுறுத்தி, நீதி மன்றங்களில் தக்காருடன் இணைந்து செயல்பட்டதாலும், பழைய வந்தனா முறைகள், பிரதோஷ வழிபாடுகள் நீக்கப்பட்டு, 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நெய்வேலியைச் சேர்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி என்ற சன்மார்க்க முதியவரைக் கொண்டு, ஜோதி வழிபாடு - வள்ளல் பெருமானார் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி - நடைபெற்று வருகிறது.
சன்மார்க்க அன்பர்களின் உள்ளத்திலே இது உவகை ஊட்டிய ஒரு - நெடு நாள் எதிர்பார்க்கப்பட்ட செய்தியாகும்.
தொடரும் - இப் பணிகள்.
Monday, May 26, 2008 at 13:39 pm by Ramanujam jam