Dhayamoolam
தியானத்தின் மூலம் சொல்லில் அடங்கா பேரமைதி

{tag.month}07/2007{/tag.month}

“யாரோ அதீதிகள் ஊருக்குள் வந்து விட்டார்கள் போலும் அவர்களை நாய்களை ஏவி விட்டு விரட்டி அடிக்கிறார்கள்” என்று பிலோமினா கணவர் கூறினார். “இந்த மக்கள் ஏன் தான் இப்படி இருக்கிறார்களோ” என்று பிலோமினா அலுத்து கொண்டாள். சிறிது நேரத்தில் இரண்டு அதீதிகள் இரைக்க இரைக்க ஓடி வந்தார்கள். பிலோமினாவும் அவள் கணவரும் அவர்களை அன்போடு வரவேற்று தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள். மிகுந்த கனிவோடும் பரிவோடும் பேசி அவர்களைச் சமாதானப் படுத்தினார்கள். பிலோமினா சட்டென எழுந்து வீட்டிற்குள் சென்று அங்கு கலயத்தில் இருந்த கோதுமை மாவில் இரண்டு ரொட்டியும் கிழங்கும் செய்து எடுத்துவந்தாள். அதை அவர்களுக்குக் கனிவோடும் பரிவோடும் பரிமாறினாள். அந்த ரொட்டிகள் அவர்களின் பசியைப் போக்குவதற்கும் போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த பிலோமினா “காலையில் நல்ல திருப்தியான உணவு உண்ணலாம்” என்று பலவாராகப் பேசி அவர்களைத் திருப்தி இன்பம் அடையச் செய்தாள்.பின்னர், மற்றொரு கலயத்தில் இருந்த பாலை இரண்டு டம்ளர்களில் ஊற்றி அவர்களைப் பருகச்செய்தாள்.


அதன்பிறகு எல்லோரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிலோமினாவிற்கும் சற்று களைப்பாக இரக்கவே. தூம் படுக்கைக்குச் செல்வதாகக் கூறினாள். ஆப்போது அதீதிகளில் இளையவர். “எனக்கு இன்னம் கொஞ்சம் பால் கொடுங்கள்” என்றார் பிலோமினாவிற்கு திக் என்று ஆகிவிட்டது. தன் கணவரின் காதுகளில் “கலயத்தின் அடியில் மிகச் சிறிதளவே பால் இருக்கிறது. அதைக் கொடுப்பது மரியாதையாக இருக்குமா?” என்று கேட்டாள். இதை அறிந்த இளையவர் “எனக்கு ஒரு மடக்கு பால் இருந்தால் போதும், எடுத்து வாருங்கள்” என்றார். வேறு வழி இல்லாமல் கணவரும் மனைவியும், வீட்டிற்குள் சென்றார்கள். பிலோமினா கலயத்தில் இருந்த பாலை ஓர் டம்ளரில் ஊற்றினாள். என்ன ஆச்சரியம்! டம்ளர் பாலால் நிரம்பி வழிந்தது மற்றும் ஓர் டம்ளரில் ஊற்றினார்கள், அதுவும் நிரம்பி வழிந்தது, மற்றும்ஓர் டம்ளரில் ஊற்றினார்கள், அதுவும் நிரம்பி வழிந்தது. இருவரும் கலயத்தினுள் உற்றுப் பார்த்தனர். கலயத்தின் அடியில் ஓர் சிறிய ஊற்றுப்போல் பால் சுரந்து கொண்டிருந்தது. இந்த அதிசயத்தைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். வந்தள்ளவர்கள்யாராக இருக்கக்கூடும் என்ற சிந்தனையோடு, அந்த இரண்டு டம்ளர் பாலையும் அவ்விருவருக்கும் கொடுத்தார்கள். அவர்கள் அப்பாலை அருந்திவிட்டு அயர்ந்து தூங்கலானார்கள்.


பிலோமினாவிற்கும்அவள் கணவருக்கும் இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. நடந்த அதிசயத்தைப் பற்றியும், வந்துள்ளவர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற சிந்தனையிலும் மூழ்கிப் போய் இருந்தனர். வெளியே இடி மின்னலுடன் மழை கொட்டிக் கொண்டிருந்தது. குளிர் காற்று வேகமாக அடிக்கத் தொடங்கியது. இருவரும் கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டார்கள். அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.


அதீதிகள் இருவரும் அதிகாலையிலேயே எழுந்து புறப்படத் தொடங்கினார்கள். பிலோமினா தம்பதியருக்கு அவர்களுடன் பேசவே அச்சமாக இருந்தது. சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்ட பிலோமினா “தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள். அதற்கு அவர்கள் அங்கே பாருங்கள் என்று அக்கிராமத்தைச் சுட்டிக் காட்டினார்கள். அந்த கிராமம் மழை வெள்ளத்தால் மூழ்கிப் போயிருந்தது. அங்கே இருந்த மக்கள் என்ன ஆனார்கள் என்று பதட்டத்தோடு பிலோமினா கேட்டாள். “அவர்கள் எல்லாரும் மீன்களாகவும், தவளைகளாகவும். பாம்புகளாகவும் மாறிவிட்டார்கள” என்றனர் அதீதிகள். ஏன் அப்படி என்று அதிர்ச்சியோடு கேட்டனர் தம்பதியர். “அவர்கள் மனிதர்களோடு வாழத் தகுதியற்றவர்கள்” என்றனர் ஆதீதிகள். அங்கு அசாத்தியமான மௌனம் நிலவியது. “உங்களுக்கு என்ன வேணடும். கேளுங்கள்” என்று அதீதிகள் கேட்டனா.


“ நாங்கள் இப்போது இருப்பது போவவே எப்போதும் ஒன்றாக இருந்து ஒன்றாகாவே இறந்துபோக வேண்டும” என்றனர் பிலோமினா தம்பதியர்.


“நீங்கள் சாகப் பிறந்தவர்கள் அல்ல. அங்கே பாருங்கள்” என்று அவர்கள் குடிசை இருந்த திசையைச் சுட்டிக் காட்டினார்கள். என்ன அதிசயம்! குடிசைக்கு பதிலாக அங்கே ஒரு அழகிய பங்களா இருந்தது.


“உங்கள் கலயத்தில் எப்போதும் வற்றாத பால் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும். அதனை கொண்டு பசித்தவர்களின் பசிப்பிணியைப் போக்கி, மனிதப் பிறவியினால் அடையத் தக்க ஆன்ம லாபத்தை காலமுள்ள போதே பெற்றுக் கொண்டு வாழி நீடுழி” என்று கூறியவாறு அதீதிகள் இருவரும் வந்த வழியே சென்றனர்.


பிலோமினாவும் அவள் கணவரும் செய்வதறியாது திகைத்த வண்ணம் அவர்கள் சென்ற திசையைப் பார்த்த வண்ணம் நின்றனர்.


பிணத்திற்க்கு போட்டுள்ள ப+மாலையை பட்டாம்ப+ச்சி விருப்பத்துடனேயே அணுகுகிறது. பட்டாம்ப+ச்சிக்கு வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம் தெரியாது. தியானம்செய்பவரின் மனநிலையும் இதுபோலத்தான் இருக்க வேண்டும். அன்பின் அடிப்படையில் தான் தியானமே மலருகிறது. ஆதைப் புரிந்து கொண்டால்தான் தியானத்தின் மூலம் சொல்லில் அடங்கா பேரமைதியும் கிடைக்கும்.


- ஓஷோ.

manimarran.m
if it is true show the proof and continue this publishing else don't publish , this space not for story publishing
Thanks to All Vallalar Devotees
M.Manimarran
9841343534
Tuesday, April 21, 2009 at 00:22 am by manimarran.m