சத்தமில்லாமல் ஒரு அன்னதானம் மதுரையிலே
thinaththanthi papper news madurai 2013.jpg
thinaththanthi papper news madurai 2013.jpg
thinaththanthi papper news madurai 2013.jpg
thinaththanthi papper news madurai 2013.jpg
இந்த இடம், டெலிபோன் துறைக்குச் சொந்தமானது. எனவே காலி செய்ய வேண்டும் என்று திரு அன்பானந்தம் அவர்கள் காலத்தில், டெலிபோன் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒரு நாள் வருகை புரிந்தனர். அவர்கள் வந்த நேரம், மதிய உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த நேரம்.
வந்து பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். ஆகா...என்ன உன்னதமான பணியினை மேற்கொள்வதற்கு..இந்த இடத்தை..திரு அன்பானந்தம் அவர்கள் பயன்படுத்துகின்றார்கள். எனவே, இதனை நாம் தடுக்க வேண்டாம் என. வந்திருந்த தொலைத் தொடர்புத் துறை அலுவலர், தம் பங்கிற்கு,..ஒரு தொகையினைக் கொடுத்து...ஜீவகாருண்யம் தழைக்க...உதவி புரிந்தாராம். இதனை திரு அன்பானந்தம் அவர்களே...தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக இந்த இடம், மதிய அன்னம் அளிக்கும் பணிக்குப் பயன்படுகின்றது.
கடந்த 9.6.2013 அன்று, திரு அன்பானந்தத்தின் ஓராண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. திரு அருட்பா பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது.