Vallalar Universal Mission Trust   ramnad......
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும்
உடையில்லை , உணவில்லை , என்று  என்னிடம் வந்து கேட்டவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை, கொடுக்கவேண்டும் என்ற விருப்பமும் இல்லை.  பெரியோர்களை நாடியும் செல்லவில்லை, அப்படிச்செய்யவேண்டும் என்ற ஆசையும் எனக்கில்லை.   ஆதலால் நான் நல்லவன் என்று பெயர் எடுக்கவில்லை.  என்றாலும் தெய்வமே துணையென்று இருக்கிறேன் என்கிறரர்;                                                                
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து
ஓதிய வறிஞருக்கு ஏதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில்
குணம்பெரிது உடைய நல் லோரை
அடுத்திலேன் அடுத்ததற்கு ஆசையும் இல்லேன்
அவனிமேல் நல்லவன் எனப்பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன்று
இருக்கின்றேன் காத்தருள் எனையே
3352 -6-8 ஆன்மவிசாரத்து அழுங்கல்-10