Vallalar Universal Mission Trust   ramnad......
ஒன்றும் அலார் இரண்டும் அலார் ஒன்றிரண்டும் ஆனார்
ஆன்மீக வாழ்க்கயின்போது ஏற்படும் அனுபவ உணர்வுகளில் பல நிலைகள் உண்டு. அதில் நான்கு நிலைகள் குறிப்பிடத் தக்கன. அந்த நான்கு நிலைகள் நனவு, கனவு, துயில், துரியம், ஆகியவையாகும். நாலாவது நிலையாகிய துரியத்தில் தான் இன்புறுநில்லைக்குரிய தெய்வீக ஞானத்தைப்பெறுகிறார் வள்ளலார். இந்தத் தெய்வீக ஞான உணர்வு இன்புறு நிலை நெறியில் நடப்பவர்களுக்கு உரியதாகி நிலைபெறுகிறபோது அவர்கலுக்கு ஆன்மீக வாழ்வின் ஐந்தாவது நிலை உருவாகிறது. அதற்கு, துரியாதீதம் என்று பெயர். துரியாதீத நிலையில் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் பிரிக்க முடியாதபடி ஒன்றிற்குள் ஒன்றாக இணைந்து ஒரேபொருளாகி விடுகிறது.

துரியாதீத நிலையை அடைந்த வள்ளலாரும் அவ்வாறே இறைவனுடன் ஒன்றிவிடுகிறார். அவருக்கு இதுவரை கிட்டாத அருட்பெருஞ்ஜோதி தரிசனம் கிடைக்கிறது. உடனே அதை விளக்கி அருமையாகப் பாட ஆரம்பித்து விடுகிறார்.

ஒன்றும் அலார் இரண்டும் அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும் அலர் அருவும் அலார் உருஅருவும் ஆனார்
அன்றும் உளார் இன்றும் உளார் என்றும் உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அருட்பெரும்ஜோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங் கிடுவார்
யாவும் இலார் யாவும் உளார் யாவும் அலார் யாவும்
ஒன்றுதாம் ஆகி நின்றார் திருசிற்றம் பலத்தே
ஓங்குநின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்
3282 – 6-2-திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை-13
   ஜோதிவழியில் வள்ளலார்........