கடவுள்
- கடவுளின்வடிவம்யாது?
கடவுள் இயற்கை உண்மை வடிவினர்
- கடவுள் அண்டங்கள் முதலானவற்றை எதனால் தோற்றுவித்தார்?
தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோற்றுவித்தார்,
- கடவுளின் இயற்கை விளக்கம்-என்பது யாது?
கடவுள் தயவு அல்லது அருள் என்று கூறப்படும்.
- கடவுளின் இயற்கை விளக்கத்திற்கு இடமாக விளங்குவது எது?
ஜீவதேகங்கள் என்கிற ஆலயங்கலேயாகும்
- கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயம் ஆவது எவர்க்கு சாத்தியமாகும்?
ஜீவன் முத்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
- ஜீவன் முத்தர்கள் என்பவர் எவர்?
ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கத்தையும், கடவுள் இன்பத்தையும் பலகால் கண்டு, அனுபவித்துப் பூர்த்தி அடைந்த சாத்தியர்களே ஜீவன் முத்தர்களாவர்.
- அருள் என்பது யாது?
அருள் என்பது – கடவுள் தயவு அல்லது கடவுள் இயற்கை விளக்கம்.
Write a comment