ஜீவகாருண்யம் என்கிற மோட்ச் வீட்டுத் திறவுகோலைச் சம்பாதிக்காத விரதிகள், பக்தர்கள், இருடிகள் ஆகியோர்களின் நிலைகள் யாவை?
1. புண்ணிய பூமிகளை வலஞ் செய்தல்
2. புண்ணிய தீர்த்தங்ளில் ஆடல்
3. புண்ணிய தலங்களில் வசித்தல்
4. புண்ணிய மூர்த்திகளை தரிசித்தல்
5. தோத்திரஞ் செய்தல்
6/ ஜெபஞ் செய்தல்
7. விரதஞ் செய்தல்
8. யாகஞ் செய்தல்
9. பூஜை செய்தல்.
முதலியசரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும் , இருடிகளும், ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களால், மோட்சம் என்கிற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்தில்காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லாது கதவைத்திறந்து உள்ளே புகுந்து இன்பத்தைஅடைந்து வாழ மாட்டார்கள் என்று உண்மையாக அறிய வேண்டும்.
வடலூர் சிவகுருநாதன்....
Write a comment