Vallalar Universal Mission Orphange Homes
கடவுள்

கடவுள்

  1. கடவுளின்வடிவம்யாது?

கடவுள் இயற்கை உண்மை வடிவினர்


  1. கடவுள் அண்டங்கள் முதலானவற்றை எதனால் தோற்றுவித்தார்?

தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோற்றுவித்தார்,


  1. கடவுளின் இயற்கை விளக்கம்-என்பது யாது?

கடவுள் தயவு அல்லது அருள் என்று கூறப்படும்.


  1. கடவுளின் இயற்கை விளக்கத்திற்கு இடமாக விளங்குவது எது?

ஜீவதேகங்கள் என்கிற ஆலயங்கலேயாகும்

  1. கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயம் ஆவது எவர்க்கு சாத்தியமாகும்?

ஜீவன் முத்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.


  1. ஜீவன் முத்தர்கள் என்பவர் எவர்?

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கத்தையும், கடவுள் இன்பத்தையும் பலகால் கண்டு, அனுபவித்துப் பூர்த்தி அடைந்த சாத்தியர்களே ஜீவன் முத்தர்களாவர்.


  1. அருள் என்பது யாது?

அருள் என்பது – கடவுள் தயவு அல்லது கடவுள் இயற்கை விளக்கம்.