Vallalar Universal Mission Orphange Homes
அக்கச்சி -1

விளக்கம்) அக்கச்சி என்ற சொல் அக்கை, அக்கள் என்பதன் திரிபு ஆகும். ஒருத்தி தனக்கு இளையவளை தங்கை அல்லது தங்கச்சி என்று சொல்லுவதே போல், தன்னின் மூத்தவளை அக்கா, அக்கச்சி என்றல் வழக்கு, ஆன்மத் தலைவி அகவுரிமை கொண்டு எல்லோரையும் நோக்குகின்றால். தான் அறிந்து அடைந்த உண்மையைப் பிறரும் அறிந்து அடைய வேண்டுமென்று அவாவினால் எடுத்துக் கூறுகின்றாள் . முக்கியிமாக்த் தன்னிலும், உலகியல் வாழ்வில் மூத்து, புற அனுபவங்களில் உழன்று கொண்டிருக்கும் ஆன்மாக்களாகிய அக்கச்சிக்ளுக்கு என்றே உரைக்கின்றாள். இவர்கல் எளிதில் உண்மையை அறிந்து கொள்ளுவார்கள் என்பதும், இவர்களின் மூலமாகத் தங்கைமார்கள் பலரும் அறிந்து கொள்ளுவார்கள் என்பதும் கருத்தாம். அபக்குவத் தங்கைய்ர் மிகுதியாகப் புறத்தே புலன்களை விடுத்து அலைந்து கொண்டிருப்பார்கள் ஆதலின், அவர்களுக்கு, மேலான அருள் உண்மை எடுத்திசைத்தல் பயன்படாது என்பது கருதியே அவர்களை விடுத்து, பெரிய சகோதரிகளுக்கே உரைத்தனளாகக் கொள்ளலாம். (பொருள் விளக்கம்) " வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி " என்கின்றாள் ஆன்மத்தலைவி, சிதாகாசத்தில் அருட்ஜோதியைக் கான்கின்றாள் . அந்த அருட்ஜோதிக் காட்சியே மயில் நடனம் ஆக புனைந்துரைக்கப்படுகின்றது. ....தொடரும்