குருவே சிவம் ஆவது ------ உபதேசிக்க வரும் குருவின் உண்மை வடிவம் அந்த் உபதேசப் பொருள் வண்ணமாகவே இருக்கின்றது. அப்பொருள் பரம்பொருளாகிய சச்சிதானந்த பதியே ஆகும். இதனையே சிவம் என்று கூறப்படும். ஆகையால் குருவால்தான், அவர் வண்ணமாகிய கடவுளைக் காண வல்லவனாகின்றான் ஒரு மனிதன். இப்போது நம் வள்ளலுக்கு சிற்சபசரே அருட்குரரவாக எழுந்தருளி அகத்தினின்றே யாவையும் ஓதாது உணர்த்தி உபதேசித்து விட்டதை இப்பாடலில் காண்போம் , சுத்த சன்மார்க்கத்தின் மரபு அல்லது வாழும் முறைமை என்னவென்பதைத்தான் நன்கு எடுத்துக் கூறியுள்ளார். இதில் சாகாத கல்வி 1. ஒன்றே சிவம் அதுதான் என்று அறிகின்ற அறிவே தகும் அறிவு. 2. மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம். 3. வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளுமவிளைய விளைவித்த தொழிலே மெய்த்தொழில் 4. இந்நான்குமே சுத்த சன்மார்க்கம் மேற்கொண்டோருக்கு வகுத்து அளிக்கப்பட்ட வாழ்க்கை முறையாகும் இவைகளைச் சற்று விரிவாகக் காண்போம். 1. சாகாக் கல்வி - சாதாரணமாகக் கல்வி என்றால் அறிவு வ்ளக்கம் அடையப் பெறுதலாம். அகமறைந்து கிடக்கும் மெய்யறிவை வெளிப்படுத்திடப் பெறல் உண்மைக் கல்வி என்ப. நம் ஆன்மாவினுள் மறைந்து கிடக்கும் பேரருட் பெருஞ்சக்தியை வெளிப்படுத்தப் பெறுவதால் அது இவ்வுடலில் நிரம்பி இறப்பை நீக்கி விடுகின்றதாம். இதுவே, அருட் கல்வியின் பெரும்பயனாக உள்ளது . இதுவே சாகாக் கல்வி எனப்படுகின்றது. தொடரும்.... முறையீடு சுவாமி சரவணானந்தா.....
Write a comment