திருக்கதவம் திறத்தல்
திருக்கதவம் திறவாயோ
திரைகள் எல்லாம் தவிர்த்தே
திருவருளாம் ஒபெருஞ்ஜோதித்
திருவுருக்காட்டாயோ
உருக்கி அமு (து) ஊற்றெடுத்(து)என்
உடம்பு உயிர் ஓ(டு) உளமும்
ஒளிமயமே ஆக்குறமெய்
உணர்ச்சி அரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய்
நின்னை என்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றி என்றும்
களித்திடச் செய் யாயோ
செருக்கருத்தா தார்க்கருளும்
சித்திபுரத் தரசே
சித்த சிகா மணியே என்
திருநடநாயகனே
சுத்த சன்மார்க்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம் சத்தியஞான சபையிலே , நித்தியமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது நம் வள்ளல் பெருமான் கண்டு பெற்ற அனுபவமாகுக்ம், அதனையே இச்செய்யுளிலும் அணிபெறத் தொகுத்துக் காட்டியுள்ளார்….
Write a comment