உரோமதத்துவமும் பிந்துஸ்தானமும்
மனித தேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றியும் நெற்றி முதலாகிய இடங்களில் தோன்றாமலிருப்பதற்கு நியாயம்; இந்தத் தேகம் பாதாதி பிரமரந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். ஆதலால் அதனுடைய பிருதிவி காரியமே தேகவடிவம் , ஆதலால் வாயுவின் கூறு செம்மை. கருமயிர் பருதிவியின் கூறு. இந்த நியாயத்தால் தேகத்தில் செம்மையும் கருமையும் கூடிய உரோமம் உண்டாயிற்று. நரை தத்துவக் கெடுதியால் நேரிட்ட ஆபாச,.
இந்தத் தேகத்தில் 26 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்குகின்ற இடமாதலால் அவசியம் உரோமம் இருக்கும், மேற்படி இடங்களில் விபரம்.
1. புருவம், 2, கண்கீழ் இமை. 3. மேல் இமை 4. நாசிக்குட்புறம், 5. மீசை, 6. கன்னம், 7. காதுக்குட்புறம் 8. இருதயம், 9. கைம்மூலம், 10. உந்தியின் மேல்ரேகை 11. அடிவயிறு 12. லிங்கத்தடி 13. புட்டத்தின் கீழ்ப்புறம் 14. தொடை , 15. முழந்தாள் 16. பாதட்த்தின் மேலிடம்17. ஷ விரலின்மேலிடம் 18. முதுகு 19. 20,21, விலாப்புறம் 22, 23, முழங்கையின் கீழ் 24. கணுக்கைக்கு மேல் 25. கைவிரலின் மேற்புறம் 26. இந்த இடங்களில் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றுவது தத்துவ ஆபாசம். தத்துவங்களினது உட்புற மலங்களே வாயுவின் பிருதிவியாதலாலும், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரியமில்லாததினாலும் உரோமம் தோன்றுகின்றது.
அக்கினி காரியப்பட்ட இடங்களில் உரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகியிருக்கும் நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. அதனாலதற்குப் பிந்துஸ்தான மென்றும் , அறிவென்றும், பாலமென்றும் , முச்சுடரென்றும், கபாடஸ்தான மென்றும், சபாத்துவார மென்றும், மகம்மேரு வென்றும், புருவமத்திய மூலமென்றும், சிற்சபையென்றும் பெயராம். ஆதலால் ப்ந்துவென்பதே ஆன்மா. பிந்துவின் பீடம் அக்கினி, இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம். ஆதலால் உரோமம் அருகியிருக்கின்ற்து.
திரு அருட்பா - உரைநடைப்பகுதி. உபதேசக்குறிப்புகள்...