Vallalar Universal Mission Orphange Homes
வெந்நீர்

வெந்நீர்

சுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல் வெந்நீராதலால் எக்காலத்தும் சுத்த ஜலம் சேர்க்கக்கூடாது . பச்சை ஜலத்தினிடத்தில், மூன்று குணமுண்டு. விஷஜலம், பூத ஜலம். அமுதஜலம், இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கும். ஜலத்தின் மேல் பாகத்தில் விஷமாக்கிய சிலிர்ப்பும் , அதனடியில் கொஞ்சம், கடுகையுள்ள பூதமும்,அதனடியில் விசேஷம் கடுகையுள்ள அமுதமுமாக இருக்கும், பூதஜலம் தத்துவ விருத்தின்செய்யும், அமுத ஜலம், பிராணவாயுவை விருத்தி செய்யும், விஷஜலம் ஆபாச நீர்களாகப் பற்றும் ஆதலால் பச்சைஜலம் கொள்ளப்படாது. வெந்நீர் நேரிடாத பஷத்தில் சர்க்கரை நாயுருவி தென்னைவாலை முதலிய வஸ்த்துக்களை சம்பந்தப்படுத்தியாவது கொள்ள வேண்டும்.

திருஅருட்பா உரைநடை உபதேசப்பகுதி....