Vallalar Universal Mission Orphange Homes
கரிசலாங்கண்ணியும் தூதுவளையும்

கரிசலாங்கண்ணியும் தூதுவளையும்


கரிசாலையை தினே தினே பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதைநீடிக்கப்பண்ணும் . மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியம் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால் , தேகத் கெடுதியாகிய அசுத்தம் நீக்கி தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும் . மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கர்ருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல்வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தாசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்த நீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷிக்கும் . நேராத பக்ஷத்தில் பொற்றாலைக் கையாந்தகரை கூடும் மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும் , கவனசக்தி உண்டு;பண்ணுவதற்கும் கரணம் ஓய்வதற்கும் கபத்தை அரிப்பதற்கும் யோக்கியதையுடைய ஒஷதி தூதுவளை, அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசிகரமும் நேரிடும் உண்மை.


திரு அருட்பா உரைநடைப்பகுதி உபதேசக் குறிப்புகள்.....