Vallalar Universal Mission Orphange Homes
ஜீவர்களுக்க்ப் பசி அதிகரித்த காலத்தில்

ஜீவர்களுக்க்ப் பசி அதிகரித்த காலத்தில்

1. ஜீவ அறிவு விளக்கம் இல்லாமல் மயங்குகின்றகு

2, அறிவுக்கு அறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது

3. புருட தத்துவம் சோர்ந்து விடுகின்றது

4. பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது

5. குணங்கள் எல்லாம் பேதப்படுகின்றது

6. மனம் தடுமாறிச் சிதறுகின்றது

7. புத்தி கெடுகின்றது

8. சித்தம் கலங்குகின்றது

9. அகங்காரம் அழிகின்றது

10 . பிராணம்சுழல்கின்றது

11. பூதங்கள் எல்லாம் புழுங்குகின்றன

12. வாத, பித்த, சிலேட்டுமன்ங்கள் நிலைமாறுகின்றன

13. கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது

14. காது கும்மென்று செவிபடுகின்றது

15. நா உலர்ந்து வறளுகின்றது

16. நாசி குழைந்து அழல்கின்றது

17, தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது

18. கை, கால்கள் சோர்ந்து துவளுகின்ற்ன

19. வாக்கு தொனி மாறிக் குளறுகின்ற்து.

20. பற்கள் தளறுகின்றன

21. மல ஜல வழிகள் வெதும்புகின்றன

22. மேனி கருகுகின்றது.

23. ரோமம் வெறிக்கின்றது

24. நரம்புகள் குழைந்து நைகின்றன

25. நாடிகள் சுட்டுவிட்டுக் குழைகின்றன

26. இருதயம் வேகின்றது

27. எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன

28. மூளை சுருங்குகின்றது

29/ சுக்கிலம்வெதும்பி வற்றுகின்றது

30. ஈரல் கரைகின்றது

31. இரத்தமும் சலமும் சுவறுகின்றன

32.மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது

33. வயிறு பகீலென்று எரிகின்றது

34. தாபசோபங்கள் மேன் மேலும் உண்டாகின்றன

35. உயிரிழந்து விடுவதற்கு மிகவும் ச்மீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன் மேலும் தோன்றுகின்றன.


வடலூர் சிவகுருநாதன்