Vallalar Universal Mission Trust   ramnad......
ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுதல் ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதம் என்பது எப்படி?

ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுதல் ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதம் என்பது எப்படி?

1. எல்லா ஜீவர்களும் இயற்கை உண்மை ஏகதேசங்களாகிக் கடவ்வுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக்க இருக்கின்ற படியாலும் 2. கடவுள் இயற்கை விளக்கம்மறைபடும்போது ஜீவத்தன்மை இல்லாதபடியாலும் 3. கடவுள் இயற்கை விளக்கமும் ஜீவனியற்கை விளக்கமும் ஒன்றோடு ஒன்று மாறுபடாதாகலாலும், 4. கடவுள் இயற்கை விளக்கமும் ஜீவனியற்கை விளக்கமும் அந்தந்த தேகங்களிலும் விளங்குகின்றபடியாலும் 5. ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுதல் ஜீவ காருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதம் என்றே அறிய வேண்டும்.

வடலூர் சிவகுருநாதன்