ஒரு ஜீவனைக்கொன்று தின்னும் ஆகாரத்திற்கு தாமச ஆகாரம் என்று கூறுவதற்குக் காரணம் என்ன?
கடவுள் விளக்கம்ம் வெளிப்படாதபடி ஆன்ம விளக்கத்தை மறைத்த இம்சை ஆகாரமாதலால் தாமச ஆகாரமாயிற்று.
தாமச ஆகாரத்தால் வந்த திருப்தி இன்பமாகிய சந்தோஷ விளக்கம் எதனுடைய விளக்கம் என்று அறிய வேண்டும்.
தாமச ஆகாரத்தால் வந்த திருப்தி இன்பமாகிய சந்தோஷ விளக்கம் அனாதி பசுகரண மாயா விளக்கம் என்று அறிய வேண்டும்.
வடலூர் சிவக்குருநாதன்
Write a comment