ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுதல் ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதம் என்பது எப்படி?
- எல்லா ஜீவர்களும் இயற்கை உண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கிற படியாலும்.
- கடவுள் இயற்கை விளக்கம் மறைபடும்போது ஜீவத்தன்மை இல்லாதபடியாலும்
- கடவுள் இயற்கை விளக்கமும், ஜீவனியற்கை விளக்கமும், ஒன்றோடு ஒன்று மாறுபடாதாகலாலும்,
- கடவுள் இயற்கை விளக்கமும் ஜீவனியற்கை விளக்கமும் அந்தந்த தேகங்களிலும் விளங்குகின்றபடியாலும்
- ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றுரு ஜீவனுக்குப் பசியாற்றுதல் ஜீவ காருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதம் என்றே அறிய வேண்டும்.
Write a comment