Vallalar Universal Mission Trust   ramnad......
கருணை என்னும் தயவுதான் ஏறாநிலைமிசை ஏற்றிடும் சாதனம்

-பேருபதேசம் – வள்ளலார்


14. கருணை என்னும்

தயவுதான்

ஏறாநிலைமிசை ஏற்றிடும் சாதனம்


15. அந்த தயவுக்கு

ஒருமை வரவேண்டும்

அந்த ஒருமை இருந்தால்தான்

தயவு வரும்

தயவு வந்தால்தான்

பெரிய நிலைமேல் ஏறலாம்.


16. இப்போது என்னுடைய அறிவு

அண்டாண்டங்களூக்கு அப்பாலும்

கடந்திருக்கிறது. அது அந்த

ஒருமையினால் வந்தது.


நீங்களும் என்னைப்போல்

ஒருமையுடன் இருங்கள்


17. உலகத்தில் இருக்கிற

எல்லா மக்களுக்காகவும்

ஆண்டவரை நினைத்துப்

பிரார்த்தனை செய்யவேண்டும்

ஏன் அப்படி ஆண்டவரிடத்தில்

விண்ணப்பித்துக்கொள்ளவேண்டும்

என்றால் எல்லாரும்

சகோதரர்கள் ஆதலாலும்

இயற்கை உண்மை ஏகதேசங்கள்

ஆதலாலும் அங்ஙனம் ஆன்ம நேய

ஒருமைப்பாட்டுரிமை வைத்துக்

கொண்டிருக்கவேண்டும்.


பேருபதேசம்….தொடரும்..

வள்ளலார்….