Vallalar Universal Mission Orphange Homes
பேருபதேசம் - வள்ளலார்

பேருபதேசம்


5. அந்தப் பசுமை வர்ணம்

எப்படிப்பட்டதென்றால்,

கருமைக்கு

முதல் வர்ணமான

பசுமையாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட

அழுத்தமான திரை

நீங்கவேண்டும் என்று

தோத்தரிக்க வேண்டும்

இறைவனை நினைக்கவேண்டும்


6. இவ்வண்ணமாக இருக்கின்ற போதும்,

படுக்கின்றபோதும்

இடைவிடாது இவ்விசாரத்தோடு

ஆண்டவர்

நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும்

என்கின்ற முயற்சியுடன் இருந்தால்

தெரியவேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.


7. நீரில் இருக்கின்ற

பாசியை நீக்குவது போல்,

நமது ஆன்ம அறிவைத்

தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற

பச்சைத் திரையாகிய

விசார அதி உஷ்ணத்தினால் அல்லது

மற்றா உஷ்ணங்களால்

நீக்கமுடியாது

அந்த உஷ்ணம்

யோகியினுடைய அனுபவத்தில் தெரியும்..



பேருபதேசம் தொடரும்…….